தலைப்பு

புதன், 12 பிப்ரவரி, 2020

வெங்கடரமணப்பாவின் வீட்டில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது!


ஒருநாள் வெங்கடரமணப்பாவின் மொத்த குடும்பமும் உறங்கிக் கொண்டிருந்தது. அவர்களுடைய சிறு குழந்தை விழித்து எழுந்து சிறியதான, எரிந்துகொண்டிருந்த கெரசின் விளக்கின் அருகில் சென்றது.

எதுவும் அறியாத அந்தக் குழந்தை விளக்கை கவிழ்த்து விட்டது. படுக்கை விரிப்பும், ரமணப்பாவின் மனைவியின் சேலையும், தீப்பற்றி விட்டது. அந்த அம்மாள் சூட்டை உணர்ந்து பதறி எழுந்தார். அவள் ஏதாவது செய்வதற்குமுன், யாரோ ஒரு மனிதர் துணியில் பிடித்த நெருப்பை தன் கைகளால் கசக்கி அணைய வைத்துக் கொண்டிருந்தார். இதற்கிடையே வெங்கடரமணப்பாவும் எழுந்துவிட்டார். மறுநாள் சென்று பாபாவிடம் நடந்ததை கூறியதும் "நான்தான் வந்து நெருப்பை அணைத்தேன்" என்றார்.!!!

ஆதாரம்: R. Balapattabi, Neutrine Leelas of Bhagawan Sri Sathya Sai Baba Page 14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக