திரு.அரவிந்த்பாய் படேலும், அவருடைய மனைவி பார்த்தி பென்னும் பேட்டர்சீ (லண்டன்) என்னும் நகரத்தில் தபால்துறை வியாபாரம் ஒன்றை நடத்தி வந்தார்கள்.
ஒருநாள் ஆயுதம் ஏந்திய 5 மனிதர்கள் பணம் பட்டுவாடா அறையில் உள்ள பணத்தையும், பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ள பொருட்களையும் திருடுவதற்காக வந்தனர். திரு.படேல் உடனடியாக காவல் நிலையத்தோடு தொடர்பு ஏற்படுத்த வேண்டி அபாய ஒலியை அனுப்பும் பொத்தானை காலால் மிதித்தார். ஒரு திருடன் பார்த்தி பென்னை நோக்கி சுட்டான். குண்டு பார்த்தி பென்னின் கீழ் தாடைக்கு கீழே பாய்ந்தது. பார்த்தி பென் உடம்பிலிருந்து அதிகமாக ரத்தம் கசிந்தது. அவர் "சாய்ராம் சாய்ராம்" என்று உரக்கக் கூறினார். இரண்டாவது முறையும் இவர் மீது சுடப்பட்டது. குண்டு பார்த்தி பென்னின் தாடையில் பட்டு கீழே விழுந்தது. அந்த குண்டு காவல் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட முடியவில்லை. அதிக ரத்தக் கசிவானதால் பார்த்தி பென் சுயநினைவை இழந்து கீழே விழுந்தார். காவல் அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து திருடர்களை கைது செய்தார்கள். அந்த திருடர்களுக்கு 9 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்தது.
மருத்துவ ஊர்தி மூலம் பார்த்தி பென் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவரது முகத்தில் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அவர் குணமடைந்த பிறகு அவருடைய தாலையில் குண்டு பாய்ந்ததற்கான தழும்புகள் ஏதும் இல்லை.
பார்த்தி பென் இறைவன் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். எப்போதும் ஸ்வாமியை நினைத்துக் கொண்டிருந்தார். பாபா தன் உயிரை காப்பாற்றியதற்கு நன்றியாக ஒரு ஹோமம் ஒன்றை ஏற்பாடு செய்வதாக அவர் என்னிடம் கூறினார். நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன். ஹோமம் நடப்பதற்கு விரைவாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஹோமம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு பரமாற்புதம் நடைபெற்றது. அன்பிற்குரிய ஸ்வாமி தன் உண்மையான உருவில் அங்கு தோன்றினார். என்னால் அவரைப் பார்க்க முடிந்தது. விபூதியை எங்கும் தெளித்த பின்னர் அவர் மறைந்தார். தெய்வீக விபூதி அனைவரின் தலையிலும் இருந்தது. மேல் மாடியில் இருந்த சந்நிதியில் சில புகைப்படங்கள் மீதும் விபூதி இருந்தது. அன்பிற்குரிய ஸ்வாமி கால நேரத்திற்கு உட்பட்டவர் அல்ல. நீங்கள் ஒரு மந்திரத்தை தொடர்ந்து கூறி வந்தாலும், அசைக்கமுடியாத பக்தியைச் செலுத்தினாலும் அன்பிற்குரிய ஸ்வாமி தன் கருணையை எங்கும், எப்போதும் பொழிவார்.
சில மாதங்கள் கழித்து பார்த்தி பென் எங்களோடு பிரசாந்தி நிலையம் வந்திருந்தார். அன்பிற்குரிய ஸ்வாமி எங்களுக்கு நேர்காணல் கொடுத்தார். பின்னால் அமர்ந்திருந்த பார்த்தி பென் "எனது உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றியை ஸ்வாமிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பாபாவிடம் கூறினார். அதற்கு பாபா "ஆம், ஒரு குண்டு உனக்கு உள்ளே பாய்ந்தது. மற்றொரு குண்டு உன் மீது பட்டுக் கீழே விழுந்தது. அப்படித்தானே?" என்று கேட்டார். இதைக் கேட்ட பார்த்தி பென்னின் கண்கள் குளமாயின. இந்தச் சம்பவம் பாபா சர்வ ஸ்வதந்திரம் படைத்தவர் என்றும்,சர்வக்ஞன் என்பதையும் நிரூபித்தது.
பர்மிங்ஹாமைச் சேர்ந்த ஜெய் மனோகர் என்ற பஞ்சாபி அன்பரும் எங்களோடு இருந்தார். அவர் ஸ்வாமியிடம் "என்னுடைய உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றியைக் கூறுகிறேன்" என்று கூறினார். அதற்கு அன்பிற்குரிய பாபா, "நீ வண்டி ஓட்டும்போது உறங்கிவிட்டால், ஸ்வாமி என்னதான் செய்ய முடியும்" என்று கூறினார். இதைக் கேட்ட பஞ்சாபி நபரின் கண்களும் குளமாயின.
அந்த பஞ்சாபி நபர் பின்னர் என்ன நடந்ததென்பதை விளக்கினார். இங்கிலாந்தில் எம்_6 மோட்டார் சாலையில் சீருந்து ஓட்டு கொட்டிக் கொண்டிருந்த போது, உறங்கிவிட்டார். பாதையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடை கற்களுக்கு அருகே உள்ள மின்கம்பத்தில் அவருடைய சீருந்து மோதவிருந்தது. அப்போது விழித்த அவர் "ஸ்வாமி ஸ்வாமி" என்று சத்தமிட்டார். அவர் ஆச்சரியப்படும்படி கண்ணிமைக்கும் நேரத்தில் அவருடைய சீருந்து பத்திரமான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
அன்பிற்குரிய ஸ்வாமியின் உரை:
"பாபா ஒரு மின் தொடர்பு விசை இயக்கி.இந்த விசை இயக்கியைத் தட்டிவிட்டால் அனைத்தும் தானாகவே நடக்கும். சீருந்து சாவியினை நாம் இயக்கும்போது சீருந்தின் அனைத்து பாகங்களும் தானாகவே இயங்கும். அதைப் போலவே இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒழுங்குபடுத்தப்படும். நீங்கள் அற்புதம் என்று கூறுவதெல்லாம் அற்புதம் அல்ல. மேலும் அவை தெய்வீகத்தை நிரூபிக்காது. அனைத்து உலகங்களிலும் பாபாவின் முடிவற்ற பணி எளிமையானது, கடினமானது அல்ல, மற்றும் மகிழ்ச்சியுடன் செய்கிறார். இதுவே அவருடைய அற்புதம்.
சாய் சக்திக்கு எல்லை கிடையாது. தடை ஏற்படாது. எதிர்ப்பும் கிடையாது. நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ!சாய் சக்தி பூமியை வானமாகவும், வானத்தை பூமியாகவும் மாற்றும். ஆனால் அத்தகைய மாற்றத்திற்கான பிரார்த்தனையுடன் கூடிய அழைப்பு வேண்டும். எனது முக்கியத்துவம் வாய்ந்த சக்தி எதுவென்றால் பிரேமையும் (அன்பு) மனவலிமையுமே ஆகும். அற்புதங்கள் என்பது எனது அன்பின் அடையாளம் மட்டுமல்ல, அவை நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கை என்னும் விதையை நட்டு, மனிதத்தன்மையைப் போற்றி, அதை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வதே ஆகும்".
கடவுளின் லீலைகளை நாம் விவரிக்க இயலாது. அவரது தயைக்கும், தண்ணளிக்கும், எல்லையேதும் கிடையாது.
ஆதாரம்: சாய் ஸ்மரணம், ஆசிரியர்:மருத்துவர்.தி.ஜ.காடியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக