தலைப்பு

புதன், 23 செப்டம்பர், 2020

ரத்தமின்றி ரணமின்றி சத்ய சாயி புரிந்த அறுவை சிகிச்சை!

 

இறைவன் சத்ய சாயி அருள் புரிந்து வருவதில் தான் பூமி இயங்குகிறது.  இறைவன் சத்ய சாயியை மனம் புரிந்து வருவதில் தான் வாழ்க்கையே பேரானந்தமாகி வருகிறது என்பதற்கான உதாரணமும்.. அதில் சுவாமி ஆற்றிடும் அற்புத சிகிச்சை முறையும் இதோ ...


சுப்பாராவ் என்பவரின் மனைவி திப்பம்மா ஸாயியின் இடத்தில் மிக்க நம்பிக்கை கொள்ள ஆரம்பித்து விட்டார். மிகுந்த பக்தியும், நம்பிக்கையும் சேரக்கொண்டு, தினமும் புக்கபட்டணத்தில் இருந்து, புட்டபர்த்திக்கு நடந்தே சென்று பாபாவிற்கு பிரசாதம் சமர்ப்பிப்பார். அவரது பெரிய மகள் சத்யவத்தம்மா, தனது B.Sc., படிப்பை அண்ணாமலை பல்கலைகழகத்தில் முடித்து விட்டு புக்கப்பட்டிணம் திரும்பியிருந்தார், அவரது பெற்றோர்கள் பெற்ற ஸாயியின் அனுபவங்களை கூறக் கேட்டு, அவர் இது “மலையாள வித்தை” என்று கூறி, பொருட்படுத்தாமலே இருந்தார்.
  

ஒரு நாள் ஸத்யவத்தம்மாவையும் புட்டபர்த்திக்கு திப்பம்மா அழைத்துச் சென்றார். பழைய மந்திரில் பஜனை நடந்து பொண்டிருந்தபோது பாபா பஜன் குழுவிலிருந்து ஒருவரை அழைத்தார் அவருக்கு இதயத்தில் கட்டி இருந்தது. ஒரு மேஜையில் அவரை படுக்க வைத்தார், அப்பொழுதே அறுவை சிகிச்சைக்கான கருவிகளை வரவழைத்துக் கொண்டார். சத்யவத்தம்மாவும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, ஸ்வாமி அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து  கட்டியை அகற்றினார். கட்டியை பஜன் குழுவிற்கும் காட்டினார். சத்யவத்தம்மா வியப்பின் உச்சிக்கே போய்விட்டார். சிகிச்சை முடிந்ததும் நோயாளியை ஏதாவது சாப்பிட வேண்டுமா என்று கேட்டார்!. அதன் பிறகு அறுவை சிகிச்சை பெற்றவர், நீண்ட வருடங்களுக்கு வாழ்ந்தார்! 1950ல் இந்த சம்பவம் பழைய மந்திரில் நடந்த பொழுது, ஸ்வாமிக்கு 23 வயது தான்! டீன் ஏஜ் பையன் போல் இருந்தார். ஒரு அறுவை சிகிச்சை செய்வதைப் பார்க்க அந்த குழுவினருக்கு எவ்வளவு ஆச்சர்யம் இருந்திருக்கும்! சுப்பாராவின் மொத்த குடும்பமும் பகவானின் தீவிர பக்தர்களாகிவிட்டனர்.

ஆதாரம்: BHAKTHODHAARAKA SRI SATHYA SAI – P. 39,40
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

🌻 ரத்தமின்றி.. ரணமின்றி.. மருத்துவமனையின்றி..... கட்டணமின்றி...  இறைவன் சத்ய சாயி ஆற்றிய / ஆற்றிக் கொண்டுவரும் இதைப் போல் பல அறுவை சிகிச்சைகளை வியந்து என்ன சொல்ல..!!! சுவாமியின் கருணைக்கு நம்மால் என்ன பெரிதாக தந்துவிட முடியும்..? நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் சுவாமி திருப்பாதங்களில் ஐயமின்றி முழுதாய் சரணாகதி மட்டுமே! 🌻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக