தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரேம சாயி பாபா
- பிரசாந்தி நிலையம்
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- தெய்வீக நிகழ்வுகள்
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
ஞாயிறு, 31 மே, 2020
எல்லா மதங்களையும் அரவணைத்த இரு சாயி இறைவன்!
சாதம் ஒன்றே அதிலிருந்து சமைத்து வரும் உணவு வகை வெவ்வேறு வடிவங்கள்.. வெவ்வேறு ருசி ஆனால் அவை ஆற்றும் பசியில் வரும் நிறைவும் திருப்தியும் ஒன்றே என்பது போல் இறைவன் ஒன்றே அதன் வடிவங்களான ராமர்.. கிருஷ்ணர்.. ஷிர்டி சாயி.. சத்ய சாயி வெவ்வேறு வடிவங்கள்.. ஆனால் அவர்கள் பக்தர்களுக்கு உணர்த்திடும் அனுபவம் ஒன்றே..
உலகில் அவதரித்த இறைவனான இரு சாயியும் மதங்களைக் கடந்தவர்கள். சீரடி சாயி பாபாவும் சத்ய சாயிபாபாவும் சூழ்ச்சியால் செய்யப்படும் மதமாற்றங்களை வெறுத்தவர்கள்.
சனி, 30 மே, 2020
வெறுத்து ஒதுக்கியவரின் வீட்டுக்கு வந்த சாயி இறைவன்!
கடவுள் தனக்குச் சொந்தமான தன்னோடு தொடர்பு கொண்ட ஜீவன்களை தன்னிடம் இழுத்துக் கொள்ள என்னென்ன லீலைகளைப் புரிகிறார். எந்த அளவிற்கு இறங்கி வருகிறார் என்பதற்கு சாயி பக்தை சாருமதியின் அனுபவங்களே சரியான உதாரணம்...
சாருமதி சொல்கிறார்.. ஆரம்பகாலத்தில் ஸ்வாமி பாபா என்றால் ஆகாமலிருந்தது எனக்கு. பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது என்னுடன் படித்த மீனாட்சி என்ற தோழியின் மூலம் தான் பாபாவின் படத்தைப் பார்த்தேன். எல்லாரும் மதிய நேரத்தில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் போது வியாழக்கிழமைகளில் இவள் மட்டும் சாப்பிடாமல் ஒதுங்கிப் போவாள்.
வெள்ளி, 29 மே, 2020
இறைவனோடு நெருங்கிய கஸ்தூரி மந்திரம்!
ஏன் மந்திர உபதேசம் பெற வேண்டும் என்பதை இறைவன் சத்யசாயி கேட்டு அவரே அக வெளிச்சமாய் தெளிவையும் தருகிற அற்புத கலந்துரையாடல் இதோ..
ஒருமுறை பேராசிரியர் கஸ்தூரி அவர்களுக்கு (பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியர்) பகவானிடமிருந்து ஒரு மந்திரம் பெற்றுக் கொள்ள மிக விருப்பமாக இருந்தது. பாபாவிடம் தனது அவாவைக் கூறி, கங்கையில் புனித நீராடிவிட்டு காலை முழுவதும் விரதமிருந்தார்.மதியம் வந்தது, ஆனால் சுவாமி மந்திரம் ஏதும் உபதேசிக்கவில்லை.
வியாழன், 28 மே, 2020
இரு சாயியின் சூட்சும சரீர பயணம்!
இறைவன் ஷிர்டி சாயி தனது சூட்சும சரீரத்தில் பல முறை பயணித்திருக்கிறார். பல பக்தர்களை ஆபத்திலிருந்தும் மீட்டிருக்கிறார். அந்தந்த பக்தர்களின் இல்லத்திற்கு விஜயம் செய்திருக்கிறார். முக்கியமாக மூன்று நாள் உடல் இறந்த நிலையில் சூட்சும பயணம் மேற்கொண்டு .. இங்கே அவரைப் புதைக்க வேண்டும் என்ற சர்ச்சையும் களேபரமும் உருவாக .. சாயி தன் வாக்குப்படி மூன்றாவது நாள் சூட்சும பயணம் முடித்து உடலுக்கு திரும்புகிறார்.பக்தர்கள் பரவசம் அடைகின்றனர்.
புதன், 27 மே, 2020
விழப் போனவரை தடுத்த சாயி தெய்வம்!
ஓம் ஸ்ரீ சாயி ஆபத்பாந்தவாய நமஹ என்ற அஷ்டோத்திர விவரிப்பு அனுபவப்பூர்வமான சத்தியம். ஆபத்திலிருந்தும்.. பெரும் விபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் தெய்வம் சத்யசாயி என்பதன் அனுபவம் இதோ...
அனந்தப்பூரைச் சேர்ந்த திரு. சிதம்பரப்யா என்னும் அட்வகேட் சென்னையில் ஒரு வங்கி மகாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு திரும்ப வந்து கொண்டிருந்தார்.
செவ்வாய், 26 மே, 2020
திங்கள், 25 மே, 2020
பாபாவை வழி காட்டுமாறு கேளுங்கள்! ஒப்புதலை அல்ல!
வழி காட்டுமாறு கேளுங்கள்! ஒப்புதலை அல்ல!
Ask for guidance and not approval
ஞாயிறு, 24 மே, 2020
வெள்ளி, 22 மே, 2020
தொலைபேசியில் அழைத்த தெய்வம்!
கடவுளின் செயல்கள் தான் எத்தனை ஆனந்தமானவை! அர்த்தமுள்ளவை! ஒவ்வொரு பக்தருக்குள்ளும் சுவாமி சத்ய சாயிபாபா என்னென்ன உணர்வுகளை ஏற்படுத்தி எத்தனை விதமான விசித்திர அனுபவங்களைத் தந்திருக்கிறார் தந்து வருகிறார் என்பதை உணரும் போதெல்லாம் அகண்ட பிரம்மாண்டமான அந்தப் பரம்பொருளின் எல்லையற்ற மகிமையில் மூழ்கிப் போய்விடுகிறது மனம்...
வியாழன், 21 மே, 2020
முரட்டு ஷிர்டி சாயி பக்தை சத்ய சாயி காலடியில் மலர்ந்த அனுபவம்!
இங்கே பலர் இறைவனான ஷிர்டி சாய்பாபா பக்தர்கள். மகிழ்ச்சியே. ஆனால் அந்தப் பலரில் ஒருசிலருக்கு ஷிர்டி சாயியும்.. புட்டபர்த்தி சாயியும் ஒருவரா எனும் சந்தேகம்... ஏன்.. ஷிர்டி சாயியை நேரில் தரிசித்திருந்த பலருக்குமே இறைவன் சத்யசாயிடம் ஆரம்ப காலத்தில் சந்தேகம் இருக்கவே செய்தன.. அந்த சந்தேகங்களை எல்லாம் நீக்கி இரு இறை உருவங்களும் ஒன்றே என்பதைத் தெளிவாக்கினார் இறைவன் சத்ய சாயி.
புதன், 20 மே, 2020
செவ்வாய், 19 மே, 2020
ஞாயிறு, 17 மே, 2020
17 வருடங்கள் கை ஊனமுற்றிருந்த லட்சுமியை குணமாக்கிய சுவாமி!
தெலுங்கு சனாதன சாரதியின் துணை ஆசிரியராகப் பணியாற்றிய போது, ஒரு பெண்மணி தனது அனுபவத்தை, அற்புதத்தைப் பகிர்ந்து கொண்டார். அப்பொழுதெல்லாம் அத்தகைய செய்திகள், சனாதன சாரதியில் வெளியிடப்பட மாட்டாது. என்னுடைய நண்பர் ஸ்ரீ கிருஷ்ண மோஹன் ராஜு, அச்சம்பவத்தை அறிந்து, தன் தெலுங்கு மாத இதழான 'ஸ்ரீ வாணி' யில் வெளியிட்டார்.
அதன் சுருக்கம் ;
அதன் சுருக்கம் ;
சரணாகதி தத்துவத்தை விளக்கும் V.M.R.ஷர்மா அவர்களின் பதிவு:
சனி, 16 மே, 2020
கனடாவைச் சேர்ந்த பையனின் கேன்சர் நோய் குணமாக்கப்பட்டது! !
1978ல் கோடைப் பயிற்சி வகுப்புகளின் போது, கனடாவின் வான் கூவர் என்னும் இடத்திலிருந்து ஒரு பையன் வந்திருந்தான். அவன் டாக்டர் காதியாவை தனக்கு உள்ள பிரச்சினையைப் பற்றி விளக்குவதற்காக அணுகினான். அவனுக்கு கழுத்தில் வீக்கமும் கட்டியும் இருந்தன. அவனுக்கு ஏற்கனவே தைராய்டு புற்றுநோய் வந்து, கட்டி அகற்றப்பட்டது. மருத்துவர்கள் இவனை இப்பொழுது சம்மர் கேம்பிற்கு செல்லலாம் என்றும், ஏதாவது தொந்தரவு இருந்தால் உடனே கேன்சர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
வெள்ளி, 15 மே, 2020
புதன், 13 மே, 2020
ஏன் தியானம் செய்ய வேண்டும்?
ஒரு குழந்தைக்கு சொல்வதைப் போல் மிகத் தெளிவாக .. மிக எளிமையாக அரிய பெரிய தியான சாதனையைச் சொல்லிக் கொடுக்கிறார் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி இதோ...
ஒரு குழந்தை நடக்கத் துவங்கும் போது, தாய் அதை வீட்டில் படிப்படியாக நடக்கக் கற்றுக் கொடுத்து,பின் தெருவில் நடக்க அனுமதியளிக்கிறாள். அதற்குப் பதிலாக அவனை வீதியில் நேராகவே நடக்கச் செய்தால், அவன் எவ்வாறு கற்றுக்கொள்வான்? அதுதவிர, ரஸ்தாவிலுள்ள (சாலையிலுள்ள) எவ்வளவு அபாயங்களை அது எதிர் கொள்கிறது?ஆகவே முதலில் உள் அம்சங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு வெளி அம்சங்களான நீதிநெறி நடத்தை போன்றவை சுலபமாகி விடுகின்றன.உள் முன்னேற்றத்தின் அடிப்படையில் இல்லாத ஒழுக்க நெறிகள் ஆழ்ந்தவையல்ல. ஆகவே ஆத்ம உணர்வை வளர்த்துக் கொள்ளுதலே முதற்செயலாகும்.
செவ்வாய், 12 மே, 2020
சாயி கிருஷ்ணாவின் குடும்பம் பகவானின் பொற்பாதங்களுக்கு கொண்டுவரப்பட்டது!
தன் மேல் நம்பிக்கை உடையவர்களிடம் அதிக நம்பிக்கையை உண்டாக்குவதும்.. நம்பிக்கையே இல்லாதவர்களிடம் பக்தி வரவழைப்பதுமே இறைவன் சத்ய சாயியின் இந்த அவதாரத்து மகிமை. அதில் ஒரு நற்சான்று இதோ...
2000ம் ஆண்டு ஒருநாள் இரவு 11.30க்கு அவருடைய தந்தையார் ஒரு பெரிய விபத்தில் சிக்கி மண்டை எலும்பில் முறிவு ஏற்பட்டு, அதிக ரத்தப்போக்குடன் யாரோ ஒரு நல்லவரால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
திங்கள், 11 மே, 2020
சனி, 9 மே, 2020
லிகித ஜபம் செய்வது எப்படி?
லிகித ஜபம் என்பது நாமஸ்மரணத்தின் ஒரு வகை ஆகும். லிகித ஜபம் என்பது இறைவனின் நாமத்தைத் திரும்பத் திரும்ப எழுதுவதாகும். லிகித ஜெபத்தை எழுதுபவர்களுக்கு ஒருமுக நோக்கு சக்தி அதிகரிக்கிறது. அது எழுதுவோருக்கு சரணாகதி உணர்வைக் கொடுக்கிறது. அது உள்ளுறையும் உணர்வுக்கு ஊக்கத்தையும் அமைதியையும் அளிக்கிறது. நாம் அனுதினமும் குறைந்த பட்சம் 108 தடவையாவாது இறைநாமத்தை எழுத வேண்டும். லிகித ஜெபத்தைத் தொடர்ந்து விடாமல் இருபத்து ஒரு நாட்கள் எழுதி வந்தால் அது பின்னர் ஒரு தினசரி நாமஸ்மரணப் பயிற்சியாக பழக்கத்தில் வந்து விடும்.
வெள்ளி, 8 மே, 2020
வியாழன், 7 மே, 2020
உலகப்புகழ் பெற்ற 'ஆரா’(aura) ஆராய்ச்சியாளர் டாக்டா் ப்ராங் பாரனோஸ்கின் அனுபவம்!
ரஷ்யாவைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற 'ஆரா’(aura) ஆராய்ச்சியாளர் திரு. டாக்டா் ப்ராங் பாரனோஸ்கி பாபாவின் 'ஆரா'வை ஆராய்ச்சி செய்ய இந்தியாவுக்கு வந்த பின்னணி கதை:
அப்போது சுவாமிக்கு 10 வயது. கமலாபுரம் என்ற ஊரில் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு ரமேஷ், ரகு என்ற இரண்டு நண்பர்கள். மூன்று பேரும் மாலையில் ரயில்வே ஸ்டேஷனுக்கு போவார்கள். அங்கு அனந்தப்பூர் - கடப்பா ரயில் வண்டி ஒன்று வந்து நிற்கும். அது கிளம்பும் வரை இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு திரும்புவார்கள். இது பல நாட்கள் நடந்து வந்த வாடிக்கையான விஷயம். ஒரு நாள் இதே போல் ஸ்டேஷனுக்கு போயிருந்தார்கள். அந்த வண்டியில் ஒரு வெள்ளைக்காரர் (வெளிநாட்டவர்) இருந்தார். பெயர் உல்ஃப் மெஸ்ஸிங்.
புதன், 6 மே, 2020
பரமாத்மா ஸ்ரீ சத்ய சாயியை சந்தித்த மகாத்மா காந்தி!
சத்யம் தர்மம் சாந்தி ப்ரேமை அஹிம்சை அத்தனையும் ஒரு உருக்கொண்டு, இத்தரையில் இறங்கி, அத்தனை மக்களையும் அன்பு வழி நடத்தும் சத்திய சாயியை சந்தித்து தரிசிக்காத பிரபலங்களே இல்லை. 'என் வாழ்க்கையே என் போதனை ' என்று, உபதேசித்து அதன் வண்ணம் நடந்து காட்டிய பாபா நமக்கெல்லாம் ஈடு இணையற்ற வழிகாட்டும் தெய்வமல்லவா?
செவ்வாய், 5 மே, 2020
திங்கள், 4 மே, 2020
சனி, 2 மே, 2020
எங்கள் கண்களால் பார்க்க முடியாத சத்யசாயி பாபாவை எப்படி நம்புவது?
நட்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்சத்திரம் தெரியாது.
சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.
இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.
எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.
வெள்ளி, 1 மே, 2020
பரம்பொருள் சாயி பற்றி பாரதப் பிரதமர் மோடி!
பிரபஞ்சம் ஆளும் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பற்றியதான பாரதம் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திவ்யமான அனுபவங்கள்..
நீ பாரத பிரதமராவாய் என இறைவன் சத்ய சாயி மோடியிடம் சொல்லிய போது அவர் குஜராத் முதலமைச்சர் மட்டுமே.. அந்த சூழலில் அது கற்பனைக்கே எட்டாத கருத்து.. அப்படி இறைவன் வாக்குரைத்த ஆண்டு எது என பார்ப்பதற்கு முன்...
அப்படி சொல்லப்பட்ட இந்த மோடி யார்?
இன்றைய இந்தப் பிரதமர் எப்படிப்பட்டவர்? இதோ
🍁 கனடாவில் வாழும் திருமதி பிரியா சிவராஜா அவர்களின் மெய்சிலிர்க்கும் சாயி அனுபவங்கள்!
ஸ்ரீ சத்யசாயி யுகத்தில் பகிர்ந்து கொண்ட கடல் கடந்த கருணை புத்தகத்தில்(Chapter 2) இடம் பெற்ற இவர்களின் சாயி அனுபவம் பெரும் வியப்பையும் வரவேற்பையும் பெற்றது. நம் சத்ய சாயி யுகம் வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினராக இருக்கும் இவரின் அற்புதமான சாயி அனுபவங்களை, ரேடியோ சாயி நேர்காணல் வழியாக இவர் பகிர்ந்தவைகளை நாம் கேட்கும் முன்பு.. இவர் யார் என்பதை இவரே சொல்கின்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)