தலைப்பு

திங்கள், 11 மே, 2020

தியானம் செய்வதற்கு நேரம் கிடைக்கவில்லையா?


பக்தர்: தியானம் செய்வதற்குக் கூட தேவையான நம்பிக்கையை எப்படி பெறுவது? இதற்கு நேரம் கிடைப்பதில்லை.

பாபா: இது உண்மை அல்ல. நமக்கு பேசிக்கொண்டிருக்கவும், சினிமா முதலியவற்றிற்கு போகவும் எப்பொழுதும் நேரம் கிடைக்கிறது. தியானம் செய்ய நிச்சயமாக நேரம் இருக்கிறது.

 பக்தர்: தியானம் செய்த பிறகு சக்தி உண்டாவதை உணரமுடிகிறது. அந்த சக்தி எங்கிருந்து வருகிறது?  தியானத்துடன் அதற்குள்ள உறவு என்ன?

பாபா: அந்த சக்தி இறைவனிடமிருந்து வருவதாகும். இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு அன்பாகும். இறைவனுடன் உள்ள உறவை அறிந்து கொள்வது முழுதும் இயலாத செயல். இறைவன் சூட்சுமத்திலும் சூட்சுமமானவன். அவருடனான அந்த உறவும் அதே விதமாக சூட்சுமமானது.

பக்தர்: ஒரு நாளைக்கு இரண்டு முறை தியானம் செய்வது சிறந்தது என்று சுவாமி சொன்னார்.

பாபா: விடியற்காலை மிகவும் சிறந்தது. மனது அமைதியாகவும், பொறுப்புகளின் சுமை இல்லாமலுமிருக்கும்.

ஹிஸ்லாப்: நான் நெடுக அவ்வப்பொழுது தியானம் செய்வது சரியா?

பாபா: பகலில் சில கஷ்டங்கள் இருக்கின்றன. மக்கள் நம்மை சுற்றி இருப்பர்; செய்ய வேண்டிய வேலையும் இருக்கும். தியானம் செய்ய முயன்றால் வேலையும் தடைப்படும்

பக்தர்: தியானம் என்பது என்ன?

பாபா: உண்மையான தியானம் ஒரே எண்ணம், ஒரே குறிக்கோளுடன் இறைவனுடன் லயித்திருப்பது. இறைவன் மட்டிலே, எல்லாம் இறைவன். எண்ணும் போதும் மூச்சு விடும்போதும் அன்பு செலுத்தும் போது இறைவனில் தோய்ந்திரு.


பக்தர்: ஒருமுகப்படுத்தல் எங்கணம்?

பாபா: ஒருமுகப்படுத்தல் என்றால், என்ன புலனறிவுகளும், ஆசைகளும் விலகிவிட, இறைவன் மட்டும் இருக்கும் நிலையாகும். ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஒருமுகப்படுத்தல் எவ்வளவு தீவிரமாக இருந்ததென்றால், அவர் ஹனுமானைத் தியானித்து வந்த பொழுது, வானரம் போல அவருக்கு ஒரு வால் வளர ஆரம்பித்துவிட்டது. அவருடைய ஒருமுகப்படுத்தல் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால், அவருடைய உடல் ஒரு மாறுதலடைந்து கொண்டிருக்கும் கொப்புளம் போலாயிற்று. ஒருமுகப்படுத்த வேண்டி விசேஷ உழைப்பு எதுவும் தியானம் செய்வதன் பகுதியாக அமைய வேண்டியதில்லை. மனமும், அறிவும், புலன்களும் உபயோகப்படுத்தப்படும் பொழுது, ஒருமுகப்படுத்தல் என்பது உடன் உண்டாகிறது. இது இல்லாவிடில் உன்னால் நடக்கவும் முடியாது. இதற்கு விசேஷ பயிற்சி எதுவும் தேவையில்லை. இது புலனறிவிற்கும் கீழ் பட்டது. தியானம் புலனறிவிற்கும் மேம்பட்டதாகும். ஒருமுகப்படுத்தலுக்கும், தியானத்திற்கும், அவை இரண்டையும் பிரிப்பது போல் இருப்பது ஆழ்ந்த சிந்தனை. ஒருமுகப்படுத்தலிலிருந்து ஆழ்ந்த சிந்தனை, பிறகு தியானம். "நான் தியானம் செய்கிறேன்" என்று ஒருவன் எண்ணும் வரை, அது மனமே. தியானம் அல்ல. தான் தியானத்தில் இருப்பதாக ஒருவன் உணரும் பொழுது, அவன் தியானத்தில் இல்லை. இறைவனில் லயித்து இருக்கும்பொழுது, ஒருவன் உருவம் என்பதை ஒதுக்கிவிட்டு, இறைவனுடன் கலக்கிறான். அச்செயலில் மனது இயற்கையாக இயக்கத்தை நிறுத்தி விடுகிறது.

பக்தர்: தியானத்தில் உருவத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்று பாபா சொல்கிறார். ஆனால் நாம் சுவாமியின் உருவை பூஜிக்கிறோம்.

பாபா: அப்படிச் செய்வது சரியே. ஆனால் ஒருவன் பாபாவிடம் நெருங்கி வரும்பொழுது, மனதில் உருவகப்படுத்துவது கைவிடப்படுகிறது. இந்த க்ஷணத்தில் நீ பாபாவை நேருக்கு நேர் பார்க்கிறாய். நீ இன்னும் மனதால் கண்டு கொண்டிருக்கிறாயா?

பக்தர்: நான் என்ன செய்ய வேண்டும்? என்னுடைய தியானமானது "நான் யார்"? என்ற விசாரணையாகும்.

பாபா: ரமண மகரிஷியின் விசாரணை, அதுமட்டிலுமே நல்லதல்ல. அது தியானத்துடன் சேர்க்கப்படவேண்டும். தியானம் அதனுடைய சரியான அப்யாசத்திற்காக, அதே இடத்தில் அதே சமயத்தில் செய்யப்பட வேண்டும். இந்த விதமாக அது நிச்சயம் வெற்றிகரமாகும். ஒருவன் வீட்டை விட்டு வெளியே பிரயாணம் செய்து வரும் பொழுது அவனுடைய மனதால், அவன் எங்கிருந்தாலும், தனக்கு பழக்கமான இடத்திற்கு செல்ல முடியும். உண்மையைத் தேடுவது என்பது தேவையில்லாதது. எல்லா காலத்திலும் உண்மை எங்கும் இருக்கிறது. ஒருவன் உண்மையை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர, அதை தேட வேண்டியதில்லை. புதியதாக பிறந்த குழந்தையின் அழுகை 'கோஹம்' (நான் யார்?) என்பது. ஒரு வாழ்நாள் முழுவதும் சாதனா செய்த அந்த முதியவர் சொல்கிறார் 'ஸோஹம்' (நான் கடவுள்) சுவாமியே விட்டு விலகி இருக்கும் பொழுது, ஏதோவொரு பணி செய்து கொண்டே அவரை நினைத்திருப்பது, பேட்டரியில் சக்தி ஏற்றுவதாகும். அதுவும் உண்மையான தியானமே.தியானம் என்பது இடைவிடாத ஆத்ம விசாரணை, நான் யார் எது உண்மை எனப்படுவது; அகங்கார செயல் எது, அன்பு என்பது என்ன? கருணையற்றிருப்பது என்ன? என்பது போன்று. தியானம் என்பது ஆன்மீக தத்துவங்களை சிந்திப்பதும்,  பாபா சொல்பவற்றை நம் வாழ்வில் செயலாக்க வழி தேடுதலும், அம்மாதிரியானவையாகும்.

ஆதாரம்: பகவானுடன் உரையாடல் என்ற புத்தகத்திலிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக