தலைப்பு

வியாழன், 21 மே, 2020

மானஸ பஜோரே பாடல் தோன்றிய அந்த தருணம்!


இறைவன் சத்யசாயியே தாயாய் தந்தையாய் நம் பக்தியை வளர்த்து சத்குருவாய் சத்தியத்தை கற்பித்து இறைவனாய் ஆட்கொள்கிறார். இதை அவரே மொழிகிறார் இதோ...

நான் உரவகொண்டாவில், உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில்,ஒருநாள் என் புத்தகங்களைத்
தூக்கி எறிந்து விட்டு, 'நான் வந்த வேலை,
எனக்காக காத்திருக்கிறது',என்று பிரகடனம்
செய்தேன்.

அன்று மாலை நடந்த நிகழ்வை, இந்த தெலுங்குப் பண்டிதர்,தன் உரையில் உங்கள் அனைவருக்கும் விளக்கிக் கூறினார்.

நான் சாய்பாபா என்று என்னை பகிரங்கமாக
வெளிப்படுத்திக் கொண்ட அந்த நாள்,நான்
இந்த தெலுங்குப் பண்டிதர் வீட்டிலிருந்து ,
தோட்டத்தில் குழுமியிருந்த மக்களிடம்
சென்று, முதல் பாடலாக
"மானஸ பஜரே குரு சரணம்...
துஸ்தர பவ ஸாகர தரணம்..."
என்ற பாடலை சொல்லிக் கொடுத்தேன்.


தன்னிடம் ஆறுதலைத் தேடுபவரின் சுமைகளைத் தாங்கும் பொருட்டு மீண்டும்
நான் அவதரித்துள்ளதாக, நானே அறிவித்தபடி இந்த உலகிற்கு  குருவின் பாதங்களை, முடிவில்லாத ஜனன, மரண
சுழற்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும்
அனைவரையும், வணங்கச் சொன்னேன்.

அதுவே மனித குலத்திற்கு நான் அளித்த
முதல் செய்தி ஆகும். 


"மானஸ  பஜரே" மனதால் வணங்குதல்!!!
உங்களுடைய தூய்மையான,நேர்மை மற்றும்
வெகுளித்தனம் ஆகிய நறுமணங்கள் பொருந்திய, கண்ணீரால் கழுவிய மனதை
எனக்கு தாருங்கள்!!!

சத்யசாய்....
SSS..Vol-1...

இறைவன் சத்யசாயியே நமக்கு சத்குருவாய் அமைந்திருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!

தமிழாக்கம்: தி. கல்யாணி, சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக