தலைப்பு

புதன், 19 மே, 2021

சாயி மும்மூர்த்திகள் உருவம் பதித்த சத்ய நாராயணர் பதக்கம்!

அண்டம் எங்கும் சாயி நிறைந்துள்ளார். ஐம் பெரும் சக்திகளான பஞ்ச பூதங்கள், இயங்கும் மற்றும் இயங்கா பொருள்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்து பரிபூரண ஆனந்த ஸ்வரூபியாக, சாயி வியாபி தந்துள்ளார். எனது ரூபம் "விஸ்வ ஸ்வரூபம்" அதாவது அண்டத்தின் அனைத்து உருவம் எனக் கூறிய பாபா இதை விளக்க, ஒரு டாலரை சிருஷ்டித்து டாக்டர். D J. காதியாவிடம் கொடுத்தார்.... 


டாக்டர் D.J. காதியா(1939-2005) தென் ஆப்பிரிகாவில் பிறந்து, இந்தியாவில் மருத்துவம் பயின்று, உலகின் பல இடங்களில் மருத்துவராக பணி ஆற்றியவர். பாபாவினால் ஈர்க்கப்பட்டு ஏறத்தாழ 40 ஆண்டுகள் பாபாவின் அண்மை எனும் தண்மையில் குளிர்ந்து சாயி சேவையில் தம்மை முழுமையாக அர்பணித்தவர். அவர் விவரிக்கும் ஒரு அற்புதத்தை இனி காண்போம்.


🌹 சத்யநாராயணனின் இதயத்தில் சாய் மும்மூர்த்திகள்:

டாக்டர் காதியா அவர்களின் பக்தி மற்றும் தன்னலமற்ற சேவையை மெச்சி பாபா அவருக்கு பலமுறை நேர்காணல் அளித்து சிறப்பித்துள்ளார். அப்படி ஒரு முறை நேர்காணலின்போது....

நேர்காணல் முடிந்தவுடன் பாபா என்னை அருகில் அழைத்தார். தமது வலது கரத்தை சுழற்றி, ஒரு அற்புதமான மெடல் ஒன்றை ஸ்ருஷ்டித்து அதை எனக்குக் கொடுத்தார்.

பாபா கேட்டார் "அந்த டாலரில் இருக்கும் கடவுளின் உருவம் யாருடையது?" ஸ்வாமி அது சத்யநாராயணர் என்றேன். அப்படியானால் அவர் இதயத்தில் இருப்பது யார் என்ற பாபாவின் கேள்விக்கு, அவர் ஷீரடி பாபா எனக் கூறினேன். அது சரி, ஷீரடி பாபாவின் இதயத்தில் உள்ள உருவம் யாருடையது என மீண்டும் பாபா கேட்க, ஸ்வாமி அது தாங்கள்தான் என விடையளித்தேன். அப்படியானால் சத்யசாயி இதயத்தில் இருக்கும் உருவத்தை யார் என்று கவனித்து சொல் ...என பாபா கூறினார்.


🌹பார்வையின் கோணத்தை மாற்றினால்.. உண்மைத் தோற்றம் புலப்படும்:

எனக்கு அதற்கான விடை, அந்த டாலரை பலமுறை பார்த்தும் விளங்கவில்லை. அதைக் கண்ட ஸ்வாமி, அங்கிருந்த பக்தர்களிடமும், உடனிருந்த துறவி ஸ்ரத்தானந்தரிடம் அதற்கான விடையை கேட்க , அனைவராலும் விளக்கம் கூற இயலவில்லை. 

(பதிவில் இருக்கும் டாலரின் புகைப்படத்தை நீங்கள் நன்றாக பார்த்து, உங்கள் விடையை குறித்து வையுங்கள். பிறகு பதிவில் இனிவரும் ஸ்வாமியின் விளக்கங்களைப் படித்து தெளிவுறவும்)

இதைக் கண்ட ஸ்வாமி கூறினார். அது பிரேம சாயியின் சிறு வயது திருஉருவம்...

அவர் ஒரு கருப்பு மலர் அருகே , ஷீர்டி பாபாபோன்று தமது வலது காலை இடது காலின்மேல் போட்டு அமர்ந்துள்ளார். அவரது முடிக் கற்றைகள் சத்யசாயி பாபாவின் முடிகளைப் போலவே அமைந்துள்ளன.. இதைக் கூறிய பாபா, காதியா... நீ, ஆப்பிரிக்காவில் கருப்பு மலர்களை பார்த்ததுண்டா என வினவ , நான், ஆம் ஸ்வாமி என்றேன். பிரேமசாயி ஏன் ஒரு கருப்பு மலர் அருகில் அமர்ந்து இருக்கிறார்? எனபாபா மறுபடியும் வினா எழுப்ப, எங்களிலில் ஒருவருக்கும் அதற்கான விடை தெரியவில்லை. பிறகு சிரித்துக் கொண்டே பதக்கத்தை கையில் மறுபடியும் எடுத்த ஸ்வாமி, அதை தலைகீழாகத் திருப்பி, அதை உற்று நோக்கச் சொன்னார் . என்ன ஆச்சர்யம் . கருப்பு பூவாக முன்பு தென்பட்டது, இப்போது ஸ்வாமியின் திருமுடியாகவும், பிரேமசாயியின் உடல் அவரது முகமாகவும் காட்சி அளித்தது. ஆனால் சத்யசாயி பாபாவின் இடது கண் மீது அவரது தலைமுடிக் கற்றைகள் விழுந்து மறைத்த தோற்றம், தலைகீழாக திருப்பிய டாலரிலும் அப்படியே இருந்தது ஸ்வாமி மேலும் இதை பற்றி விவரித்து கூறியதாவது..


இந்த விஸ்வ ஸ்வரூபத்தில் நாராயணர் கடலின்மீது நின்று கொண்டிருக்க, மேலே ஆகாயமும், இரு புறங்களில் மரங்களும் தெரிகின்றன. ஆகவே சத்ய நாராயணர் பஞ்ச பூதங்களிலும் வியாபித்துள்ளார். ஆகவே இதுவே விஸ்வ ஸ்வரூபம்- அண்டங்களில் எல்லாம் வியாபித்துள்ள நிலை பாபாவின் இந்த விளக்கம் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி அவரது சர்வ வியாபகத் தன்மை பற்றிய படிப்பினையையும் கொடுத்தது.


🌻 நமது மாதா, பிதா, குரு , தெய்வமான பாபாவின் பிரசாந்தி நிலையத்திற்கு செல்வோர் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அவரது தரிசனம், ஸ்பர்ஷனம்,மற்றும் சம்பாஷனம் கிடைக்கப் பெற்றவர்கள் மிகப் பேறு பெற்றவர்கள். நமது இதய வாசியான பாபா நம்மை எப்போதும் ஆசீர்வதிக்கட்டும் என்கிறார் டாக்டர் காதியா.அவரது பிராரத்தனையை நாமும் ஏற்று நலமடைவோமாக. 

ஆதாரம்: Sai Samaran by Dr. D.J. Gadhia
மொழிமாற்றம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக