எனும் தனது வாசகத்தை மெய்பித்த நிகழ்ச்சி இதுவாம்.
பிரசாந்தி நிலையம் பஜனை அரங்கம். தெய்வீக ஒளியுடன்.. ஆன்மீக வாசனையோடு அரங்கம் திருவரங்கமாய் காட்சி அளித்தது.
காலை பஜன் ஆரம்பமாயிற்று. ஓம்காரத்தோடு அந்த பேரதிர்வலைகள் அரங்கத்தை ஆக்கிரமித்தன...ஒவ்வொரு கல்லூரி மாணவனாக பஜனையில் பாட ஆரம்பித்தனா். தேனருவியாய் வழிய வழிய பக்திப் பெருக்கில் அமுதமாய் ஆன்மா வரை இனித்தது. அருகிலிருந்த அறையில் இருந்து அய்யனாம் சாயி தனது ஆசனத்தில் வந்தமா்ந்தாா். பஜனையும் துரித கதியில் சென்றது. அடுத்து ஒரு கல்லூரி மாணவன் உளம் உருக "சாயிபிதா அவுா் மாதாசாயி, தீனதயாளா தாதாஸாயி" எனும் பஜனைதனை பாட ஆரம்பித்தாா். இம்மாணவா் பாதி பாடிக் கொண்டிருக்கையில் பகவான் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்றுவிட்டாா். எனினும் பஜன் பக்தி பாவத்துடன் முடிந்தது. அப்பாடல் முடிந்ததும் அதை பாடிய மாணவனுக்கு சற்றே வருத்தம் தான். தான் பாடும்போது பகவான் பாதியில் எழுந்து சென்றது அவனது மனதில் வருதத்தினை ஏற்படுத்தியது.
மீண்டும் பகவான் பஜன் முடிவதற்குள் வந்தமா்ந்தாா் தனது இருக்கையில். மங்கள ஆரத்தி முடிந்தவுடன் வருத்தமுற்ற மாணவனை அருகினில் அழைத்தாா். கிழக்கு பிரசாந்தி குடியிருப்பில் வசிக்கும் உனது தாயாருக்கு தீடிரென இதய நோய் தாக்கியது. உடன் நான் நேரில் சென்று விபூதி வரவழைத்து தந்து அதனை தீா்த்து வைத்தேன். இப்போது முழுவதும் நலமாக இருக்கிறாா்கள்...கவலைப்பட வேண்டாம். என்று கூறினார்.
என்னை தந்தை தாய் என அழைத்து நீ வருணிக்கும்போது இந்த பிரபஞ்சத்தின் தாயான சாயி மாதா நோயுற்றவரை காப்பாற்றாது நீ பாடும் பாடலை கேட்டுக்கொண்டு நான் இங்கு அமா்ந்திருப்பதா என வினவினாா். மாதாவாயிருந்து காத்திடும் சாயி அன்னையின் அன்பினை கண்டு மனம் நெகிழ்ந்திட்டான் மாணவன்.
மானவா்களாகிய நமது உள்ளமும் சாயி மாதாவின் அன்பினிலும் காத்திடும் தன்மையினை கண்டும் உருகுகிறதே. "ஜெகம் புகழும் ஶ்ரீ சத்திய சாயீஸ்வரி சரணம் அம்மா". 🙇♂️
ஆதாரம்: தபோவனம்
🌻 சுவாமிக்கு காற்றெல்லாம் காதாகவே இருக்கிறது.. அவருக்கு தன் பக்தர்கள் எங்கே எதைப் பேசினாலும்.. தன்னைப் புகழ்ந்து பாடினாலும் சதா கேட்டுக் கொண்டே இருக்கிறது. மனதின் சிறு எண்ணங்களே போதுமானவை.. தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமே சுவாமி பக்தர்களுக்கு தேவையில்லை.. எங்கும் நிறைந்த சத்யசாயி அன்னை எதை அறியாதவள்? எனும் மெய்யுணர்வே ஆன்மீக மேன்மைக்கு நம்மை எடுத்துச் சென்றுவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக