தலைப்பு

சனி, 16 மே, 2020

கனடாவைச் சேர்ந்த பையனின் கேன்சர் நோய் குணமாக்கப்பட்டது! !


நோய்கள் மனித கர்மாவினால் உருவாகின்றன. கர்மாவை அழிப்பது சத்ய சாயி கடவுளால் மட்டுமே முடியும். அப்படி ஒரு மெய் சிலிர்க்கும் நிவாரண அனுபவம் இதோ.. 

1978ல் கோடைப் பயிற்சி வகுப்புகளின் போது, கனடாவின் வான் கூவர் என்னும் இடத்திலிருந்து ஒரு பையன் வந்திருந்தான். அவன் டாக்டர் காதியாவை தனக்கு உள்ள பிரச்சினையைப் பற்றி விளக்குவதற்காக அணுகினான். அவனுக்கு கழுத்தில் வீக்கமும் கட்டியும் இருந்தன. அவனுக்கு ஏற்கனவே தைராய்டு புற்றுநோய் வந்து, கட்டி அகற்றப்பட்டது. மருத்துவர்கள் இவனை இப்பொழுது சம்மர் கேம்பிற்கு செல்லலாம் என்றும், ஏதாவது தொந்தரவு இருந்தால் உடனே கேன்சர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

அந்த கனடா பையன் கேன்சர் மருத்துவமனை பற்றி தனக்கு வழிகாட்டி உதவுமாறு கேட்டான். பாம்பேயில் டாடா மெமோரியலில் ஒரு மருத்துவமனையும், வேலூரில் ஒன்றும் இருப்பதாக கூறினார் டாக்டர் காதியா!

அந்தப் பையன் உடனே சுவாமியே எனக்கு ஏதாவது செய்ய முடியாதா என்று கேட்டான்! அதற்கு டாக்டர் காதியா, சுவாமியை மனதில் நினைத்து இடைவிடாமல் அவர் பெயரை ஜபித்து, அவர் கண்ணுக்குள் தோன்றும் வரை தொடர்ந்தால் நிச்சயம் சரி செய்வார் என்றார். அந்தப் பையனும் அன்று இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை ஜெபித்துக் கொண்டு இருந்தான் "சாய்ராம்" என்று இடைவிடாமல்! பின்வரும் வகையில் பகவான் அவனுக்கு அனுக்கிரஹம் செய்தார்:-


மறுநாள் காலை உணவின் பொழுது சுவாமி நேரே மாணவர்களின் விடுதிக்கு வந்து, இந்தப் பையன் இருக்கும் அறைக்குள் நுழைந்தார். அந்தப் பையனை பார்த்து "நன்றாக ஜெபித்தாய்" என்று கூறி, விபூதி வரவழைத்து கொடுத்து வாயில் போட்டுக்க சொன்னார். மீதி விபூதியை தானே அவனது கட்டிகளின் மீது தேய்த்து விட்டார். அதிசயத்திலும் அதிசயம்! அத்தனை கட்டிகளும் மறைந்துவிட்டன!! நோயாளி குணம் ஆகிவிட்டான். அன்பான சுவாமி கூறினார், "சுவாமி உனது கேன்சரை கேன்சல்(cancel) செய்து விட்டேன். என்றார்.

வெறும் கேன்சர் கேன்சலாகவில்லை. கர்மாவே கேன்சலாகி இருக்கிறது... ஆதிப் பரம்பொருள் சத்ய சாயி எனும் ஜோதிப் பரம்பொருளே கர்மாவை அழிக்கவல்லவர்... அவரை சரணாகதி அடைவது ஒன்றே மனித வாழ்க்கைக்கான பிறவி நிவாரணம். 

ஆதாரம்: Sai Smaran P 247
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக