தலைப்பு

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

பத்மஸ்ரீ டாக்டர். ஷோபா ராஜு அவர்களின் சாயி அனுபவங்கள்!


ஷோபா ராஜு ஒரு இந்திய இசைக்கலைஞர்; மேலும் அவர் ஒரு எழுத்தாளர், இசையமைப்பாளர் மற்றும் பக்திப்பாடல்கள்  பாடும் கலைஞராகவும் திகழ்ந்தார். மேலும் அவர் 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த இசையமைப்பாளராக விளங்கிய துறவி அன்னமாச்சாரியாவின், நற்செய்தி பரப்பும் சங்கீர்த்தனைகளின் மீது அளவுகடந்த பற்று கொண்டவராக அறியப்பட்டார். கலைத்துறையில் அவரது பங்களிப்புக்கு கௌரவம் செய்யும் விதமாக, 2010ம் வருடம், இந்திய அரசு பத்மஸ்ரீ விருது  வழங்கியது. அவர் 1983ம் வருடம் 'அன்னமாச்சாரியா பாவன வாஹினி'(ABV)யைத் தொடங்கினார். அதன் குறிக்கோள்,"எண்ண மாசுகளை தெய்வீக இசையின் மூலம் முற்றிலும் அழிப்பது" என்பது ஆகும்.

பக்தன் எங்ஙனம் தன்னை உருவகப்படுத்துகிறானோ, அவ்வாறே இறைவன் காட்சி தருகிறார்!!

பத்மஸ்ரீ டாக்டர். ஷோபா ராஜு கூறுகிறார்:
                                  
நான் சுவாமியின் மேல் ஒரு இசை ஆல்பம்  தயாரித்திருந்தேன்; இருப்பினும் எனக்குள், "சுவாமி கடவுளா அல்லது யோகசக்தி நிறைந்த மனிதரா அல்லது தன்னை உணர்ந்த ஒரு ஆத்மாவா" என பலவித ஐயங்கள் இருந்தன.
'சாய்ராம்' என்று குறிப்பிடுவதில் எனக்கு தயக்கம் இருக்கவில்லை;எனினும் நான் அப்பெயரை சிந்திப்பதில் ஆர்வம் காட்டவில்லை. நான் வெங்கடேசப் பெருமாளையே எனது கடவுளாகப் பாவித்து, "ஓம் நமோ நாராயணா" என்று ஜபிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒருவேளை, சுவாமியே அந்த வெங்கடேசபெருமாள் என்றால், அவர் அதை எனக்கு நிரூபிக்கட்டும், என நினைத்து கொண்டேன்.

சுவாமி எனக்கு அளித்த பேட்டியின்போது, என்னைப் பற்றியும் என் கணவரைப் பற்றியும் நிறைய கூறினார். பின் சுவாமி என்னிடம், 'உன்னுடைய அன்னமய்யா சொல்லவில்லையா," என்ட மாற்றமுனா எவரு தலச்சினா அன்ட மாற்றமே நீவு"என்று, (You are what a devotee considers YOU to be), என வினவினார். சுவாமியின் இந்த கூற்றே எனது  ஐயங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கின. 


சுவாமியால் கூறப்பட்ட இந்த கீர்த்தனை அப்போது பிரபலமாக இல்லை. வெகுகாலம் கழித்து, திருமதி.எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் வெளியிட்ட தொகுப்பில், ஒரு பகுதியாக இடம் பெற்றது. சுவாமி, அந்த நேரத்தில் நாங்கள் இருந்த மனநிலைக்கு ஏற்ப, அந்த கீர்த்தனையில் இருந்து ஒரு வரியை மேற்கோள் காட்டியிருந்தார்!!அந்த வரி அவதாரத்தின் மீதான எனது அத்தனை சந்தேகங்களையும் சிதறடித்து விட்டது!! நீங்கள் சுவாமியை வெங்கடேசபெருமாள் என நினைத்தால், அவரே வெங்கடேசபெருமாள் என உணர்த்தியது. எனது வெங்கடேச பெருமாளே, ஸ்ரீ சத்ய சாயி பாபாவாக வந்திருப்பதை உணர்ந்து புளகாங்கிதம் அடைந்தேன்.யார் கண்டது, இப்போது நம்மிடையே அன்னமாச்சாரியா இருந்திருந்தால் , அவர் நமது சுவாமி மீதும் கீர்த்தனைகள் இயற்றியிருப்பார்!!தசாவதாரங்களின் மீது கீர்த்தனைகள் இயற்றிய மாபெரும்  இசைக் கலைஞன்,அன்பின்  சொரூபமான,நம் பிரேமவதார மூர்த்தியின் மீதும் கீர்த்தனைகள் இயற்றியிருப்பார், அல்லவா!!!


தமிழாக்கம்: தி. கல்யாணி, சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக