தலைப்பு

சனி, 30 மே, 2020

இறைவன் சாயி ராமனின் நிழலே அனுமன்!


ராமனின் நிழலாய் அனுமன் இருந்ததை இறைவன் சத்ய சாயி ராமன் தன் நிழலை நமக்குக் காட்டி உணர வைக்கும் அற்புதம் இதோ.. 

1971ம் ஆண்டு, பிரசாந்தி நிலையத்தில் சுவாமி, நாராயண சேவையின் போது, தானே ஒவ்வொருவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டு  இருந்தார்.அப்போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், சுவாமியின் நிழல் அனுமனாகவே காட்சியளித்தது. இந்த அற்புதமானப் புகைப்படத்தை நீங்கள் எந்தக் கோணத்தில் திருப்பி பார்த்தாலும், அது அனுமனாகவே காட்சியளிக்கும்!! இதில்
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நாராயண சேவை தொடங்குவதற்கு முன், சுவாமி ஹனுமனின் பக்தியையும்,உயர்ந்த குணங்களையும் பற்றி பேசியிருக்கிறார் !!


நம் உள்ளத்தைத் திறக்கவே இறைவன் சாயி உதித்து வந்தார்.. இதிகாசங்கள் சத்தியமே என்பதை உணர்த்த பிரபஞ்சமான பரம்பொருள் சாயி நம்மிடையே உயிர்த்து வந்தார்.

Source: Saibliss fb
தமிழாக்கம்: தி. கல்யாணி, சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக