தலைப்பு

வியாழன், 27 ஜனவரி, 2022

அச்சுறுத்தம் பிணிகளை வராமல் தடுக்கலாம்! -பாபா

மனம் என்ற சொல்லிருந்துதான் மனிதன் என்ற சொல் பிறந்தது என்பர். மனம் என்றபாற்கடலில், எண்ணம் என்ற வாசுகியை கயிறாக்கி கடைந்தால், எண்ணத்தின் தன்மைக்கேற்ப, அமுதமோ அல்லது விஷமோ வெளிப்படும்.மனதின் சூறாவளி எண்ணங்களின் வெளிப்பாடுதான் உடலில் தோன்றும் பிணிகள் என பகவான் பாபா உரைக்கிறார்... 


"யத் பாவம் தத் பவதி" எதை நினைக்கிறாயோ அதையே அடைவாய் என வேத வாக்கியங்கள் கூறுகின்றன. எண்ணம் என்னும் இருமுனை ஆயுதம் கொண்டு காய்கறி களையும் வெட்டலாம் அல்லது கழுத்தையும் அறுக்கலாம் அல்லவா?எண்ணத்தின் அளப்பரிய சக்தியை. பற்றி பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அருளும் உபதேசம் என்ன?

இன்றைக்கு மனித குலத்தை வாட்டும் எல்லாப் பிணிகளின் பிறப்பிடம் மனிதனின் சூறாவளி எண்ணங்கள் தான் . பிணிகளின் விபரீத வளர்ச்சியும், மனச்சாந்தி இல்லாததால் விளைவதுதான்.  மனதின் இயல்பு முக்கூறானது.. 

முதலாவதாக, அலை பாயும் மனது. இதைப் பெற்றவர்கள் மனம் எப்போதும் சாந்தியை இழந்து தறிகெட்டு ஓடும்.

இரண்டாவதாக, செயலற்ற(சூன்ய) மனது. இதைக் கொண்டவர்கள் நல்லதை ஏற்காமல், ஜடம் போன்று செயல்படுவர். இது தாமச குணம் எனப்படும்.

மூன்றாவதாக, ஒரு நிலைப்பட்ட மனது. ஒன்றிலேயே ஒன்றி இருப்பது.

எவ்வகைப்பட்ட மனநிலையில் இருந்தாலும் , தியானம் என்கிற மன ஓட்ட வேகத் தடையை உபயோகித்து மனதை நிலை நிறுத்தி சாந்தியைப் பெறலாம். பிணிகளிடமிருந்தும் தம்மைக் காத்துக் கொள்ளலாம்.

ஆதாரம்: Divine Discourse Jan 14, 1988

தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 


🌻 சாயிராம்... பகவான் சாந்தியின் மேன்மையைக் கருதி, தமது உறைவிடத்திற்கு பிரசாந்தி நிலையம் எனப் பெயர் சூட்டினார். அனைவரின் இதயத்திலும் அவர் உறைகிறார். ஆயின் அதை நாம் காணவேண்டின் ,அவர் காட்டும் வழியில் செல்ல வேண்டும். அதன் பயனாக மனச் சாந்தி பெற்று பிணிகள் அற்று, ஆனந்தமாக வாழலாம்...🌻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக