தலைப்பு

வெள்ளி, 29 மே, 2020

இறைவனோடு நெருங்கிய கஸ்தூரி மந்திரம்!


ஏன் மந்திர உபதேசம் பெற வேண்டும் என்பதை இறைவன் சத்யசாயி கேட்டு அவரே அக வெளிச்சமாய் தெளிவையும் தருகிற அற்புத கலந்துரையாடல் இதோ.. 

ஒருமுறை பேராசிரியர் கஸ்தூரி அவர்களுக்கு (பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியர்) பகவானிடமிருந்து ஒரு மந்திரம் பெற்றுக் கொள்ள மிக விருப்பமாக இருந்தது. பாபாவிடம் தனது அவாவைக் கூறி, கங்கையில் புனித நீராடிவிட்டு காலை முழுவதும் விரதமிருந்தார்.மதியம் வந்தது, ஆனால் சுவாமி மந்திரம் ஏதும் உபதேசிக்கவில்லை.

மதிய உணவு  வேளையின் போது தன்னருகில் அமர்ந்து இருந்த கஸ்தூரியை நோக்கி, பகவான், "கஸ்தூரி, ஏன்,சாப்பிடவில்லையா?" என்று வினவினார். அதற்கு கஸ்தூரியோ  "சுவாமி, மந்திரம்....", என தயக்கத்துடன் இழுத்தார். பகவான், "மந்திர உபதேசம் பெறுவதின் நோக்கம் என்ன?" என்று கேட்டார். "தெய்வத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள", என்று ஆர்வமாக பதிலுரைத்தார், கஸ்தூரி. பாபா கஸ்தூரியின் கையையும் பின் தன் கையையும் நோக்கினார். இரண்டும்  கிட்டதட்ட ஒன்றையொன்று தொட்ட வண்ணமிருந்தன!!! சுவாமி சிரித்தபடியே, "இன்னும் எவ்வளவு நெருங்க விரும்புகிறாய்!!? என்று தனது தெய்வீகத்தை,
எளிமையாக வெளிப்படுத்தினார்!!

இறைவனோடு ஒன்றவே எல்லாவகையான ஆன்மீக சாதனையும்.. மந்திர ஜபமும்.. இறைவனோடு இரண்டற கலந்த கஸ்தூரியே இறைவன் சாயி அருளியதைக் கேட்டு நிச்சயம் மந்திரமாகவே மாறியும் பிரேம சாயியை கர்ப்பத்தில் சுமக்கும் மறுபிறவியாய் கொடுப்பினையும் பெற்றார்.

பகவான் நமக்கு கிடைத்துள்ள விலைமதிப்பில்லா, ஒப்பற்ற பன்முகத்தன்மையுடைய வைரம் !!!
வெறும் வைரம் அல்ல.. வைரம் பிரகாசிக்கும் உள்ளொளி வெளிச்சமும் இறைவன் சத்ய சாயியே.

ஆதாரம்: LIVING THE DIVINE PRESENCE- Radiosai 
மொழிமாற்றம்: தி. கல்யாணி, சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக