தலைப்பு

புதன், 9 செப்டம்பர், 2020

மாணவ திறனை மேம்படுத்துவதே ஆசிரியர் கடமை!


ஆசிரியர்களுக்கு எல்லாம் பேராசிரியராக திகழும் இறைவன் சத்யசாயியே மாணவர்களின் உள்ளாற்றலாய் திகழ்வதோடு மட்டுமில்லாமல் அந்த திறமைக்கு நல்ல ஒரு அங்கீகாரமும் தந்து அவர்களை மேம்படுத்தி உயர்வடையச் செய்கிறார் என்பதற்கான சான்று அவரின் மங்கள இதழ் வழியே ஒளிரும் உபதேசமாய் இதோ... 

ஒருமையிலிருந்து படற்கைக்கே ஆன்மாவின் பயணம். 'நான்’ என்பதிலிருந்து 'நாம்' என்பதற்கு. சிலர் கூறுகிறார்கள் 'நான்’ என்பதும் 'நீ' என்பதும் ஒன்றே என்று. உண்மை என்னவென்றால் “நானும் நீயும் சேர்ந்தே நாம்", 'நாமும் நாமும் ஒன்றே". தனி ஆன்மா பேரான்மாவோடு கலப்பது பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வெறும் உடல்ரீதியான இருத்தல் மட்டுமல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் 'நான்' என்பது மட்டுமே இருக்கிறது என்றாலும் அது உணரப்படுவதில்லை. கண்களை மூடிக்கொண்டு ஒருவன் 'எல்லாமே இருள்' என்கிறான். அவன் இருளை காண்கிறான். அவனுள் உள்ள ஏதோ ஒன்று இருளையும் ஒளியையும் காண்கிறது. அதுவே சாட்சி.

குழந்தை கண்ணன் பாலுக்காக அழுதான். தாய் யசோதை சொன்னாள். நேரம் ஆகவில்லை இரவு ஆகட்டும் என்று. கண்ணன் கண்களை மூடிக் கொண்டு இரவு ஆகிவிட்டது என்றான். இரவில் இருள் வேறு விதமானது என்றாள் அன்னை . அது ஒருவர் கண்களை மூடிக்கொள்வதால் நிகழ்வதல்ல. ஆனால் இருளில் ஒளியும், ஒளியில் இருளும் இருக்கிறதென்றான் கண்ணன். ஒன்று இருக்கையில் மற்றது தெரிவதில்லை அவ்வளவே. கதிரவன் உலகுக்கு ஒளி தரும் அதே வேளையில் நட்சத்திரங்களை மறைத்து விடுகின்றான். குழந்தையினுள் முதியவனும், முதியவனுள் குழந்தை எஞ்சியும் இருக்கிறார்கள். துயரத்தினுள் இன்பத்தின் விதையும், இன்பதினுள் துயரதிற்கான நெருப்பும் கூடவே உண்டு. ஒன்று வெளிப்படும்போது மற்றது தெரிவதில்லை அவ்வளவே.

ஒவ்வொரு மாணவனுள்ளும் உள்ள இயற்கை குணங்களையும், ஒளிந்திருக்கும் திறமைகளையும், அமிழ்ந்து கிடக்கும் உயர்வின் வாய்ப்புகளை கண்டறியவும், அவற்றை மேம்படுத்தவும் ஆசிரியர்கள் உதவ வேண்டும். ஒரு மரக்கன்றை நடுகையில் அதற்கு வேண்டிய நீரும், உரமும், சூரிய ஒளியும், காற்றும் கிடைக்கும் வண்ணம் பார்த்துக்கொள்கிறோம். ஆனால் அதிசயம் என்னவென்றால் வளரும்போது அது மரமாகத்தான ஆகிறதே தவிர காற்றாகவோ, நீராகவோ, எருவாகவோ, கதிர் ஒளியாகவோ ஆவதில்லை . அது விதையில் குடியிருந்த மரமாகத்தான் வளர்கிறது. நீங்கள் குழந்தைப் பருவத்தில் உங்கள் தனித்தன்மையை கண்டறிய பட்டபாட்டையும், எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் எண்ணிப் பார்த்து, அதே நிலையில் உள்ள மாணவர்களுக்கும் அவர்களின் சிக்கல்களை களைய உதவுங்கள்.

-ஸ்ரீ சத்ய சாயி பாபா | -23.3.84

நான் என்பதிலிருந்து நாம் என்பதாக ...
இதயத்திலிருந்து இறைவனை நோக்கிய ஒன்றுதலே வாழ்க்கை அதில் திறமைகள் தெய்வீகமானவை..
இறைவன் சத்யசாயிக்கு மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டியவை ..
திறமை என்பது தெய்வத்தின் பரிசு (Talent is Gift of God ) என ஒருமுறை மொழிபெயர்ப்பாளர் விவரித்த போது அதை இடைமறித்து திறமையே தெய்வம் தான் (Talent itself is God) என சத்ய சாயி தெய்வம் தெளிவுபடுத்தியது இங்கே குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக