தலைப்பு

புதன், 16 செப்டம்பர், 2020

கண்களில் இருந்த புற்றுநோய் சத்ய சாயி அட்சதையால் குணமான அதிசயம்!


இறைவன் சத்ய சாயி ஸ்பரிசம் பட்ட எதுவும் குணம் அளிக்கும் அதோடு கூட இறைவன் சத்ய சாயி புகைப்படத்தில் பட்ட எதுவும் அவரின் பேரருளை கிரகித்து ஔடத மகிமை பெற்று மனித ஆன்மாக்களை குணப்படுத்தும் என்பதற்கான ஒரு சிறு பரவச உதாரணம் இதோ‌..

டாக்டர். உபாத்யாயா அவர்கள் சாயி பக்தரும், டாக்டர். காதியாவின் நண்பரும் ஆவார். ஒரு நாள் ஒரு பக்தர் வேகமாக உபாத்யாயாவிடம் வந்து தன்னால் எதையும் சரியாக காணமுடியவில்லை என்றும், கடந்த இரண்டு நாட்களாக அப்படி உள்ளது என்றார். கண்களை சோதித்துப் பார்த்த உபாத்யாயா அவர்கள், அதிர்ச்சியுற்று இரண்டு கண் விழிகளும் (Eye Balls) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் இருவிழி கோலங்களையும் உடனே நீக்காவிடில், நோய் மூளைக்கு ஏறிவிடும் என்றும் கூறினார். மறுநாளே அறுவை சிகிச்சைக்கு தயாராக வர வேண்டும் என்றார்.


அந்த நோயாளி பக்தர் ஸதம்பித்துவிட்டார். உடனே வீட்டிற்குச் சென்று நேரே சுவாமி அலமாரிக்கு சென்று பகவானைப் பிரார்த்திக்க சென்றார். அங்கே பகவானின் போட்டோவிற்கு அருகில் லட்சார்ச்சனை அட்சதை இருப்பதை பார்த்தார். ஏற்கனவே லட்சார்ச்சனை செய்த இடத்திலிருந்து அட்க்ஷதையை கொண்டு வந்ததை ஞாபகம் கொண்டார். இந்த அட்க்ஷதைகள் பகவானின் ஆசியும், பிரபஞ்ச சக்தியும் கொண்டவை என கேள்விப்பட்டு இருக்கிறார். அதை சமைத்து உட்கொண்டார்.

அன்பு சாயி அன்னை வரமளித்தார்! மிக மிக வியப்பான விஷயமாக, காலையில் மிகத்தெளிவாக பார்வை இருந்தது! காலையில் டாக்டர். உபாத்யாயாவிடம் ஓடிச் சென்று விஷயத்தை கூறினார். டாக்டரும் சோதனை செய்து கேன்சர் மறைந்து விட்டது எனக் கூறினார். கண்கள் மிக இயல்பான நிலையில் இருக்கின்றன என்றார். டாக்டர் காதியாவிற்கு விஷயத்தை தெரிவித்து மற்ற பக்தர்களுக்கும் இதைத் தெரிவிக்கும்படி அவர் கூறினார்!

ஆதாரம்: Sai Smaran - P 271.
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 

🌻 எங்கே இறைவன் சத்ய சாயியின் பால் அன்பு இருக்கிறதோ அங்கே வலிமையான நம்பிக்கை இருக்கிறது.. எங்கே வலிமையான நம்பிக்கை இருக்கிறதோ அங்கே மகிமைகள் நிரம்பி வழிந்த வண்ணம் ஒவ்வொரு நொடியும் அற்புதமாகிக் கொண்டிருக்கிறது! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக