தலைப்பு

திங்கள், 31 மே, 2021

ஶ்ரீ சாயி நந்தவனம்! -பகவான் பக்தர்களுக்குத் தந்த அனுபவங்கள்!


 பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் சங்கல்பப்படி அமையும்,

“ஶ்ரீ சாயி நந்தவனம்!” என்னும் தெய்விகத் தொடர், பகவான் தன் பக்தர்களுக்குத் தந்த அனுபவங்களை தொடர்ந்து பேசும்.

பகவானின் கருணையோடு அருளாசியோடும், பகவானுக்குக் காணிக்கையான தன் புத்தகங்களில் இருந்தும்... தனிப்படவும்... தன் அனுபவங்களிலிருந்தும்... கவிஞர் பொன்மணி இந்தத் தெய்விகத் தொடரில் பேசுகிறார்.

இது பக்தியால் சாயியைப் பலகாலும், பற்றியே மகிமைகள் பலகூறும் அனுபவக் கனிமொழிச்சாரம்!
புருஷோத்தமன் சாயியின் தெய்விகம் புகலும்
புனித கங்காநதித்தீரம்!
நெஞ்சக்கோயிலில் குடியிருக்கும் நிர்மலனின் லீலைகளை நெஞ்சாரப்
பேசுகின்ற நேரம்!“ஶ்ரீ சாயி நந்தவனம்”
பூக்கும் இந்த நித்யவாசப் பூக்களெல்லாம் நம் பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபாவின்
பொற்பாதகமலங்களுக்குப் பரிபூரணச் சமர்ப்பணம்!

2 கருத்துகள்: