இறைவன் சத்ய சாயியோ இந்த அண்ட சராசரத்தில் நிகழும் யாவையுமே அறிவார்.. அவருக்கு கால / நேர/ தேச பேதமோ / தூரமோ இல்லை. காற்றுக்கும் உயிர் வாழ சுவாசம் அனுப்புபவரே அவர் தான்! தன்னை சரணடைந்த பக்தர்களின் பரம்பரையையே காப்பாற்றும் பரம கருணையான கடவுள் அவர் என்பதற்கான நிதர்சன அனுபவத்தின் ஒரு துளி இதோ...
ஒருமுறை டாக்டர் காடியா தன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு சுவாமியை தரிசிக்க புட்டபர்த்தி வந்திருந்தார். சுவாமியின் தரிசனம் எல்லாம் பெற்ற பின்னர், அவர் மட்டும் தங்கி விட்டு தன்னுடைய நண்பர்களை மங்களூர் அனுப்பி வைத்தார். காதியாவிற்கு அது நீண்ட விடுமுறை என்பதால் காடியா சுவாமியுடன் தங்க விருப்பப்பட்டார்.. சுவாமியம் சரி என்று சொல்லி விட்டார். பொதுவாக சுவாமி காலை மற்றும் மதியம் இன்டர்வியூ கொடுப்பார். ஆனால் அன்று 2.30 PM மணிக்கு டாக்டர். காதியாவை கூப்பிட்டு, "இன்றைய தேதியையும், நேரத்தையும் குறித்துக் கொள். இத்தருணத்தில், உன் தாயார் கிழக்கு ஆப்பிரிக்காவில், உகாண்டா - கம்பாலாவில் இரண்டு ஐரோப்பாவைச் சேர்ந்த டாக்டர்களால் அறுவை சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். நாடி மிகவும் கீழே போய்விடும். ஆனால் சுவாமி மீண்டும் நீண்ட ஆயுளை கொடுத்து விடுவேன்" என்றார்.
டாக்டர். காதியாவால் நம்பவே முடியவில்லை! இரண்டு நாட்கள் முன்பு தான் சகோதரியிடம் இருந்து கடிதம் வந்தது அனைவரும் நலமாக, மகிழ்ச்சியாக உள்ளோம் என்று! சுவாமியின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. இவரது சந்தேகத்தை புரிந்து கொண்ட சுவாமி, கம்பாலாவுக்கும், நம் நாட்டிற்குமான நேர வித்தியாசத்தை அறிந்து செக் செய்து கொள்ளச் சொன்னார். அப்பொழுது கம்பாலாவில் மதியம் 12 மணி.
கம்பாலாவில் திடீரென டாக்டர். காதியாவின் தாயாருக்கு சிறு குடலில் புண் ஏற்பட்டு, 12 மணிக்கு ஆபரேஷன் செய்ய தீர்மானித்தனர். சுவாமி சொன்னதெல்லாம் உண்மை. உறவினர்களை அருகே வரச் சொல்லி விட்டனர் மருத்துவர்கள். ஏனெனில் நாடி தளர்ந்து கொண்டே வந்தது!
அப்பொழுது காதியாவின் சகோதரி தனக்கு தன் அம்மா அனுப்பியிருந்த விபூதி பொட்டலம் நினைவுக்கு வர உடனே அதை எடுத்து தாயாரின் உடல் முழுவதும் பூசினார். 1/2 மணிநேரத்தில் தாயார் கண்விழித்தார். டாக்டர்கள் அது என்ன வெள்ளை பவுடர் என வினவினர். டாக்டர். காதியாவின் சகோதரி விபூதியின் மகிமையை விளக்கினார்.
டாக்டர். காதியா தன்னுடைய தாயாரை காப்பாற்றியதற்கு சுவாமிக்கு நன்றி கூறிய போது சுவாமி, "உங்களின் ஒரே ஆசை என்பது கடவுளின் கருணையை அடைய மட்டுமே ஆசைகொண்டு அதற்கான செயல்களை செய்யுங்கள்! உனக்கு எது மிகச் சிறந்தது என்பதை இறைவன் முடிவு செய்வார்- அவர் கையில் விட்டு விடுங்கள்!" என்றார்.
ஆதாரம்: Sai Smaran, Page 88
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்.
🌻 இறைவன் சத்ய சாயி சங்கல்பத்திற்கு நம் வாழ்வை விட்டுவிட வேண்டும். அவரின் பாதத்தில் நம் இதயத்தைப் படைத்துவிட வேண்டும். அப்படி சரணாகதி அடைந்துவிட்டால் துயரமோ/ தீங்கோ/ பயமோ/ பதட்டமோ எதுவும் எள் முனை அளவும் கூட நம்மை ஒருகாலும் அண்டாது!! 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக