நீங்கள் எங்கிருந்தாலும் நான் உங்களை காத்து, வழிநடத்த எப்போதும் உங்களோடு இருப்பேன். எதற்கும் பயப்படாமல் தொடர்ந்து முன்னேறுங்கள்.
-பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா
இத்தாலியில் இருக்கும் பொழுது, நளினி, பலோக்னா என்ற இடத்தில் இரு பெண்மணிகளை சந்திக்கவேண்டி இருந்தது. மிலாமனா ஸ்டேஷனிலிருந்து ஒரு குறிப்பிட்ட ரயிலைப் பிடித்து பலோக்னா செல்லவேண்டியிருந்தது.
டிக்கெட் வாங்கவே கூட்டத்தில் மிகவும் கஷ்டமாகி விட்டது. முதல் வகுப்பு டிக்கெட் வாங்கிக்கொண்டு கவனமாக தனது வாலெட்டில்(பர்ஸ்) வைத்து மூடி கைப்பையில் போட்டுக் கொண்டாள். ப்ளாட்பார்மை நோக்கி நடக்க ஆரம்பித்ததும், திடீரென யூகோஸ்லேவியா நாடோடிகள் இவளை சூழ்ந்துகொண்டு பணம் கேட்டு நச்சரித்தனர். இவளது உடையை பிடித்து இழுப்பதும், கைகளை பிடித்து நகரவிடாமல் செய்வதுமாய் இருந்தனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போலீஸ்காரர்களும் காணோம். செய்வதறியாது சாயியை உரக்கக் உதவிக்கு அழைத்தாள். உடனே வெள்ளை வெளேரென உயரமான நபர் வந்து, அதட்டலாய் பேசி நாடோடிகளை துரத்தினார். மிக சுத்தமான ஆங்கிலத்தில் பேசினார். நளினி அவரது துணையோடு செல்ல, அவர் இவளை ரயிலில் ஏறி செல்ல உதவி, இவனது சூட்கேஸ் களையும் உள்ளே வைத்து விட்டு வந்தார். நளினி திரும்பி அவருக்கு நன்றி சொல்வதற்குள் அவர் மறைந்து விட்டார்.
அவர் சுவாமியாக தான் இருக்கவேண்டும் என உணர்ந்தாள். வேறு யாரும் அந்த நாடோடி கூட்டத்தை விரட்டி இருக்க முடியாது. சுவாமியைத் தவிர வேறு யாருக்குமே, தான் எந்த ரயிலில் ஏற வேண்டும், எங்கே செல்லவேண்டும், எந்த கம்பார்ட்மெண்ட் என ஒன்றுமே தெரியாது. பயணம் முழுவதும் நன்றியில் அழுதுகொண்டே இருந்தாள். பிறகு தனது கைப்பையை சாமர்த்தியமாக திறந்து வாலட்டை திருடி விட்டனர் என்று கண்டுபிடித்தாள். ஆனால் இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. ஸ்வாமி அவளுடன் இருந்திருக்கிறார்.
கடவுள் உடன் இருக்கும் பொழுது, யார் எதிர்க்க முடியும்?
Nalini Gopal Ayya, Sai The Omnipresent one, P.30,31.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக