தலைப்பு

வெள்ளி, 1 மே, 2020

🍁 கனடாவில் வாழும் திருமதி பிரியா சிவராஜா அவர்களின் மெய்சிலிர்க்கும் சாயி அனுபவங்கள்!


ஸ்ரீ சத்யசாயி யுகத்தில் பகிர்ந்து கொண்ட கடல் கடந்த கருணை புத்தகத்தில்(Chapter 2) இடம் பெற்ற இவர்களின் சாயி அனுபவம் பெரும் வியப்பையும் வரவேற்பையும் பெற்றது. நம் சத்ய சாயி யுகம் வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினராக இருக்கும் இவரின் அற்புதமான சாயி அனுபவங்களை, ரேடியோ சாயி நேர்காணல் வழியாக இவர் பகிர்ந்தவைகளை நாம் கேட்கும் முன்பு.. இவர் யார் என்பதை  இவரே சொல்கின்றார்.
     
அவதாரம் என்பது, இப்பூமியில் கடவுள் இயற்கையாக மனித உருவில் பிறந்து, வாழ்ந்து மற்ற உயிர்களைப் போல அதே அனுபவங்களைப் பெறுவது ஆகும். எனக்கு சுவாமியே இப்புவியில் தோன்றிய கடவுளாவார். நாம் ஒன்றை அனுபவிக்காமல், அந்த நபர் கடவுள் என்று சுலபமாக சொல்லிவிட முடியாது.

🌹என்னுடைய சில அனுபவங்கள் இதை உறுதி செய்யும்:


பாபா  எனக்கு 13 முறை நேர்காணல்கள் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவருடைய இறைத்தன்மையை பரிபூரணமாக உணர்ந்து, என்னை மேன்மேலும் உயர்த்திக் கொண்டுள்ளேன். பாபாவைப் பற்றி எண்ணற்ற கனவுகள், பாபா எனது மகனைக் காப்பாற்றியது, எனது கனவில், பாபா அறுவைச் சிகிச்சை செய்தது, அவரது 50 வது வயது பிறந்த நாள் விழாவில் எனக்கு சிறப்பு அழைப்பு விடுத்தது, எனக்கு எதிராகப் புனையப்பட்ட வழக்கு ஒன்றில், நீதிமன்றத்தில் என்னுடைய நேர்மையை நிரூபிக்கத் துணை நின்றது, "The Ruby Garland" (மாணிக்க மாலை) - பாபாவுடன் எனது அனுபவங்கள், என்ற புத்தகத்தை எழுத வழிகாட்டியது என, என்னுடைய அனுபவங்கள் ஏராளம்!!

நான் ஸ்ரீலங்கா, ஆப்பிரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் ஆசிரியராக பணியாற்றி, கல்வி கற்பிக்கும் தொழிலில் 56 வருடங்கள் அனுபவம் உள்ளவள். பாபாவின் வழிகாட்டுதலோடு, நான் பணியாற்றிய பள்ளிகளிலும், பாலவிகாஸ் (சிறுவரின் மலர்ச்சி )வகுப்புகளிலும், 'EHV (Education in Human Values) ' பற்றிய கல்வி முறையை அறிமுகம் செய்தேன். - பிரியா சிவராஜா
👇👇


Audio Source: ரேடியோ சாய் (http://www.radiosai.org/program/SearchProgramme.php)
(RST 169 - ஒரே பாகம்)
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: ஏப்ரல் 2020

இவர்களின் அனுபவத்தை எழுத்து வடிவில் வாசிக்க.. 

1 கருத்து:

  1. It is Baba who chooses the devotees as His instrument for rendering divine tasks. We need to only do total saranagathi to his lotus feet. Mrs. Priya Sivaraja's experiences stand testimony for this. Our faith in the Avataar gets firmly established. Jai Sai Ram

    பதிலளிநீக்கு