தலைப்பு

திங்கள், 25 மே, 2020

பாபாவை வழி காட்டுமாறு கேளுங்கள்! ஒப்புதலை அல்ல!


வழி காட்டுமாறு கேளுங்கள்! ஒப்புதலை அல்ல!
Ask for guidance and not approval

ஸ்வாமிக்கு, கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் ஒவ்வொருவருக்கும் எப்படி இருக்கும் என்பது தெரியும். ஆதலால் நமக்கு எது நல்லது என்று அவருக்குத் தெரியும். அவர் சொல்படி நாம் கேட்க வேண்டும். "நான் என்ன செய்ய வேண்டும்?"  எனக் கேட்டால், அவர் நமக்கு பதிலளிப்பார். நாம் அவரது வழிகாட்டலுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் நம்மில் நாமே என்ன செய்ய வேண்டுமென முடிவு செய்து விட்டு, அதை ஸ்வாமி ஆசி மட்டும் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறோம். நாம் தீர்மானிப்பதால் விளைவுகளை நாமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஸ்வாமி கூறுகிறார்.

"நான் இருக்க பயமேன் நம்பிக்கையை வை. நான் உன்னை வழி நடத்திக் காட்டுகிறேன்" என்கிறார்.

நளினிக்கு தெரிந்த ஒரு குடும்பம் தங்களது ஒரே பெண்ணிற்குத் தகுந்த மணமகனை தேடிக் கொண்டிருந்தனர். எல்லா விஷயங்களும் பிடித்த அம்சமாக அமைந்த ஒரு பையனைத் தேர்ந்தெடுத்தனர். இரண்டு குடும்பங்களும் திருமணத்தை விமரிசையாக நடத்தத் திட்டங்களும் போட்டனர். இந்த ஏற்பாட்டைப் பற்றி ஸ்வாமியிடம் தெரிவித்தனர். ஸ்வாமி அமைதியாக இருந்தார். இவர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஸ்வாமி அதற்கு பிறகு தரிசனத்திற்கும் செல்லவில்லை. கொஞ்ச காலத்திலேயே அந்த பையன் தீவிர கேன்சரால் (புற்றுநோயால்) இறந்துவிட்டான். மிகுந்த வேதனையுடன் பெண்ணின் பெற்றோர் ஸ்வாமியைப் பார்க்கச் சென்றனர். ஸ்வாமி "இப்பொழுது புரிந்ததா? அந்தப் பையனின் ஆயுள் மிகக் குறைவாக இருந்தது" என்றார். மேலும் ஒரு குறிப்பிட்ட வரன் வரும் அதை முடியுங்கள் என்றும் கூறினார். பிறகு ஸ்வாமியின் உத்தரவோடும் ஆசியோடும் அந்தப் பெண்ணின் மண வாழ்க்கை நன்கு அமைந்தது.

ஆதாரம்: Nalini Gopal Ayya, Sai the Omnipresent One, P15

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக