தலைப்பு

புதன், 27 மே, 2020

இறைவன் சத்ய சாயியின் சாசனம்!


இறைவன் சத்ய சாயி முன்பே இந்த மெய்யுணர்வு பிரகடன சாசனத்தை அருளிவிட்டார். அதற்கு  இப்போது சாட்சியாக நாமே பூமியில் திகழ்கிறோம். இறைவன் சத்ய சாயியை சரணாகதி அடைந்து அதன்படி நடப்பதொன்றே விழிப்புணர்வு தரக்கூடிய நம் வாழ்க்கைக்கான ஆன்மீக அக மாற்றங்கள்!

"எல்லோரும் விழிப்புணர்வு பெற வேண்டிய நேரம்.
நான் இப்போது , நல்லவர்களை எண்ணி கணக்கிடும் நாளும் , தீயவர்களைக் களை எடுக்கப்போகும் நாளும் வெகு தூரத்தில் இல்லை. உலகத்தை தூய்மைப்படுத்தும் காரியம் நடைபெறும். விழிப்புணர்வு பெற்ற ஜீவாத்மாக்கள் மட்டுமே வாழ்க்கையில் தெய்வீக நிலையை அனுபவிப்பதற்கு விட்டு வைக்கப்படுவர். மற்றவர்கள் மாயை மற்றும் இருட்டு உலகத்திற்குத் தள்ளப்படுவார்கள், கைவிடப்படுவார்கள். பொற்காலத்தின் வருகை புதிய வரவிற்கான அறிவித்தலுடன் சில எழுச்சிகளும், இன்று பரவியிருக்கும் தீமையை வேரோடு அழிப்பதற்கு போதுமானதாக இருக்கும்.


அந்தப் புயலுக்குப் பின் புதிய ஆரம்பத்துடன், முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையுடன் இருக்கும். வாழ்க்கையின் எதிர்மறை நிலைகளான போர், சண்டை, வெறுப்பு, பொறாமை, ஆசை ஆகியவைகளை மாற்றி அன்பு மற்றும் ஒற்றுமை கொண்ட யுகமாக இருக்கும். ஒவ்வொருவரும் இப்போது அந்த புதிய மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டும். அந்த மாற்றம் வந்தே தீரும்.
அதற்கு தயாராக இருப்பவர்கள் மட்டுமே தப்பிப் பிழைப்பார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.

நான் எனது தெய்வீகத் தகவலைத் தந்துவிட்டேன். எனது ஆழமான உரையைக் கேட்கின்றவர்கள் பின்னர் எனக்கு எதுவும் தெரியாது எனக் கூறக் கூடாது. உங்களது வாழ்க்கை முறையை சரி செய்து கொள்வதற்கும், தெய்வீகப் பாதைக்கு மாற்றிக் கொள்வதற்கும் தாமதிக்காதீர்கள். ஏனென்றால் உங்களுக்கு அதைத் தவிர வேறு வழியே இல்லை."

 -- பகவான் ஸ்ரீ சத்யசாயி (பிரசாந்தி நிலையம், 25/11/1995)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக