தலைப்பு

புதன், 23 செப்டம்பர், 2020

மூன்றாவது | சத்ய சாயி பக்தர்களுக்கான ஒன்பது நன்னடத்தை நெறிகள் (9 Point Code of Conduct)

சத்ய சாயி நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு ஒன்பது நடத்தை விதிமுறைகளை சத்ய சாயி உலக நிறுவனத்திற்கு சுவாமியால் 1980இல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சாயி பக்தரும் இந்த ஒன்பது விதிமுறைகளையும் தவறாமலும் மிக மிக அத்தியாவசியமாகவும் கடைபிடிக்க வேண்டும். இந்த அற்புதமான நவநெறிக் கோட்பாடுகளின் ஆழமான விளக்கங்களும்.. ஆன்மீக வெளிச்சங்களும் இதோ...


3. குடும்பத்திலுள்ள குழந்தைகளை பாலவிகாஸ் வகுப்புகளில் சேர்த்து மனிதப் பண்பு நலன்களை வளர்த்துக் கொள்ள வழி செய்ய வேண்டும்: 

பக்தர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பரந்து விரிந்த நல்ல நோக்கோடு சத்ய சாயி சேவா நிறுவனத்தை ஆரம்பித்தார் இறைவன் சத்ய சாயி.

பல கைகள் இணைந்தால் தான் ஒரு பெரிய வேலையை செய்ய முடியும்.

பல இதயங்கள் இணைந்தால் தான் ஒரு பெரிய சேவையை அரங்கேற்ற முடியும்.

சத்ய சாயி நிறுவனத்தின் இதயப்பகுதியே பாலவிகாஸ்.

குழந்தைகளே நாளைய தேசத்தின் தூண்கள் என்கிறபடியால் வளரும் குழந்தைகளை அறநெறியோடு வளர்க்க 

பாலவிகாஸ் என்பது நன்னெறிகளுக்காக.. ஆன்மீக வாழ்க்கைக்காக... ஆரம்பத்திலேயே ஆழப்பதியும் விதை.

பாலவிகாஸ் வகுப்பு என்பது சனி / ஞாயிறான வாரம் இரு விடுமுறை தினங்களில் ... மற்றும் சில விடுமுறை தினங்களில்... குழந்தைகளை அழைத்து பால விகாஸ் குருவால் இறைவன் சத்ய சாயி வகுத்த நன்னெறி போதனைகளை குரூப் ஒன்று / இரண்டு / மூன்று எனப் பிரிவுகளாக / படிநிலையாக கற்றுத் தரப்படுகிறது.

அவரவர் சார்ந்த மதத்திற்கான மந்திரங்கள்/ ஸ்லோகங்கள்/ மகான்களின் வாழ்க்கை / பிற மதங்களைப் பற்றிய அறிவும் அதை மதிக்கும் மத நல்லிணக்கமும்/ நல்ல நடத்தை / ஒழுக்கம் / தூய்மை ..

அந்த தூய்மை என்பது அகம் மற்றும் புறம் என இரண்டும் சார்ந்த தூய்மையாகவும்...

தன்னம்பிக்கை ... தைரியம்.

சூழ்நிலையை எப்படி சமாளிப்பது‌..

அவர்கள் பள்ளி தேர்வெழுதும் போது பதட்டமின்றி நிதானமாக எப்படி எழுதுவது.. அவர்களின் உலகாயத கல்வியிலும் எவ்வாறு கவனம் சிதறாமல் பயின்று அதில் மேம்படுவது..

மனநிலை சமன்பாடாகிய Mind balancing / stress management ஆகிய பிரசாந்தியை எவ்வாறு வளர்ப்பது..

குறிப்பாக எவ்வாறு இறைவன் சத்ய சாயியிடம் பக்தியாக இருப்பது / சுவாமியின் போதனைகள் / வாழ்க்கை மகிமைகள் / பக்தர்களுக்கு அவர் புரிகின்ற அற்புதங்கள் என ஒவ்வொரு விதையாகப் பார்த்துப் பார்த்து குழந்தைகளின் உள்ளத்தில் மனிதப் பயன்பாட்டு ஒழுக்க நெறிமுறைகள் ஆழமாகப் பதித்து வளர்க்கப்படுகின்றன...

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அந்தப் பயிர் நல்ல விதமாக அதுவும் உயர் தெய்வீகமாய் விளைச்சல் காண்பதற்கு வீரியம் மிகுந்த நல்ல மண் தேவை .. அந்த இறை வீரியமே பாலவிகாஸ்.

நல்ல காற்றோட்டமான சூழ்நிலை தேவை .. அந்த புனிதமான சூழ்நிலையே பாலவிகாஸ்.

நீர் ஊற்றுவது போல் அந்தப் பிஞ்சு விதைகளுக்கு அறப் பண்புகள் ஊட்டுவதே பாலவிகாஸ் ... 

நல்ல பாதுகாப்பு அரண் தேவை .. குருமார்களின் அரவணைப்புடன் கூடிய பாதுகாப்பு வளர்ச்சியே பாலவிகாஸ்..

கதிரொளியாய் கடவுள் சத்ய சாயி ஒளி வளரும் குழந்தைகளுக்கு பாலவிகாஸ் வகுப்புகளின் வழியால் மட்டுமே அவர்களை நல்ல மனிதர்களாய் / உயர்ந்த பக்தர்களாய்/ பெற்றோர்க்கு நல்ல பிள்ளையாய்/ தேசத்தில் சிறந்த குடிமகனாய் வளர்த்தெடுக்கும். 

பாலவிகாஸை தவிர வளரும் குழந்தைகளுக்கு வேறு உபாயமே இல்லை.

பக்தன் பிரகலாதன் கொடுத்து வைத்தவன் அவனுக்கான பாலவிகாஸ் வகுப்புகள் அவன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே ஆரம்பித்துவிட்டது.

குழந்தைகள் வீட்டிலும் நாட்டிலும் சிறந்து விளங்க பாலவிகாஸ் வகுப்பில் சேர்ப்பதொன்றே பெற்றோர்களுக்கான ஒரே தீர்வு.

உடல்/ மனம்/ ஆன்மா ஆகிய மூன்றுக்குமே கல்வி தேவை.

உடல் சார்ந்த தேவையை பிற கல்வி நிலையங்கள் தருகின்றன..

ஆனால் மனம் மற்றும் ஆன்மா சார்ந்த தேவையை / கல்வியை பாலவிகாஸே பூர்த்தி செய்கிறது.

மூன்றும் பூரணமானால் மட்டுமே ஞானம் வருவதற்கான வாயப்பு பெரிதாய் இருக்கிறது.

பிற கல்வி பொருட் கல்வி

பாலவிகாஸ் கல்வியே அருட் கல்வி

வெறும் பணம் காய்க்கும் மரமாக குழந்தைகளை வளர்ப்பது தவறு. அவர்களை பண்புகள் பூக்கும் தோட்டமாக வளர்க்க பாலவிகாஸ் வகுப்புகளே அக மலர்ச்சிக்கான ஒரே வழி!

விழுக்கல்வி இங்கே மட்டுமே உலகில் கற்றுத் தரப்படுகிறது.

சமயம் சார்ந்த கல்வி மனதை பக்குவப்படுத்துகிறது..

சமயக் கல்வியே தக்க சமயத்தில் உதவும் பரிபக்குவ கல்வி.

பாலவிகாஸ் வகுப்பே பண்பு

பாலவிகாஸ் வகுப்பே பேரன்பு

சுயநலம் ஒழித்து பொதுநலம் வளர்க்க

கோபம் ஒழித்து சாந்தம் வளர்க்க...

பாலவிகாஸே பெரிதான வாய்ப்பையும் வாழ்க்கைக்கான வாசலையும் திறந்து விடுகிறது.

அறுக்கவே நாள் கணக்கில் வளர்க்கப்படும் கோழி போல் மதிப்பெண்ணுக்கே வளர்க்கப்படும் குழந்தைகளாக இன்றி ...

நன்னெறிகளை விதை ஊன்றி வளர்க்கும் போதே அதனால் அந்த குழந்தைகளுக்கும்.. அந்தப் பெற்றோர்களுக்கும்.. இந்த சமுதாயத்திற்கும் .. ஒட்டுமொத்த தேசத்திற்குமே நன்மை.

என் மகன் டாக்டர் .. இன்ஞ்சினியர் எனப் பெருமை அடித்துக் கொள்வதில் எந்த முழுமையும் இல்லை..

என் மகன் நல்லவன்.. மிக உயர்ந்தவன் ... சத்ய சாயி பக்தன் எனச் சொல்லிக் கொள்வதில் தான் பெற்றோர்களுக்கான பூரணத்துவமாகிய பரிபக்குவம் அடங்கி இருக்கிறது.

வெறும் வயிற்றுப்பாட்டுக்கான கல்வி வேண்டும். ஆனால் எண்சாண் உடம்பில் வயிறு ஒரு அங்கம் மட்டுமே எனப் புரிந்து கொண்டு...

இதயக் கல்வியை வளர்க்க..

ஆன்மக் கல்வியை ஆழப்படுத்த...

உயிர்க் கல்வியை உயர்த்த..

பாலவிகாஸ் வகுப்புகளால் மட்டுமே முடியும்.

கொள்ளை அடித்தால் கூட பொருள் ஈட்ட முடியும். ஆனால் அருளை ஈட்டுவது அவ்வளவு சுலபமே அல்ல...

அந்த அருளை பால்விகாஸ் வகுப்புகளே குழந்தைகளுக்கு தருகின்றன..

அதன் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் உணர்ந்து பாலவிகாஸ் வகுப்பிற்கு தங்கள் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும்.

இரண்டாவது படிநிலை குடும்பத்தோடு  பஜனில் கலந்து கொள்வது அடுத்த படிநிலையாக அந்தக் குடும்பத்தின் குழந்தைகளை பாலவிகாஸ் வகுப்புகள் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செய்வது.

இப்படிப் படிப்படியாக இறைவன் சத்ய சாயியே தனிமனிதனில் ஆரம்பித்து அவன் குடும்பம் தொடங்கி அவன் வாரிசுகள் வரை மேன்மையான ஆன்மீகம் அருள்கிறார்.

இப்படி ஒரு இறைவன் மிக எளிமையாக அதுவும் மிக மகிமையான ஆன்மீகத்தை தனது எந்த அவதாரத்திலும் போதிக்கவில்லை..

இறைவன் சத்ய சாயி வழிவகுத்த ஒவ்வொரு படிநிலையிலும் ஏறிவாழ்க்கையின் பயனைப் பெறுவோம்.

நவரத்தினம் ஒளிரும்

  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக