தலைப்பு

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

பாத சேவை செய்த மாணவனுக்கு பாபா நல்கிய கீதோபதேசம்!


நாம் சில நிகழ்வுகளை வெகு சுலபமாக சிறிய விஷயமென்று ஒதுக்கித் தள்ளுகிறோம். ஆனால் பாபாவோ அதில் ஒரு உபதேசச் செய்தியைப் புகட்டி, நம்மை வழி நடத்துகிறார்.. குறும் செய்தி, பெருவிளக்கம் என்பது தானே ஸ்வாமியின் உபதேச மகிமை.. 

டாக்டர் கேகி மிஸ்த்ரி அவர்களின் இந்த அனுபவத்தை கேளுங்கள். அன்றாட வாழ்வின் எளிய  நிகழ்வுகளைக் கொண்டே, பாபா எவ்வாறு அரிய தத்துவங்களை விளக்குகிறார் என்பதை அறிந்து நீங்கள் வியந்து நிற்பீர்கள்.... 


🌹கடிகாரமும் கடவுள்தான்:

அது ஒரு மதிய நேரம். மணி 2.30 .நானும், ஒரு மாணவரும் ஸ்வாமியின் அண்மையில்,  அவர் அறையில் தனித்து இருந்தோம். ஸ்வாமி, ஸ்ரீ ரங்கநாதர் போன்று ஒரு கையால் தமதுமுகத்தைத் தாங்கியவாறு , சாய்ந்து அமர்ந்திருக்க, அந்த பாக்கியசாலி மாணவன் அவரது திருப்பாத சேவையாக, கால்களை பிடித்து விட்டுக்கொண்டிருந்தார்.


அப்போது அந்த மாணவரின் கவனம், அந்த அறையில் ஷெல் பின்மேல்வைக்கப் பட்டிருந்த ஒரு கடிகாரத்தின் மீது சென்றது. கடிகாரம் கொஞ்சம் மெதுவாக ஓடி, சரியான மணியைக் காட்டாததைக் கவனித்த மாணவர், பகவானின் பாத சேவையை நிறுத்தி விட்டு  எழுந்து. கடிகாரத்தை சரி செய்துவிட்டு வந்து  மறுபடியும் பாபாவின் பாத சேவைக்காக அமர்ந்தார்.

"என்ன செய்கிறாய் நீ" என்று ஸ்வாமி அந்த மாணவனைப் பார்த்து கேட்க, அவர் கூறினார் "ஸ்வாமி அந்த கடிகாரம் மெதுவாக ஓடுகிறது. ஆகவே அதை  சரியான மணி காட்டும்படி திருத்தி வைத்தேன்." 

இதைக்கேட்ட பகவான், சற்றே நிமிர்ந்து உட்கார்ந்து என்னைப் பார்த்துக் கூறினார்.... "பார்... இந்த மாணவன் இறைவனின் பாத சேவையில் ஈடுபட்டிருந்தாலும், அவன் கவனம் கடிகாரத்தின் மீதுதான் பதிந்துள்ளது" இதைக் கேட்ட இளைஞனான அந்த மாணவன் சாதுர்யத்துடன் பதில் அளிப்பதாக நினைத்து "ஸ்வாமி  இந்த கடிகாரம் உட்பட  அனைத்தும் இறைவனின் உருவங்கள்தானே" என்று பதில் கூற, அதுவரை சாய்ந்து உட்கார்ந்திருந்த பகவான், திடீரென எழுந்து நின்று, உறுதியான குரலில் கூறினார்.

"இந்த கடிகாரமும் இறைவனின் உருதான் என நீ உன் உள் உணர்வால் அறியும் அந்த நிலையில் இருந்தால் தான், அதைக் கூறலாம். இப்போது நீ அதைக் கூறுவது உன் செயலின் தவறை மறைக்கும் ஒரு சாக்குதான்."


🌻 சாய்ராம்... எப்படிப்பட்ட  உயர்ந்த போதனையை, ஸ்வாமி எவ்வளவு எளிமையான உதாரணம் மூலம் புரியவைக்கிறார்.செய்யும் செயலில்தான் கவனம் இருக்கவேண்டும். அதைச் செவ்வனே செய்யவேண்டும் என்ற வாழ்வியல் போதனையை அவர் விளக்கிய இந்த சம்பவம் நமக்கும் ஒரு படிப்பினை அன்றோ. உதாரணமாக சமிதி பஜனைகளில் நாம் அமர்ந்து பாடும்போது , நமது மனம் பாடல்களில் கூறப்படும் தெய்வங்களின் நாம, ரூபங்களில் நிலைத்து பரவசமாகப் பாடவேண்டும், கண்ணும் கருத்தும்   அலை பாயக்கூடாது என்றுபாபாகூறியுள்ள.  உபதேசத்தை இது நினைவுறுத்துகிறது  அல்லவா? 🌻


தமிழில் தொகுத்தளித்தவர்: திரு குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 

1 கருத்து: