✍🏻 கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் முன்னாள் துறை தலைவராக பணியாற்றிய திரு டாக்டர். ராமச்சந்திரன் அவர்களின் அனுபவ பக்கங்களிலிருந்து...
டாக்டர் திரு ராமச்சந்திரன் சுவாமியின் தீவிர பக்தர். வெளிநாட்டிலிருந்து வந்திருந்த இவரது நெருங்கிய நண்பருக்கு பாபா மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை ஆகவே அவருக்கு சுவாமியைப் பற்றி புரிய வைக்க வேண்டும் என்று எண்ணினார். அதனால் தன் வீட்டில் சுவாமியிடம் பிரார்த்தனை செய்து கொண்டு அவரை வற்புறுத்தி புட்டபர்த்திக்கு அழைத்து சென்றார். பின்னர் இருவரும் சுவாமியின் தரிசனத்திற்காக வரிசையில் அமர்ந்து இருந்தனர்.
அந்த நண்பரோ தேவையில்லாமல் கிடைக்கும் நேரத்தை வீண் செய்துவிட்டு இந்த சாமியாரை பார்க்க வந்து விட்டோமோ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டிருந்த போது சுவாமி தொலைவில் இருந்து நேராக அவர் முன் நடந்து வந்து அவரை நேர்காணலுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் நேர்காணல் அறையில்... "உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இல்லை. பரவாயில்லை. நீங்கள் மிகவும் விரும்புகின்ற ஒன்றை இப்போது நினைத்துக் கொள்ளுங்கள். நான் உடனே அதை உங்களுக்கு கொடுக்கின்றன்" என்று சுவாமி கூறினார்.
அந்நண்பர் கடந்த வாரம் முன்பு தான் சுவிட்சர்லாந்தில் உள்ள பிரபல ரோலக்ஸ் ஷோரூமில் ஒரு கைக்கடிகார மாடலை பார்த்திருந்தார். அந்த குறிப்பிட்ட மாடல் ஷோரூமுக்கு வந்தே கிட்டத்தட்ட ஒரு பத்து நாட்கள் தான் இருக்கும். இப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் அந்த குறிப்பிட்ட கைக்கடிகாரத்தை அவர் மனதிற்குள் நினைத்துக்கொண்டார். அவர் உள்ளார்ந்த மனதை நொடியில் உணர்ந்த சுவாமி தன் கையசைப்பில் அக்கை கடிகாரத்தை வரவழைத்து கொடுக்கிறார்.
பின்னர் சந்தேகம் பொறுக்காமல் அந்த அன்பர் இதற்காகவே கனடாவுக்கு செல்லும் முன் ஸ்விட்சர்லாந்தில் உள்ள அந்த குறிப்பிட்ட ரோலக்ஸ் ஷோரூமுக்கு சென்று.. அவர் சுவாமியுடன் புட்டபர்த்தியில் இருந்த அதே சமயத்தில் இந்த கடைக்கு இந்த குறிப்பிட்ட கைக்கடிகார மாடலை யாரேனும் வாங்கினார்களா? என்று விசாரிக்கிறார். கடைக்காரரோ பில் புக்கை புரட்டிப் பார்த்து விட்டு நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சத்ய சாய்பாபா என்ற ஒரு நபர் வந்து வாங்கியிருக்கிறார் என்று கூறுகிறார். அதைக் கேட்டு அதிர்ந்து போன அவர் இது எப்படி சாத்தியம்.. தான் கேட்டு 10 விநாடிகளிள் அக்கடிகாரத்தை வரவழைத்துக் கொடுத்தார் அதற்குள் எப்படி இந்தியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வந்து வாங்கிக் கொண்டு எப்படி திரும்ப முடியும் என்று அதிர்ந்து போகிறார்.
பின்னர் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார் இவர் சராசரி சாமியாரோ... ஞானியோ, மகானோ கிடையாது. இவர் அவற்றுக்கும் மேல் கடவுள்தான் என்று கடைசியாக புரிந்து கொள்கிறார். இந்த சம்பவத்துக்கு பின்னர் அவர் தீவிர சத்யசாயி பக்தராக மாறுகிறார்....
🌻 சுவாமி காற்றை விட வேகமானவர்..
நெருப்பை விட விவேகமானவர்...
நீரை விட சகஜமானவர்...
பூமியை விட பொறுமையானவர்...
வானத்தை விட சூட்சுமமானவர்..
என்பதை பக்தர் உணர ஆரம்பித்துவிட்டால் யாவும் சுவாமியின் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்வர். அப்படி உணர்கையில் சுவாமியின் பாதத்தில் சரணாகதி அடைந்து வாழ்வை ஒளிமயமாக்கி மேன்மை அடைவர் என்பது மிக உறுதி!! 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக