தலைப்பு

புதன், 13 மே, 2020

ஒரு டாக்டர் மாரடைப்பினால் இறக்கும் தருவாயில் காப்பாற்றப்பட்டார்!


இறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் புகைப்படத்தை வெறும் புகைப்படம் என்று நினைத்தால் அது பெரிய அறியாமை.. புகைப்படம் இல்லை அது சாட்சாத் சத்ய சாயியே என சத்தியத்தைப் பேசும் நற்சான்று இதோ.. 

ஒருநாள், கல்கத்தாவைச் சேர்ந்த Dr. கோஷ் எனும் மகப்பேறு நிபுணர் (gynaecologist) இதய நோயால் துன்புற்றார். அவருக்கு சிகிச்சை அளிக்க Dr. ஆல்ரோஜா அவசரமாக அழைக்கப்பட்டார். உடனடியாக செய்யக்கூடியதாக கார்டிகோஸ்டராயிடும், மிகக் குறைந்த அளவு மார்ஃபியாவும், கொடுத்தார். ஆனால் நோயாளியின் நாடி மிகவும் பலவீனமாகி ரத்த அழுத்தம் பதிவு செய்ய முடியாத அளவு மோசமாகிவிட்டது. எல்லாம் சுவாமிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவரை மறுநாளே ஹாஸ்பிடலுக்கு மாற்றச் சொன்னார் சுவாமி. Dr. ஆல்ரோஜாவும் இவரை சிகிச்சை பெற வைத்து, நாகண்ணா என்ற உதவியாளரிடம் கூறி, இரவு கண்காணிக்கச் சொல்லி, ஏதாவது அவசரம் என்றால் தன்னை அழைக்குமாறு கூறிச்சென்றார். இரவு, அந்த அறையில் இருந்த புகைப்படத்திலிருந்து சுவாமி வெளிவந்து விபூதி வரவழைப்பதை நாகண்ணா பார்த்தார். Dr. கோஷ் பிழைத்துவிட்டார் என்று கூறவும் வேண்டுமா? அதன்பிறகு அவருக்கு இதய நோய் வரவே இல்லை! பொதுவாக இப்படிப்பட்ட நிலையில் ஒருவர் இறந்திருக்கக்கூடும்! (சுவாமி தானே வரவழைத்து கொடுத்த விபூதியால் காப்பாற்றப்பட்டார்.!)

இறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் விபூதியால் குணமாக முடியாத நோய்களே இல்லை.. எல்லா விதமான தீரா ரோகங்களையும் சாய் பஸ்பமே பஸ்பமாக்கிவிடுகின்றன..

ஆதாரம்: ஆரோக்கியப்ரதாயினி P.16
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக