தலைப்பு

புதன், 19 ஜனவரி, 2022

 21 ஆண்டுகளாக ஈடற்ற சேவையாற்றும் பகவானின் பெங்களூர் மருத்துவமனை! 

மருத்துவம், கல்வி, குடிநீர், மக்களின் அத்தியாவசிய தேவைகளான இவற்றை இலவசமாக அளித்து, ஏழை மக்களின் வாழ்வில் இன்னல் நீக்கி, இன்ப ஒளி பாய்ச்சிய பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபா புட்டபர்த்தியில்  1991 ம் ஆண்டு அதி சிறப்பு  இலவச மருத்துவ மனையை முதலில் நிறுவினார்... 


பின்னர் பெங்களூரில் மற்றுமொறு சிறப்பு இலவச மருத்துவமனையை 2001ல் தனது அருட் கொடையாக  கர்நாடக மக்களுக்கு அளித்து, எண்ணற்ற ஏழை மக்களின் இன்னல்களைப் போக்கினார். 2001ம் ஆண்டு ஜனவரி 19ம் நாளன்று அந்நாளைய பாரதப் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் இந்த தேகாலயமாகிய, தேவனின் பிரேமாலயத்தைத் திறந்து வைத்தார்.

Inauguration of Super Speciality Hospital at Whitefield, Bangalore


21 ஆண்டுகள். ஈடற்ற மக்கள் பணியாக எண்ணற்ற மக்களின் பிணி தீர்க்கும்  இந்த மருத்துவமனை ஏழைகளின் துயர் தீர்க்கும் ஆலயமாகவே விளங்குகிறது. பகவானின் பொற்பாத கமலங்களுக்கு வந்தன நமஸ்காரங்களைத் தெரிவிக்கும் இந்த சமயத்தில், இங்கு பணிபுரியும் அனைவரும் பகவானால் இங்கு சேவையாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பது நெஞ்சில் ஆடும் நிதர்சனம். இந்த பிணி நீக்கும் ஆலயம், பகவான் அருளால் ஆல்போல் தழைத்தோங்கி, அருகுபோல் வேரோடி மென்மேலும் ஓங்கட்டும் என நெஞ்சார்ந்த நல்லெண்ண ஆசிகளைப் பகிர்கிறோம்.


சாய்ராம்... 1981ம் ஆண்டு இதே நாளில் பகவான் தமது அருட்கோயிலான திருக் கோயில் சுந்தரத்தை  சென்னையில் நிறுவி பக்தர்களை ஆசீர்வதித்தார். "என் வாழ்க்கையே நான் தரும் செய்தி" என்கிறார் பகவான். சேவை என்கிற சத்கர்மாவால், சேர்ந்துள்ள நமதுபூர்வ ஜென்மாவின் சுமைகளை, குறைத்து, பகவானின் அருட் பார்வையில் அடைக்கலமாவோம்.


தொகுத்தளித்தவர்: திரு குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக