1. Those who are devoted to me in thought word and deed shall receive my protection without their asking.
எண்ணத்தாலும் வார்த்தையாலும் செயலாலும் பக்தியுடன் இருக்கின்ற ஒருவன், கேட்காமலேயே என் பாதுகாப்பை பெறுவான்!
2. I am ever vigilant in the homes of my devotees.
என் பக்தர்களின் இல்லங்களில், நான் எப்போதும் விழிப்போடு இருக்கிறேன்.
3. Those that have called my name with sincerity even once shall receive the abundant grace of my love.
ஒருவன் என் நாமத்தை சிரத்தையோடு ஒரே ஒருமுறை கூப்பிட்டாலும், அவன் என் அபரிதமான கருணையை, அன்பை பெறுவான்!
4. The moment you think of me, I am by your side to guide you through your confusions.
எந்த நொடியில் என்னை நீங்கள் நினைக்கின்றீர்களா, அந்த நொடியிலேயே நான் உங்கள் அருகில் இருந்து, குழப்பங்களிலிருந்து வழி காட்டுகிறேன்!
5. I always respond to a prayer instantaneously.
எப்போதும் உங்கள் பிரார்த்தனைகளுக்கு நான், உடனே செவிசாய்க்கிறேன்.
6. When you do not receive what you want, know that I have responded that way for your own welfare.
நீங்கள் கேட்டது கிடைக்காதபோது, உங்கள் பிரார்த்தனைக்கு, நான் உங்கள் நலன் கருதி, அவ்வாறாக "செவிசாய்த்து இருக்கிறேன்" என்று புரிந்து கொள்ளுங்கள்!
7. I stay by you even if you turn away from me.
நீங்கள் என்னை விட்டு விலக முற்பட்டாலும், நான் உங்களுடனேயே இருக்கிறேன்!
8. I am always looking at you from the eyes of my heart.
நான் உங்களை எப்போதும், இதயக் கண்களாலேயே பார்க்கின்றேன்!
9. I will destroy the negativity in you with my love for you.
உங்கள் மீது கொண்டிருக்கின்ற அன்பால், உங்களிடம் இருக்கின்ற எதிர்வினைகளை நான் அழிக்கிறேன்!
10. I pretend to ignore you only for you to turn towards the right way.
நீங்கள் நல்ல பாதையை நாட வேண்டும் என்பதற்காக, நான் உங்களை உதாசீனம் செய்வது போல நடிக்கின்றேன்!
11. I will never get angry with you but I deal firmly with your mundane affairs.
உங்களிடம் நான் எப்போதும் கோபம் கொள்வதில்லை; அதேநேரம், உங்கள் அற்பமான செயல்களை, உறுதியாகக் கையாள்கிறேன்!
12. I alone stand and carry the burden of your worries and tears.
உங்கள் கண்ணீரையும் கவலைகளையும் நான் ஒருவனே சுமக்கிறேன்!
13. Whenever you experience fear in conducting a task, it is because you denied me and your own truth.
நீங்கள் ஒரு காரியத்தை செய்யும் பொழுது பயத்தை எதிர்கொண்டால், அதற்குக் காரணம், நீங்கள் என்னிடம், உங்களைப் பற்றிய உண்மையை, மறைத்தது தான்!
14. Give up your desires; then all your tasks and duties become mine.
எப்போது உங்கள் ஆசைகளைத் துறக்கிறீர்களோ, அப்போது, உங்கள் கடமைகளும் செய்யவேண்டிய செயல்களும், என்னுடைய தாகி விடுகிறது!
15. I have sent you to fight this battle of life in my chariot, with my horses, and with me as your charioteer.
என்னுடைய ரதத்தில், என்னுடைய குதிரைகளைப் பூட்டி, என்னை தேரோட்டி ஆக்கிக்கொண்டு, உங்களை வாழ்க்கை என்னும் போரை எதிர்கொள்ள பணித்திருக்கிறேன்!
16. Your devotion is my breath, my only food.
உங்கள் பக்தியே என் சுவாசமும் உணவும் ஆகும்!
17. I will never give up on you; you are mine even when you are unaware of it.
நீங்கள் அறியாத போதும் நீங்கள் என்னுடையவர். எப்போதும் நான் உங்களை கைவிட மாட்டேன்!
18. You do not need to search for truth…you are the truth. My light alone shall make you see that and I will grace you with that.
உண்மையை நீங்கள் எங்கும் தேட வேண்டாம் என்னுடைய ஆன்ம ஒளியே அதே உங்களுக்கு அளிக்கும். அந்தக் கருணையை நான் அளிப்பேன்!
19. Nothing is difficult, nothing is painful, nothing is unbearable…why, it is me who has to face your misery, you are only to remember to call me.
எதுவும் கடினமில்லை; எதுவும் வேதனை இல்லை; எதுவும் தாங்க முடியாதது இல்லை; ஏன்? நீங்கள் என்னை கூப்பிட்டால் போதும்! இத்தனையும் நான் தாங்கிக் கொள்கிறேன்!
20. I am always happy for you in whatever you choose, for I know that in whatever you do, I will be there to protect you from all evil.
உங்களிடம் நான் எப்போதும் ஆனந்தமாய் இருக்கிறேன் நீங்கள் எதை தேர்ந்தெடுத்த போதிலும்! நீங்கள் எது செய்தாலும் தீயவற்றிலிருந்து காப்பாற்ற நான் இருக்கின்றேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக