தலைப்பு

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

தமிழ் எழுத்தாளர் வியந்த பிரபஞ்ச விஞ்ஞானி இறைவன் பாபா!

Noted Tamil novelist and short story writer Sri Venugopalan, popularly known as 'Pushpa' Thangadurai

ஸ்ரீ வேணுகோபாலன் என்ற இயற்பெயரை கொண்டவர். இவர், புஷ்பா தங்கதுரை என்ற புணைப் பெயரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் சுமார் 2 ஆயிரம் நாவல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் நாடகம், சிறுகதை, நாவல், புதினம், திரைக்கதை, தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் மத, புனித யாத்திரைக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

விஞ்ஞானம் ஆராய்ந்து கொண்டே சென்றால் அதன் முடிவு ஆன்மீகமாக இருக்கிறது.. 
ஆராய்ச்சியின் வேர் ஆன்மீகத்தில் நிறைவடைகிறது.. விஞ்ஞானம் கங்கை என்றால் மெய்ஞானம் கங்கோத்ரி ... அந்த கங்கோத்ரி எனும் ஜீவ ஊற்றையே தன் உள்ளங்கையில் அடக்கி வைத்திருக்கிற இறைவன் சத்ய சாயியை வியக்கிறார் இந்த தமிழ் எழுத்தாளர்...

பாவை சந்திரன் குங்குமத்தில் பணியாற்றியபோது என்னை புட்டபர்த்தி போய்வந்து எழுத சொன்னார். அங்கே போனது பெரிய வாய்ப்பாக இருந்தது. ஹோவர்ட் மர்பட், எழுதிய சத்யசாயிபாபாவைப் பற்றிய "Man of Miracles' என்ற புத்தகம் உலகமெங்கும் கோடிக்கணக்கில் விற்றது. புட்டபர்த்தி போனபோது மர்பட்டைப் பார்க்க நேர்ந்தது. அங்கிருந்த பக்தப் பிரமுகர்கள் என்னை அழைத்துப் போய் ஹோவர்ட் மர்பட்டிடம் நான் பாபாவின் வாழ்க்கையைத் தமிழில் எழுதுவதாக அறிமுகம் செய்தார்கள்.


மர்பட் என்னிடம் ""எப்படி எழுதுகிறீர்கள்'' என்று கேட்டார். நான் பாபாவைச் சந்தித்தவர்களைப் பேட்டி கண்டு அதை எழுதுகிறேன் என்றேன்.
பிறகு பக்தப் பிரமுகர்கள் என்னையும் மர்பட்டையும் அழைத்துக் கொண்டு பல்கலைக்கழக கட்டிடத்துக்குள் சென்றார்கள். அங்கே வைஸ்சான்சலர் என்ற நிலையில் பாபா தங்கும் அறையையும் எங்களுக்குத் திறந்து காட்டினார்கள். பாபா உபயோகிக்கும் நாற்காலி முதலியவற்றைத் துணியால் மூடியிருந்தார்கள். அங்குள்ள பெரிய பீரோக்களையும் காட்டினார்கள். அதில் பாபா உண்டாக்கிய பல அற்புத பொருள்களை வைத்திருப்பதாகச் சொன்னார்கள். அவற்றை மிஸ்ஸிங் லிங்க் என்று கூறினார்கள். நான் உடனே விழித்துக் கொண்டேன். அதற்குக் காரணம் இருந்தது.

நான் பாபாவின் வாழ்க்கையை பல நூல்களிலும் ஒழுங்காகப் படித்து வருகிறேன். ஒரு புத்தகம், ஒரு துணுக்கு, ஒரு செய்தி விடாமல் படித்துவிடுவேன். விஞ்ஞானிகளிடம் அவர் பேசுவதையும் குறித்திருக்கிறேன். பகவந்தம் என்ற இந்திய அரசைச் சேர்ந்த விஞ்ஞானி. பாபாவின் சீடர். அவர் பாபாவிடம் விஞ்ஞான விஷயமாக அடிக்கடி பேசுவார்.


ஒருமுறை பாபா ஒரு கருங்கல்லை அவரிடம் காண்பித்தார். ""இது எப்போது உற்பத்தியாகியிருக்க முடியும்?'' என்று கேட்டார்.
""லட்சக்கணக்கான வருடங்கள் இருக்கும்'' என்று விஞ்ஞானி கூறினார். இது எப்போது அழியும்'' என்று மீண்டும் கேட்டார். அதற்கும் லட்சக்கணக்கான வருடங்கள் ஆகும் என்று கூறினார்.

பாபா கருங்கல்லை எடுத்தார். வாய் பக்கம் வைத்து ஊதினார். கருங்கல் கற்கண்டானது. இப்போது பாருங்கள். இது கற்கண்டாகி விட்டதனால் நாம் சாப்பிடலாம் ஆன்ம ஞானத்துக்கு முன்னால் விஞ்ஞானம் நிற்காது என்று கூறினார்.

அப்போது மிஸ்ஸிங் லிங்க் என்பதைப் பற்றி பேச்சு வந்தபோது, மனித குரங்கிலிருந்து மனிதன் உற்பத்தியாவதற்கு முன்னால் இன்னொரு பிராணி இருந்திருக்க வேண்டும். அது என்ன என்று தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறினார்கள்.

அதைத்தான் மிஸ்ஸிங் லிங்க் என்று கூறினார்கள். அதைப் பார்க்க வேண்டுமா என்ற பாபா உடனே கையை அசைத்து ஒரு பொம்மையை உருவாக்கினார். அது வாலில்லாத மனித குரங்காக இருந்தது.
அதைத்தான் மிஸ்ஸிங் லிங்க் என்று கூறினார்கள். அந்த பொம்மையைப் பார்த்தது பெரிய அதிர்ஷ்டம்.

-புஷ்பா தங்கதுரை 
ஆதாரம்: ஸ்ரீ சத்ய சாய்பாபா - ஸ்ரீ வேணுகோபாலன் | விகடன் பிரசுரம் 

காலப் பரிமாணமும்.. ஜீவ ராசிகளின் பரிணாமமும் .. கர்ம பரிமாற்றமும் இறைவன் சத்யசாயியின் பேராற்றலுக்கு உட்பட்டே செயல் புரிகிறது...
இதில் மனிதனுக்கு முன் மனிதக் குரங்குக்குப் பின் உள்ள ஒரு ஜீவனை இறைவன் சத்ய சாயி அறிந்திராமல் வேறார் அறிவார்..! 
படைப்பவனுக்கே பிள்ளைகளைத் தெரியும் ... ஆராய்ச்சிகளில் எல்லாம் சிறந்த ஆராய்ச்சி என்பது தன்னைத் தானே மனிதன் ஆராய்ந்து பார்ப்பதே.. 

"நான் யார்" என்ற மனித ஆராய்ச்சியே புனித ஆராய்ச்சி.‌ அதுவே தன்னோடு சேர்த்து இறைவன் சத்ய சாயியையும் தனக்குள்ளே  கண்டுணர வழிவகை செய்கிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக