"செல்வத்தை ஈட்டுவது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி மனித முயற்சிகளில் நியாயமான ஒன்றே. ஒவ்வொரு மனித வாழ்கையின் நான்கு குறிக்கோள்களில் (புருஷார்த்தங்கள்) அதுவும் ஒன்றே-தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கே அவைகள்.
அவை சொல்லப்பட்டுள்ள வரிசைக்கும் ஒரு நோக்கம் உள்ளது. தர்மமே, செல்வத்தை ஈட்டும் முறையை வழிநடத்தி கட்டுப்படுத்த வேண்டும்; மோக்ஷம் அடைவதே ஒருவரது ஆசைகளின் (காமம்) முறைபடுதும் அம்சமாக இருத்தல் வேண்டும். அதர்மமான முறையில் சேரும் அனைத்து செல்வமும், தகாதவை என வெறுத்து ஒதுக்கப் படவேண்டும். தலை சிறந்த தேவையான மோக்ஷத்திற்கு உதவாத அனைத்து ஆசைகளும் ஒருவரது கண்ணியத்திற்கு குறைவானவை என விட்டு விடப் படவேண்டும். எனவே செல்வத்தை ஈட்டுவது (அர்த்தம்) மற்றும் ஆசைகளை பூர்த்தி செய்வது (காமம்) என்ற இரண்டின் ஆன்மீக வேர், தர்மம் மற்றும் மோக்ஷமாக இருக்க வேண்டும்."
- பகவான் பாபா, 14.07.1966)
(புட்டப்பர்த்தியில் புதிய SBI வங்கி கிளை துவாக்கவிழாவில் ஆற்றிய உரை)
இந்த உரையை முழுமையாக படிக்க:
http://www.sssbpt.info/ssspeaks/volume06/sss06-19.pdf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக