தலைப்பு

செவ்வாய், 26 மே, 2020

பக்கத்தைக் காட்டிய பாபா!


இறைவன் சத்ய சாயி சங்கல்பத்தினால் மட்டுமே இவ்வுலகில் எல்லாம் நிகழ்கிறது. எதேர்ச்சை என்பது எதுவுமே இல்லை.. ஒரு சிறு அசைவும் கூட அவரால் மட்டுமே திட்டமிடப்படுகிறது.. அதற்கு சிறந்த உதாரணம் இதோ...

டாக்டர் டானிலாவின் படிப்பு முடியும் தருவாயில் ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் நடந்தது. அவள் தற்செயலாக செய்முறை பயிற்சிக்கான கடைசி தேதியை மறந்தே போனாள். அந்தப் பயிற்சி முடிக்காவிட்டால் நியூராலஜியில் கடைசி பரீட்சை குளிர்கால அரையாண்டில்(Winter Semester) எழுதமுடியாது. கோடை காலம் வரை காத்திருக்க வேண்டும். இதனால் அவள் திட்டமிட்டதை விட 3 மாதம் தள்ளி தான் டிகிரி வாங்க முடியும். அவளுக்கு பதட்டம் ஆகிவிட்டது. ஒருநாள் சுவாமி அவள் கனவில் வந்தார். "நான் எப்பொழுது படிப்பை முடிப்பேன்?" என்று கேட்டாள். சுவாமி புன்முறுவலுடன் தலையை ஆட்டி "மார்ச் அல்லது மே மார்ச் அல்லது மே" என்றார். ஏற்கனவே அவள் கனவில் மே மாதம் தான் என்று தெரிந்து கொண்டாள். அதைப் பற்றி பெரிதாக பொருட்படுத்தவில்லை! அவளுடைய படிப்பைப் பற்றி குறிப்பிடவில்லை! ஆனால் சுவாமியின் முன்னிலையில் உலகாயத விஷயங்கள் அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை!

கடைசி பரிட்சைக்கு தயார் பண்ணிக் கொண்டிருந்த பொழுது, ஒரு நாள் ஸாயி ஏகாந்தமய இடத்திற்கு சென்றார். அங்கு தங்கியிருந்த பொழுது நியூராலஜி சம்பந்தமாக ஒரு கனவு வந்தது.(N. Pacialis). பரீட்சை தினத்தன்று அவளது சினேகிதி இலக்கில்லாமல் ஏதோ ஒரு பக்கத்தைப் புத்தகத்தில் திறந்து வைத்தாள். அவளது கண்கள் அந்த நோயைப் பற்றிய குறிப்புகளை எதேர்ச்சையாக பார்த்தன. அந்த நோயைப் பற்றிய கேள்வி பரிட்சையில் கேட்கப்பட வாய்ப்பே இல்லை! ஏனெனில் அந்தப் பக்கங்களில் வந்துள்ள பாடப்பிரிவு அடிக்கடி கேட்கப்படுவதில்லை! ஆனாலும் அதைப் படித்து வைத்துக் கொண்டாள்.

தேர்வு நடத்திய பேராசிரியர் உற்சாகமின்றி இருந்தார். இவளுடன் வேலைபார்த்த இரண்டு சக அலுவலர்கள் இவளுக்கு சற்று முன் வைத்த தேர்வில் தேறவில்லை! இப்பொழுது இவர்களுடைய முறை! பேராசிரியர் இவளுடைய மற்றைய தேர்வு மதிப்பெண்கள் அடங்கிய பதிவேடுகளை புரட்டிக் கொண்டே "பார்ப்போம்! இந்த மதிப்பெண்களுக்கு இவள் தகுதியானவள் தானா என்று நினைத்து, சர்வ அலட்சியமாக இவள் மட்டும் எப்படி பதிலளித்து விடப் போகிறார் என்று நாற்காலியில் சாய்ந்துகொண்டு "லிங்க்வா ப்ளிகாடா"(Lingva Plicata) நோயின் அறிகுறி பற்றி உனக்கு தெரியுமா?" என்று கேட்டார். "ஆமாம் தெரியும்" என்று கூறி அது பற்றிய எல்லா விவரங்களையும் பதிலாக கூறினாள்! ஏனெனில் காலையில் தான் சுவாமி அந்த பகுதியை, புத்தகத்தின் ஒரு பக்கத்தில் அவளுக்குக் காட்டிக்கொடுத்தார். சுவாமி சங்கல்பம் அது. அந்தப் பேராசிரியரின் முகம் ஆச்சரியத்தால் மாறியதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்! அவளுக்கு தெரியாது; ஆனால் சுவாமிக்கு தெரியும்!

இறைவன் சத்ய சாயி அறியாதது இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சத்தில் ஏதேனும் உண்டா?
படைத்தவனுக்கு தெரியாதா பராமரிக்க?

ஆதாரம் : Dr. Danila Evlert - Fuchs, Inspired

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக