தலைப்பு

புதன், 27 மே, 2020

விழப் போனவரை தடுத்த சாயி தெய்வம்!


ஓம் ஸ்ரீ சாயி ஆபத்பாந்தவாய நமஹ என்ற அஷ்டோத்திர விவரிப்பு அனுபவப்பூர்வமான சத்தியம். ஆபத்திலிருந்தும்.. பெரும் விபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் தெய்வம் சத்யசாயி என்பதன் அனுபவம் இதோ...

அனந்தப்பூரைச் சேர்ந்த திரு. சிதம்பரப்யா என்னும் அட்வகேட் சென்னையில் ஒரு வங்கி மகாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு திரும்ப வந்து கொண்டிருந்தார்.
அவர் பாம்பே மெயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் ஏறினார். படுக்கைக்கு செல்ல ஆயத்தமானார். அதற்குமுன் கழிப்பறைக்குச் செல்ல விரும்பினார். ஆனால் டாய்லெட் அறையில் கதவைத் திறப்பதற்கு பதில் கம்பார்ட்மென்ட் கதவைத் திறந்து வெளியே தவறுதலாக காலை வைத்து விட்டார். அவர் கட்டாயம் உயிர் போயிருக்க வேண்டியது! ஆனால் அவரை ஒருவர் இழுத்துப் பிடித்து ஒரு மெத்து மெத்தென்ற இடத்தில் படுக்க வைத்திருந்தார். அவருக்கு எங்கும் அடிபடவில்லை!! அவருடைய கண்ணாடியும், கைகடிகாரம் கூட பாதிப்படையவில்லை. ஆனால் கும்மிருட்டு! சுமார் 20 நிமிடம் கழித்து பேசின்பிரிட்ஜ் ஸ்டேஷன் மாஸ்டரும், ஒரு கான்ஸ்டபிளும், அவரை வந்தடைந்தனர். அவரது டிக்கெட்டில் இருந்து அவர் பாம்பே மெயில் பிரயாணி என்பதை தெரிந்து கொண்டு, அவர் சென்னையில் ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் இவருக்கு எங்கும் அடிபடவில்லை என்று கூறினர்.!! வங்கி மேனேஜர் வந்து பார்த்துவிட்டு, அவரது மகன்களுக்கு தந்தி கொடுத்தார். அவரது மகள் சென்னைக்கும், அவரது மனைவி புட்டபர்த்திக்கும் சென்றார்கள். அந்த அம்மாவை பார்த்த சாயி, "சென்னை போய் கணவரை பார்க்காமல், இங்கு ஏன் வந்தாய்"? என்றார். "உன் கணவன் நன்றாக உள்ளார். நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு விட்டேன். இல்லாவிடில் என்ன ஆகி இருக்கும் தெரியுமா?" என்று கேட்டுவிட்டு, தானே மொத்த சம்பவத்தையும் விவரித்தார்.

ரயில்வே அதிகாரிகள் அவரது பைகளை கவனித்து எடுத்துவைத்து;
20 நாட்கள் கழித்து இவர்களுக்கு தகவல் தெரிவித்து, வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறினர்!

இறைவன் சத்ய சாயி பிடித்து இழுப்பதும்.. தடுத்து இழுப்பதும் நம்மை பாதுகாக்கவே .. பராமரிக்கவே..
யாவும் அவர் சங்கல்பம் என சரணாகதி அடைந்துவிட்டால் இன்னமும் அவர் காவலும்.. காதலும் பரிபூரணமாகிவிடுகிறது.

ஆதாரம் : Bhakthodhaaraka Sri Sathya Sai, P19
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக