தற்போது ஸ்ரீ சத்ய சாயி பாபா, “நான் தான் துவாபர யுகத்துக் கிருஷ்ணன்” என்று அறிவித்த போது, நன்கு கற்றறிந்த பண்டிதரான ஸங்கு பட்லா ராம சர்மா என்பவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அவர் வெங்கடகிரி சமஸ்தானத்தின்
ஆஸ்தான பண்டிதர். நன்கு புராணங்களையும், இதிகாசங்களையும் படித்தவர். ஒரு நாள் ஸ்ரீ சத்ய சாயி பாபாவுடன், ஆன்மிக விஷயங்களைப் பற்றிப் பேசும் போது கூட இருந்தார். அவர் கேட்டார். “ஸ்வாமி தங்களுடைய பிறப்பு பிரசவமா? அல்லது பிரவேசமா?”. அங்கிருந்த அனைவரும் அதிசயப்பட்டனர். தர்மசங்கடமாக உணர்ந்தனர். ‘இது என்ன கேள்வி? எதுவானாலும் இதைக் கேட்க இவருக்கு உரிமையைக் கொடுத்தது யார்?” என ஆச்சரியப்பட்டனர். ஆனால் ஸ்வாமிக்கு அந்த கேள்வியின் உட்புற அர்த்தத்தையும் அதன் முக்கியத்துவத்தின் பின்னணியையும் நன்கு அறிவார். அவர் ஈஸ்வரம்மாவவை நோக்கித் திரும்பினார். பகவானின் தாயார் ஈஸ்வரம்மா முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தார். “ராம சர்மாவிடம், அன்று கிணற்றில் நீர் எடுக்கும் போது என்ன நடந்தது என்று சொல்”. ஈஸ்வரம்மா அதன் பின்னர் தன் அனுபவத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்.
பகவான் இப்போது ராம சர்மா பக்கம் திரும்பிக் கூறினார். “உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும் இல்லையா ராம சர்மா?. எனது அவதாரம் பிரசவத்தால் ஏற்படவில்லை, பிரவேசத்தால் தோன்றியது என்று?”
(ஆதாரம் – 'தபோவனம்' பக்கம் -88,89)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக