தலைப்பு

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

லிங்கோத்பவம் உருவான பின்னணி!


பாபா எனும் பரமேஸ்வரரின் லிங்கோத்பவம் இன்றளவிலும் அதை நாம் காணொளியில் கண்டால் கூட ஆன்மா சுத்தப்படுகிறது.. உள்ளுணர்வு புனிதப்படுகிறது... பிரபஞ்சத்தின் சூட்சும ரகசிய வடிவமான பாபா அருள்கிற லிங்கோத்பவத்தின் நதிமூலம் பரவச சம்பவமாக இதோ...

பாத மந்திரத்தின் (Old Mandir) அடிக்கல்நாட்டு விழாவின் போது (1945), ஒரு விசித்திரமான நிகழ்ச்சி நடந்தது. ஸ்வாமி சுட்டிக்காட்டிய குறிப்பிட்ட இடத்தில் 'கூனி வெங்கட்' எனும் வேலையாள், அடிக்கல்லை பதிப்பதற்காக தோண்டிய போது,  சிவ லிங்கங்களை வைப்பதற்கு பயன்படும் பல பீடங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் சிவ லிங்கம் எதுவும் அங்கு காணப்படவில்லை. தோண்டும் போது டஜன் கணக்கில் பல பீடங்கள் காணப்பட்டன. ஆனால் ஒரு சிவ லிங்கம் கூட காணப் படவில்லை.
பக்தர்கள் ஸ்வாமியை சுற்றி நின்று இதற்கான விடை கேட்டனர். ஸ்வாமி தனது வயிற்றைக் காண்பித்து, *"லிங்கங்கள் இங்கே உள்ளன!"* என்றார். 
பிற்காலங்களில் ஒவ்வொரு சிவராத்திரியின் போதும், தனது வயிற்றில் இருந்து லிங்கங்களை உத்பவம் செய்தார்...

ஓம் நாமோ சாயி சிவாய!! 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக