தலைப்பு

புதன், 12 மே, 2021

விடுதி மாணவர்களின் நோய் தீர்த்த மகத்துவ சாயி விபூதி!


இறைவன் சத்ய சாயி விபூதி. பரமம் பவித்ரம். அது பரமம் விசித்ரம். மேலும் அது சர்வரோக நிவாரணி, கல்வியும் செல்வமும் நலமும் நல்கும். சர்வ யந்த்ர தந்த்ர மந்த்ர சாரம். சர்வ சக்திகளின் பெட்டகம். சர்வ சுசீலம். அதன் மகிமையை விளக்க மானிடர்களால் இயலாது. அதன் மகிமையை அனுபவித்து கண்ணீர் சொரியத் தான் நம்மால் இயலும். சுவாமியின் விபூதி வைத்தியம் எவ்வாறு ஏராளமான மாணவர்களைக் காப்பாற்றியது என்பதை இனி காண்போம்...

ஸ்ரீசத்யசாயி கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். சுவாமியின் தர்சனம், ஸ்பர்ஷணம் மற்றும் சம்பாஷணம் அனைத்தும் அனுபவிப்பவர்கள்.

மனித வாழ்க்கை என்பது  சுக துக்கங்கள். ஆரோக்யம் பிணிகள் என இருமைத் தத்துவங்களின் தொகுப்பல்லவா? ஆகவே மாணவர்களும் சில சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் அவை சுவாமியின் கருணையால் கதிரவனைக் கண்ட பனிபோல் விலகின.

🌹பதை பதைத்த டாக்டர்.. பயம் நீக்கிய சுவாமி:

ஒருநாள் மாலை. சாயி குல்வந்த் ஹாலில் பஜன் முடிந்த நேரம். டாக்டர் அல்ரேஜா அவர்களை அழைத்தார் சுவாமி. "உடனே பள்ளி ஹாஸ்டலுக்கு செல்லுங்கள். அங்கு மாணவர்கள் உடல்நிலை சரியில்லை. பரிசோதித்து எனக்கு தகவல் தாருங்கள்" என்றார்.

Swami with Dr. Alreja (Left) in those days

ஹாஸ்டல் சென்ற டாக்டர் கண்டதென்ன. சுமார் 200 மாணவர்கள் கடும் ஜுரம், இருமல் மற்றும் வாந்தியுடன் துவண்டு கிடந்தனர். பரிசோதனை முடிய இரவு 8 மணி ஆகிவிட்டது. 

சுவாமியை சந்திக்க அன்று இயலாது என எண்ணி டாக்டர் தன் இருப்பிடம் திரும்பினார். ஆனால் ..தாயாகத் தவித்த சுவாமி... டாக்டரை கூப்பிட , வந்த டாக்டர் கை கூப்பி "சுவாமி ....! நிலைமை மிக மோசமாக இருக்கிறது. மருந்துகள் கொடுத்து கட்டுப்படுத்த இயலாது. இனி உங்களால்தான் அவர்களைக் காக்க இயலும்" என்றார். மௌனம் காத்த சுவாமியின் சங்கல்பம்தான் என்ன?

🌹தெய்வீக வைத்தியர்.. தந்திட்ட நிவாரணம்:

மறுநாள் விடிந்தது.. சுவாமி  பள்ளியை பார்வையிடச்  சென்றார்.
மூலை முடுக்கெல்லாம் தன் பாதம் சிவக்க நடந்தார். இதோ மருந்து தயாராகிவிட்டது.


ஆம்! தன் அருட் கையை அசைத்து அதிக அளவிலான விபூதியை வரவழைத்தார். அவ் விபூதி ஒரு பக்கெட் நீரில் கரைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமன்றி  அங்குள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டது அந்த சர்வரோக நிவாரணி. பார்த்தான் ஜுர அசுரன். பிடித்தான் ஓட்டம். ஆம்! பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஜூரம் தணிந்து நான்கே நாட்களில் பூரண குணம் அடைந்தனர்.

சுவாமி உங்கள் வழிமுறைகள் விசித்திரம். எங்களால் புரிந்து கொள்ள முடியாது.
ஆனால் உங்கள் கருணை எப்போதும் எங்களுக்குப் புரியும். அதில் நாங்கள் அமிழ்ந்திருப்போம்.


தன் பக்தர்கள் ஏழு கடல் தாண்டி இருப்பினும் அதை இறைவன் சத்ய சாயி அறிவார்... மருத்துவம் புரிய முடியா விந்தைகளை இறைவன் சத்ய சாயியின் மகத்துவமே புரியும்...

சுவாமியின் விபூதி என்பது சுவாமியே...  அதை உட்கொள்வதும்.. அணிவதும்.. சுவாமியின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிடுவதே!
அப்படி வந்துவிட்டோமானால்.. மற்றதெல்லாம் இறைவன் சத்ய சாயி பார்த்துக் கொள்வார்..

நம்மை கவனிப்பதும்.. காப்பதும்.. கரை சேர்ப்பதும் இறைவன் சத்ய சாயி ஒருவரே...

ஓம் ஸ்ரீ சாயி ஆபத் பாந்தவாயனமஹ

ஆதாரம்: THAPOVANAM, Chapter 11
மொழிமாற்றம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக