தலைப்பு

செவ்வாய், 26 மே, 2020

அமைதியை எங்கே தேடுவது?


பிரசாந்தி நிலையத்தைக் கட்டமைத்த இறைவன் சத்ய சாயியே அந்த பிரசாந்தி வடிவமாகவும் உயிரினங்கள் ஒவ்வொன்றின் உள்ளும் நிறைந்திருக்கிறார் எனும் அடிப்படை சத்தியத்தை அவரே விளக்குகிறார் இதோ..

தெய்வீக அன்பின் திரு உருவாங்களே!

நீங்கள் ஏன் ஆசிரமத்திற்கு வந்துள்ளீர்கள்! உங்கள் உண்மையான உள்நோக்கம், இங்கே வருவதற்கான எண்ணம் என்ன? இங்கு வந்து, அமைதியான, ஆனந்தமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வருகிறீர்கள். நீங்கள் அமைதியை உங்களுக்கு வெளியே எங்கேயும் தேட வேண்டாம். நம்முடைய உருவமே அமைதி. நம்முடைய உருவமே சத்யம்.


சத்யம் எங்கேயோ தொலைதூரத்தில் இருப்பதாக எண்ணவேண்டாம். உங்களை உணர்தலே சத்யம். அதை விட்டுவிட்டு, தன்னை உணர்வதைத் தவிர்த்துவிட்டு, தேவையற்றவைகளைப் பற்றி அறிய முற்படுவது தான் அமைதியின்மைக்கு முக்கிய காரணம். நன்மையும் தீமையும் அவனவன் நடவடிக்கையினால் ஏற்படுகிறது, நம்முடைய ஒழுக்கம் தான் நம் செல்வம்.  நம் நடத்தை நன்றாய் இருந்தால் அமைதியும், செல்வமும் நம்மை தேடிவரும். எல்லாவற்றிற்கும் பொறுமை மிக அவசியம். - பாபா 

ஆதாரம்: சனாதன சாரதி - ஆகஸ்ட் 1993 இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக