அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய் - பாபா
பிரசாந்தி நிலையத்தில் அகண்ட பஜன் வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறுகிறது. ஒன்று, பகவானின் பிறந்த தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நவம்பர் மாதம் 2வது சனிக்கிழமை மற்றும் ஞாயிருக்கிழமையில் தொடர்ந்து 24 மணி நேரம், சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிருக்கிழமை மாலை 6 மணி வரை நடக்கும்.
இரண்டாவது, சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 12 மணி நேரம் நடைபெறும்.
இதில் கலந்து கொள்ள உலகெங்கும் இருந்து சாயி பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்வர்.
பஜனின் ஆனந்தம், அதன் அதிர்வுகள் பிரசாந்தி நிலையத்தில் இருந்து கிளம்பி அகில உலகெங்கும் நிறையும்.
அகண்ட பஜனின் நிறைவில், அதில் கலந்து கொண்ட அனைவர்க்கும் நாவிற்கு இனிய அற்புதமான பிரசாதம் வழங்கப்படும்.
முழங்கை வழியாக நெய் வடியும் அளவிற்கு தூய நெய்யில் செய்யப்பட்ட சர்க்கரை பொங்கல் மற்றும் கமகமக்கும் புளியோதரை என இரண்டு வகையான பிரசாதம்.
அனைவரும் அகண்ட பஜனில் திளைத்திருக்கும் சமயத்தில், இந்த பிரசாதங்களை பிரசாந்தி நிலைய உணவக அடுபறையில், சாயி கல்லூரி மாணவர்கள் சிலரும், சாயி இளைஞர்கள் மற்றும் சேவாதள தொண்டர்களும் இணைந்து தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருப்பர்.
குல்வந்த் மண்டபத்தில் நாம சங்கீர்த்தனம் அகண்டமாக நடக்கும் நேரத்தில் இங்கே சமையல் வேலை அகண்டமாக நடைபெற்று கொண்டிருக்கும்.
வாருங்கள், அகண்ட சேவையை காணொளியாக காணலாம்..
Video Courtesy: RadioSai Team
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக