தலைப்பு

திங்கள், 24 பிப்ரவரி, 2020

புரொபஸர் அனந்தராமனுக்கு அளித்த வாக்குறுதியை பாபா நிறைவேற்றுகிறார்!


புரொபஸர் A. அனந்தராமன் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்துள்ளார். தற்போது, ​​அவர் புட்டபர்த்தியில் உள்ள சுவாமியின்  வணிக மேலாண்மை கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். மேலும் அவர் கூடுதலாக ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் ஊடக ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுகிறார். 

20 வருடங்கள் வெளிநாட்டில் வசித்து விட்டு, புரொபஸர் அனந்தராமன் சில வருடங்களுக்கு முன் தான் இந்தியா திரும்பினார். சத்யசாய் மேல்நிலை கல்வி நிறுவனத்தில் முழுநேர புரொபஸர் ஆக பணியாற்ற வந்துள்ளார்.(Business Management). பல வருடங்கள் வெளிநாட்டில் வசித்து விட்டு வந்ததால், இந்த சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ள சில பிரச்சனைகள் ஏற்பட்டன. எனவே தனக்கு தொடர்ந்து அருள் புரிந்து கொண்டு இருக்குமாறு சுவாமியை வேண்டினார். சுவாமி புன்முறுவலுடன் 'சரி' என்றார். ஆனால் அதில் திருப்தி அடையாத அனந்தராமன், மீண்டும் சுவாமியை நச்சரிக்கும் பாவனையில், தன் குடும்பத்தினரை கவனித்துக்கொள்ள மனைவிக்கும் சிரமமாக இருப்பதைத் தெரிவித்தார். சுவாமி சற்று எரிச்சலுடன் கன்னடத்தில் "நான் நோடு கொத்தினி"- (நான் பார்த்துக் கொள்கிறேன், பார்த்துக் கொள்கிறேன், பார்த்துக் கொள்கிறேன்) என்று கூறினார்.

சுவாமி தனது வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை, பின்வரும் நிகழ்ச்சி வெளிப்படுத்தும்!

பெங்களூரில் இருந்து இரண்டு வருடங்கள் முன்பு தான் திரும்பிய புட்டபர்த்தியில் மறுநாள் வகுப்பு எடுக்க வந்துள்ளார். ரயிலில் வந்து கொண்டிருக்கும் பொழுதே, அவருடைய மனைவி கடுமையான சுவாசப் பிரச்சனையில் அவஸ்தைப்பட்டு, ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருப்பதாக, போன் வந்தது. அவர் மீண்டும் பெங்களூர் சென்று பார்த்தால், ஒரு தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், மிக கவலைக்கிடமாக இருந்தாள். பரிசோதனையில் 2 இடத்தில் அடைப்பு இருப்பதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர்.

ஆனால் சுவாமியின் ஒப்புதலின்றி அறுவைசிகிச்சை நடக்காது என்றார். மனைவியை ஒயிட்பீல்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அனந்தராமன் ப்ரசாந்தி நிலையம் திரும்பி, சுவாமியின் ஒப்புதலுக்கும், ஆசிக்கும் காத்திருந்தார். மதியான தரிசனத்தின்போது, சுவாமியுடன் பேசி, விவரம் தெரிவித்தார். ஸ்வாமி அவரைப் பார்த்து புன்னகைத்தார். ஒப்புதலும் அளித்தார்.

அனந்தராமன் சற்று குழம்பி விட்டார்.

மறுநாள் அவர் மனைவி ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் வெளியே பரபரப்புடன் இருந்தார். ஒரு மணி நேரம் கழிந்த பிறகு, டாக்டர் இவரை அழைத்து எந்த அடைப்பும் இல்லை என்றும், வீட்டிற்கு செல்லலாம் என்றும், கூறினார்! அனந்தராமன் இசிஜி ரிப்போர்ட், ஆஞ்சியோகிராம் ரிப்போர்ட், இவற்றை எடுத்துக்கொண்டு தங்கள் குடும்ப மருத்துவரிடம் சென்று காட்டினார். அவர்தான் முதலில் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதாக கூறினார். அவர் சொன்னார், "அது அவருடைய ரிப்போர்ட் ஆக இருந்திருக்க முடியாது, வேறு யாருடையதாவதாக இருந்திருக்கலாம்" என்றார். இப்பொழுது அனந்தராமன், சுவாமியின் வித்தியாசமான புன்னகைக்கும், மும்முறை வாக்குறுதி கொடுத்ததற்கும், அர்த்தம் புரிந்து கொண்டார்.

ஆதாரம்: Premanjali, Chapter 46, P221, P222

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக