தலைப்பு

வியாழன், 6 பிப்ரவரி, 2020

ஓர் ஏழையின் கண்பார்வை காக்கப்பட்டது!

டாக்டர் உபாத்யாய் அவர்களின் சாயி அனுபவங்கள்

டாக்டர் உபாத்யாய் 1968-ல் டாக்டர் ஆனார். 1974-ல் கண் சிகிச்சை நிபுணர் ஆனார். அவரது பணி UKயில் மூன்று இடங்களில் நடைபெற்று வந்தது அதாவது நேஷனல் ஹெல்த் சர்வீஸ், அரசாங்க ஆஸ்பத்திரி, மற்றும் ஹார்லே தெருவில் என மூன்று இடங்களில் நடந்து வந்தது. ஆனால் அவருடைய பணி இலவச மருத்துவ முகாம்களில் மிகவும் பிரசித்தி பெற்று இருந்தது. ஆப்பிரிக்கா, ரஷ்யா, இந்தியா, ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் என பல நாடுகளில் இருந்தும் தன்னார்வலர்கள் மிகுந்த கடமை உணர்ச்சியோடு உதவிபுரிய மிக சிறப்பாக மருத்துவமுகாம் செயல்பட்டது. 

அந்த டாக்டர் சுவாமியின் வழிகாட்டுதலோடும், அருளோடும் வைத்தியம் செய்து வந்தார். சுவாமி அந்த டாக்டரிடம் உனது தாய், தந்தை, சகோதர, சகோதரி, இவர்களுக்கெல்லாம் எந்த மாதிரியான  மருத்துவம் செய்ய விரும்புவாயோ அதையே அனைவருக்கும் செய். மேலும் மருத்துவ முகாமில் காலாவதியான மருந்துகளை வைத்து வைத்தியம் செய்யாதே என்று கூறுவார். டாக்டரோ சுவாமி நான் தங்கள் கருவியாக மட்டும் இருந்து செயல்பட்டு நோயாளிகளை காக்க அருளுங்கள் என்று பிரார்த்திப்பார். இப்படி இருக்கையில் இங்கிலாந்தில் ஒரு முறை யாரோ ஒருவர் ஒரு மருத்துவமனையில் கண் சிகிச்சை செய்யப்பட்டு பார்வை இழந்து விட்டார். அவர் உபாத்யாய் சிகிச்சை முகாம் பற்றி கேள்விப்பட்டு தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் டாக்டர் உபாத்யாய் வெளிநாடுகளுக்கு சென்று இருந்ததால் தொடர்பு கொள்ள இயலவில்லை. அந்த நபரோ டாக்டர் வேண்டுமென்றே தன்னை தவிர்க்கிறார் என்று தவறாக நினைத்து டாக்டரின் மனைவிக்கு போன் செய்து டாக்டர் எனக்கு வைத்தியம் செய்யாவிடில் தான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றார். கடைசியில் ஒரு வழியாக டாக்டரை அம்மனிதர் சந்தித்து விட்டார் அவர் தெளிவாக கூறி விட்டார் டாக்டர் வைத்தியம் செய்து தன்னை குணப்படுத்தாவிட்டால் என்னால் வாழவே முடியாது எனது நண்பர்களும் என்னை கைவிட்டுவிட்ட நிலையில் தங்களைத் தவிர வேறு வழியில்லை என்றார். டாக்டருக்கு சங்கடமாக விட்டது. அவரிடம் டாக்டர் கூறினார், தன் முடிந்த அளவு கண் சிகிச்சை அளிப்பதாகவும் உடனடியாக பலனை எதிர்பார்க்க முடியாது என்றும் கூறி சிகிச்சையும் செய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு, சுவாமி இந்த நிலையில் என்னை வைத்து விட்டீர்களே இந்த நபர் தன் உயிரை மாய்த்துக் கொள்ளாத வகையில் அவருக்கு குணம் ஆக்குங்கள் என சுவாமியை பிரார்த்தித்தார். 

மறுவாரம் மீண்டும் பரிசோதனைக்கு அந்த நபர் வந்தபோது ஆச்சரியப்படத்தக்க வகையில் அவருக்கு அமைந்திருந்தது அவருக்கு நன்றாக குணமாகி கண் பார்வை தெரிய ஆரம்பித்துவிட்டது. அவரின் மறு கண்ணுக்கும் சிகிச்சை செய்ய சொன்னார். அந்த கண் மிகவும் பாதிப்படைந்து இருந்தது ஆனால் அந்த கண்ணுக்கும் சிகிச்சையளிக்க பார்வை கிடைத்தது. முந்தைய கண்ணை போல் இல்லாவிடிலும் ஓரளவு இந்த கண்ணிற்கும் பார்வை கிடைத்தது பகவானின் அருள் தான். பிறகு இரண்டுக்குமே நல்ல பார்வை கிடைத்து வேலையும் கிடைத்து கார் ஓட்ட ஆரம்பித்து விட்டார் அந்த நபர்.

ஆதாரம்: S.K Upadhay, Inspired Medicine, p215, p216
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக