தலைப்பு

சனி, 29 பிப்ரவரி, 2020

முன்னாள் ஆந்திரா வங்கித் தலைவர் பத்மஸ்ரீ திரு. K கோபால் ராவ் அவர்களின் சாயி அனுபவங்கள்!


உயர் திரு K. கோபால ராவ் (1908 - 2008) பழம்பெரும் சுவாமி பக்தர். பிரசாந்தி நிலய வாசி. பல ஆண்டுகளாய் சுவாமியின் அத்யந்த பக்தர். ஆந்திரா வங்கியில் பணியாற்றி முதன்மை அதிகாரத்திலிருந்து ஓய்வு பெற்றவர்.
1974 ல் தேசத்தின் உயரிய பத்மஸ்ரீ விருதாளர். சுவாமியின் பல ஆச்சர்ய அனுபவங்களை இதயத்தில் சுமந்திருக்கும் இந்த ஆத்மார்த்த பக்தர் நம்மிடம் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறார். 

கோபால்ராவின் மகள் மீண்டும் நடந்தாள்:

ஆந்திரா வங்கியின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர், ஸ்ரீ. கோபால் ராவ் அவர்கள்! சுவாமியிடம் பல துறைகளில் வருஷக்கணக்கில் சேவை செய்தவர். அவரது மனைவி 1976ல் காலமான பிறகு, சுவாமி, அவரை கவலையை மறக்கும் பொருட்டு, ஊட்டியில் கோடை வகுப்புகளை (Summer Course) மேற்கொள்ளச் சொன்னார். மீண்டும் பெங்களூர் திரும்பிய பொழுது, தன் மகள் நடக்கவும், நிற்கவும் முடியாமல், தவழ்ந்து செல்வதைப் பார்த்து அதிர்ச்சியுற்றார். உடனே அழைத்துக்கொண்டு புட்டபர்த்திக்கு வந்து சேர்ந்தார். சுவாமியும் இருவரையும் நேர்காணலுக்கு அழைத்தார். ஸ்வாமி, கருணையுடன், அன்புடன் அந்த பெண்ணைப்பார்த்து, "பங்காரு! என் மேல் நம்பிக்கை வை, எல்லா மருந்துகளையும் தள்ளி விடு, நீ தானே நடந்து, எல்லா வீட்டு வேலைகளையும் செய்வாய், இன்னும் ஒரே வாரத்தில்! நான் உறுதியளிக்கிறேன்!" என்றார். விபூதி வரவழைத்து கொடுத்து, பாத நமஸ்காரமும் அனுமதித்தார். ஆர்த்தரடிஸ் நோய் மந்திரஜாலம் போல் குணமாகிவிட்டது! பிறகு வரவே இல்லை! சுவாமியின் வாக்கு போலவே, ஒரே வாரத்தில் நடக்க ஆரம்பித்து விட்டாள்.

இவரின் மற்ற மெய்சிலிர்க்கும் அனுபவங்கள் இதே பக்கத்தில் பின்னர் பதிவு செய்யப்படும்.. 

Source: This is an article by Mr. K. Gopala Rao published in the Sanathana Sarathi (English) in November 2001

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக