தலைப்பு

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

இறைவனின் ஆடைபட்டே குணமான ஒரு பக்தரின் விரல்!


இறைவன் சத்ய சாயி எங்கெல்லாம் நடமாடுகிறாரோ அங்கெல்லாம் ஆரோக்கியமே நடமாடுகிறது.. அது சாதாரண ஆரோக்கியம் அல்ல... அந்த ஆரோக்கியம் உடல்.. மனம் கடந்து ஆன்மாவையே கரையேற்ற வல்லது.

நளினி கோபால் ஐயா அவர்கள் ஒரு ஏற்றுமதி-இறக்குமதி கம்பெனியில் பிசினஸ் எக்ஸிக்யூட்டிவாக இருக்கிறார். தனக்கு ஏதாவது சங்கடங்கள் ஏற்பட்டால், சாயியை அழைத்த போதெல்லாம் பேசியும், பேசாமலும் கூட அனுக்றகித்த அதிசயமே, இந்த சம்பவம். - நமக்கு சுவாரஸ்யம்!

ஒருநாள் பெங்களூரில் தனது இல்லத்தில் இருந்து, பிருந்தாவன் நோக்கி வேகமாக தனது காரில் விரைந்து சென்று கொண்டிருந்தார். ஏற்கனவே தரிசனத்திற்கு நேரம் ஆகி கொண்டு இருந்தது! வழியில் சில பெண்கள் பஸ்சுக்காக காத்து கொண்டு இருந்தனர். அவர்களை செல்ல வேண்டிய இடத்தில் இறக்கி விடுவதாக கூற, தாங்களும் ப்ருந்தாவனில் தரிசனத்திற்காகச் செல்வதாகவும், மிகுந்த சந்தோஷத்துடன் காரை திறந்து 6 பேர் ஏறிக்கொண்டனர். மகிழ்ச்சியில் சாயியைப் பற்றி பேசிக்கொண்டே ஏறி கார் கதவை வேகமாக ஒருவர் சாத்தி விட்டார். நளினி நளினி கோபால் அவர்கள் தனது ஆள்காட்டி விரலும், நடுவிரலும் கதவு இடுக்கில் மாட்டிக்கொள்ள, மெதுவாக விடுவித்துக் கொண்டு வண்டியை ஓட்டலானார். வலி தாங்கவில்லை. விரல்கள் நீலமாகி, வீங்கி விட்டன. பகவானை நினைத்து கொண்டே வலியோடு ஓட்டிச் சென்றார்.


 பிருந்தாவனை நெருங்கியதும் அனைவரும் இறங்கி ஓடிச்சென்று தரிசனத்திற்கு இடம் பிடிக்கலாயினர். நளினி அவர்கள் மெதுவே சென்று அமர்ந்தார். ஸ்வாமி நடந்து நடந்து வந்து, இவரது வரிசைக்கு அருகே புன்முறுவலுடன் வந்து கடந்து செல்கையில், சுவாமியின் அங்கி இவரது விரல்கள் மீது பட்டு நகர்ந்தது. தரிசனம் முடிந்து மீண்டும் வீடு திரும்ப காரை எடுக்கும் பொழுது தான் உணர்ந்தார் - கைவிரல்கள் வீக்கமும் நிறமும் மாறி சாதாரணமாக வலியற்று இருந்தன! சுவாமி கூறுவார், "நீங்கள் சேவையை செய்யுங்கள். உங்கள் சிரமங்களை நான் போக்குவேன்!"

ஆதாரம்: NALINI GOPAL AYYA - SAI THE OMNIPRESENT P 10, 11
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

🌻 இறைவன் சத்ய சாயி மூச்சுக் காற்றே இந்த அண்டசராசரத்தை வாழ வைக்கிறது. அவரை நினைத்தலே முக்தி.. அவரின் பெயர் அழைத்தலே பரமானந்தம் அதுவே பரம உயர்வை அளிக்க வல்லது என்பதே பூவுலகில் என்றும் நிரந்தர சத்தியம். 🌻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக