தலைப்பு

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

திருமதி வேங்கடமுனியின் புடவையில் பிடித்த தீயை இருந்த இடத்திலிருந்தே அணைத்த சாயி!


இறைவன் சத்ய சாயி ஷிர்டி சாயியாய் அவதரித்த போதே தீயினுள் விழப்போன குழந்தையைக் காப்பாற்றி .. தன் மலர்க் கைகளில் தீக்காயம் வரவழைத்துக் கொண்ட மகா கருணை மிகு கடவுள் தான். இதில் அதிசயம் ஏதும் இல்லை.. இரு சாயியும் ஒரு சாயியே என்பதை உணரும் படியும்.. அந்த இரு தோற்றமும் இறைவனே என உணர்த்தும்படியுமான உயரிய அனுபவம் இது... 

ஒரு சமயம் சுவாமி ஒயிட்பீல்டில் 50 பேர் கொண்ட ஒரு குழுவிடம் உரையாடிக்கொண்டிருந்தார். இதற்கும் அதிகமான பக்தர்கள் அடுத்த அறையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். பேசிக்கொண்டே இருக்கும்பொழுது, திடீரென ஸ்வாமி தனது இரு கரங்களையும் சேர்த்து எதையோ பலமாக தேய்ப்பது போன்று செய்தார். என்ன என யாரோ வினவிய பொழுது திருமதி. வேங்கட முனியின் சேலை தீ பற்றிக் கொண்டது. கைகளால் அணைத்து விட்டேன் என்றார்.


ராவ் என்ற ஒருவர் பக்கத்து அறையிலிருந்து, கேட்டுக்கொண்டிருந்தவர், இது உண்மையா என அறியும் பொருட்டு, எழுந்து வேங்கடமுனிக்கு டெலிபோன் செய்து விசாரித்தார். வேங்கடமுனியோ மெட்ராஸில் இருக்கிறார்கள்! எதுவும் பாபாவிடம் மறைக்க முடியாதல்லவா? அவர், "ராவ், இங்கு முன்னால் வா! டெலிபோனில் என்ன கேட்டு தெரிந்து கொண்டாய்"? சொல் என்றார். ராவ் ஸ்வாமியிடம் மன்னிப்பு கோரினார்! உத்தரவு கேட்காமல் டெலிபோன் செய்தது தவறு; மன்னிக்கவும் என்றார். "கவலைப்படாதே! பாபாவின் இஷ்டமும் அதுதான்! உன்னை டெலிபோன் செய்ய சொன்னவனும் நான் தான்" என்றார்!

போனில் வேங்கட முனி, தனது மனைவி கேஸ் (gas) அடுப்பு பற்ற வைக்கும் பொழுது தீக்குச்சி நைலான் சேலையில் பற்றி கொண்டதாகவும், சாய்ராம் என மனைவி கூவியதும், யாரோ 2 கால்களையும் பிடித்து தீயை அணைத்ததையும் உணர்ந்தார் என்றும் கூறினார். இவ்வாறு திருமதி. வெங்கடமுனியை சுவாமி காப்பாற்றினார்.

ஆதாரம்: Sai Samarpan P 284
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி 

இறைவன் சத்ய சாயியால் இயலாதது என்ன?
அவர் சங்கல்பித்து நிகழாதது என்ன?
அவர் திருக்கரம் தொட்டு துலங்காதது என்ன?
அவர் திருப்பார்வை பட்டு விளங்காதது என்ன?
இறைவன் சத்யசாயியே ஒரே பிரபஞ்சப் பேரியக்கப் பரம்பொருள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக