தலைப்பு

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி குடும்பத்தில் பகவான் நிகழ்த்திய அற்புதம்!


அஞ்சலிதேவி குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தை, வலது கிட்னி இல்லாமல்  பிறந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலைமையில்.. சுவாமி கருணைகொண்டு எவ்வாறு அந்த குழந்தைக்கு கிட்னி கொடுத்து காப்பாற்றினார் என்ற அற்புதத்தை விவரிக்கும் பதிவு..

பகவானின் அத்யந்த பக்தையும், புகழ் பெற்ற தெலுங்கு நடிகையுமான திருமதி . அஞ்சலி தேவி குடும்பம் , 50 வருடங்களுக்கும் மேலாக ஸ்வாமிக்கு மிகவும் பிடித்த பழம் பக்தர்கள் குடும்பங்களில் மிகவும் முதன்மையான ஒன்று.

அஞ்சலிதேவிக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும், ஸ்வாமியிடமிருந்து   கிடைக்கப் பெற்ற  தர்ஷன்,.ஸ்பர்ஷன்,.சம்பாஷன்  நிகழ்வுகளும், லீலைகளும்,அனுக்ரஹிக்கப்பட்ட ஏராளமான ஆசீர்வாதங்களையும் ஒரு தெய்வீக குவியல் என்றே கூறலாம்.

அந்த வகையில் ஒரு முறை அஞ்சலி தேவியின் அத்தை வழி பேத்தி குழந்தை ஒன்று, பிறக்கும்போதே வலது புற கிட்னி இல்லாமல் பிறந்திருந்தது. பல பெரிய மருத்துவர்களும்  இக்குழந்தை உயிர் வாழ்வதற்க்கு மிகக் குறைந்த அளவே வாய்ப்பிருப்பதாக நம்பிக்கை தளர்ந்து கூறினார்கள்.

அனைத்து அறிவியல் பூர்வமான மருத்துவங்களும் கைவிட்ட பிறகு, கடைசியாக குழந்தையை ஜனிக்க வைத்த ஸ்ருஷ்டி கர்த்தாவாகிய ஸ்வாமியிடமே சரணாகதி அடைவது என்று அஞ்சலி தேவி தீர்க்கமாக முடிவெடுத்து, அந்த நேரத்தில் ஸ்வாமியின் புதுடில்லி விஜயத்தின் போது தர்சனத்திற்க்கு  குழந்தையுடன் வந்து அமர்ந்திருந்தார். ஸ்வாமி அவர்களை ஆசீர்வதித்து, அவர்களின் பிரச்னைகள் அனைத்தும் தமக்கு தெரியுமென்றும், மார்ச் மாதம் பர்த்திக்கு வரும்படியும் கூறினார். அதன்படி குழந்தையுடன் தர்சனத்திற்க்கு மார்ச் மாதம் புட்டபர்த்திக்கு வந்து சேர்ந்தனர். சரியாக மஹாசிவராத்திரிக்கு முதல் நாள் வந்திருந்த படியால், வழக்கமான சிவராத்திரி பக்தர்கள் கூட்டத்தால் ப்ரசாந்திநிலையமே நிரம்பி வழிந்தது.

 அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டத்தால் ஸ்வாமியை அருகாமையில் தரிசிக்கும் வாய்ப்பும், ஸ்வாமியிடம் சம்பாஷிக்கும் பாக்கியமும் தனக்கு கிடைப்பதற்க்கு  குறைந்த வாய்ப்பே இருப்பதாக ,மனம் தளர்ந்து போய், குறைந்த பட்சம் ஸ்வாமியின் கடைக்கண் பார்வையாவது நம் மீது விழுமா ? என்று பலவித சந்தேகங்களோடும், குழப்பங்களோடும் அமர்ந்திருந்தனர் அஞ்சலிதேவி குடும்பத்தினர்.


ஆனால் இறைவனின் கருணையோ தென்றலாக இவர்களை நோக்கி வீசியது. ஆம், ஸ்வாமி, நிரம்பி வழியும்  பக்தர்களுக்கிடையே, இவர்களை நோக்கி வந்தார், குழந்தையின் சிரஸின் மேல் தன் அபய ஹஸ்த்தத்தை ஸ்பரிசித்து  ஆசீர்வதித்தார், தெய்வீக மணம் கொண்ட விபூதியை சிருஷ்டித்து குழந்தையின் நாக்கில் தன் அபயஹஸ்தத்தினாலேயே வைத்தார்.

பின் ஸ்வாமி  அவர்களிடம் "குழந்தை குணமாகி விட்டது, நீங்கள் போகலாம்" என்று ஆசீர்வதித்து அனுப்பினார்.

இவர்களும் சென்னை வந்ததும் ,மீண்டும் டாக்டர்களிடம் குழந்தையை பரிசோதித்தபோது, அனைவரும் உச்சகட்ட வியப்பில் உறைந்து போக காரணம்  "குழந்தை வலது பக்க கிட்னியோடு ஆரோக்யமாக விளையாடிக் கொண்டிருந்தது."

கிட்னி இல்லாமல் பிறந்த குழந்தைக்கு, கிட்னியை கொடுத்து காப்பாற்றி, தன்னை கட்டுப்படுத்துவது பக்தர்களின் ஆழ்மனதிலிருந்து வரும்  அன்பான நிர்மலமான ப்ரார்த்தனை ஒன்றே, என்பதை சொல்லாமல் சொல்லியது தெய்வத்தின் தாய்மை அன்பு.

மொழிமாற்றம்: ஸ்வாமியின் கருவியாக... சாய் முரளி, சேலம், TN.,India.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக