தலைப்பு

வெள்ளி, 8 மே, 2020

சாய் லென்ஸ் அது சாயாத லென்ஸ்! 🧐


(சாயி பக்தரின் பகிர்வு - சுவாமியால் முடியாதது எதுவும் இல்லை!!) 

இது எல்லாம் சாத்தியமா? எனக் கேட்டால்.. இறைவனுக்கு எதுவெல்லாம் சாத்தியமில்லை எனக் கேட்கத் தோன்றும் இந்த அற்புதத்தை வாசித்தபிறகு...

சுவாமியின் கல்லூரியில் படித்த எனது  நண்பர் கூறிய ஒரு சம்பவம்; சுவாமியின் பல பணிகளில் இடம்பெற்ற பொறியாளர் ஜோகாராவ் அவரகளின் பேரன் என்னுடன் படித்தார்.  ஒரு நாள் காலை சுவாமி அவர்கள் வீட்டிற்கு வருகை புரிந்தார். அவர்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிடும்போது, ஜோக ராவ் அவர்கள் அணிந்திருந்த  கண்ணாடியில் இருந்து லென்ஸ் அவரது தட்டில் விழுந்தது. ராவ் மிகவும் சங்கடப்பட்டார்;சுவாமி இருக்கும் போது பாதியில் எழுந்து கழுவினால் நன்றாக இருக்காது என அசௌகரியமாக உணர்ந்தார். இக்கட்டான சூழ்நிலையை அறிந்த சுவாமி, தட்டில் இருந்த லென்ஸைப் பார்த்து, 'ஹே, மேலே செல்' என்று சொல்ல,பௌதீக கோட்பாடுகளையெல்லாம் பொய்யாக்கும் விதமாக, லென்ஸ் மேலே சென்று கண்ணாடி பிரேமில் பொருந்திக் கொண்டது!! ஒரு வீடியோ டேப்பை ரீவைன்ட் செய்தது போல, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!!


🌻இந்த அண்ட சராசர இயக்கம் எல்லாம் இறைவன் ஸ்ரீ சத்யசாயி குரல் ஆணைக்குக் கட்டுப்பட்டதே!
இந்தப் பிரபஞ்சப் பேரியக்கப் படைப்பெல்லாம் இறைவன் சத்யசாயி விரல் ஆணைக்கு உட்பட்டதே! 
அதிலிருந்து மனிதன் படைத்ததாக மாயையில் கருதப்படுகிற அந்த சின்ன லென்ஸ் மட்டும் எங்கிருந்து தப்பிக்க முடியும்?🌻

 - சாயி முன்னாள் மாணவர் திரு. முரளி கிருஷ்ணா, நெல்லூர்.

தமிழாக்கம்: தி. கல்யாணி, சென்னை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக