தலைப்பு

திங்கள், 4 மே, 2020

சத்ய சாய் பாபாவின் 108 அஷ்டோத்திர நாமாவளியின் சிறப்பு


எனக்கு சத்ய சாய் பாபா மீது ஆழ் மனதில் பக்தி இருக்கின்றது. ஆனால் ஒரு சிலர் சுவாமியின் 108 அஷ்டோத்திரத்தை தினமும் படித்தால் சிறப்பு என்று சொல்கிறார்கள். சுவாமியின் 108 அஷ்டோத்திரத்தின் சிறப்பு என்ன.? ஏன் அதனை நான் தினமும் சொல்ல வேண்டும்?

பதில்:
108முறை 'ௐ ஶ்ரீ சாயி' என்று சொல்கிறோம். 'ௐம்' எனும் பிரணவத்தை 108முறை ஜபித்தாலே புண்ணியம். மேலும் பூா்ணாவதாரமான சாயியியையும் 'ஶ்ரீ' என்ற அஷரத்துடன் சோ்த்து சொல்லும் திருமால் மாா்பனான லஷ்மி நாரயணான(சத்திய நாரயணனை− சத்திய மான நாராயணனை) சோ்ந்து சொல்வதால் முப்பெரும் பயன் அதாவது இம்மை மறுமை அதற்கும் மேற்பட்ட பிறப்பற்ற நிலையிலும் ஆன்மா புனிதமானதாக இருக்கிறது. இவ்வாறு சாயி அஷ்டோத்திரத்தில் உள்ளது போல் வேறு எந்த அஷ்டோத்தரத்திலும் நாம் சொல்வதில்லை. இதுவே பெருமைக்கு உகந்ததாக ஆகிறது.

ஓ சாயி! மதிப்பிட முடியாத விலை உயர்ந்த 108 மணிகளாக உள்ளவரே!
உமக்கு எனது வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக