தலைப்பு

செவ்வாய், 6 ஜூலை, 2021

என்னிடம் திடமான விஸ்வாசத்துடன் இருங்கள் - மாணவருக்கு ஏற்பட்ட சாயி அனுபவம்!

அவதாரத்தின் முக்கிய திருப்பணியே மக்களுக்கு அவர்கள் வேண்டியவற்றை யெல்லாம் கருணையோடு கொடுத்து, மகிழ்வித்து, உயிர் தோழனாக இருந்து உதவிகள் செய்து,  இக, பர சுகங்கள் இரண்டையும் அடைய வழி வகுப்பது தான்.. 

ஒருமுறை நம் சுவாமி ஒரு மாணவனை பார்த்து 'உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்' . திடீரென்று இப்படி ஒரு கேள்வியை நம் ஸ்வாமியிடம் இருந்து அந்த மாணவன் எதிர்பார்க்கவில்லை.

எனவே பதில் சொல்லத் தெரியாமல் இருந்தான். 

இதற்கு இடையில் சுவாமி வரண்டாவில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்திருந்த வேறு ஒரு மாணவனைப் பார்த்து ஒரு பூ கொண்டு வருமாறு கூறினார். அந்த மாணவனும் உடனே வெள்ளை நிற மல்லிகைப் பூவை கொண்டு வந்து சுவாமியிடம் கொடுத்தான்.

தன்னுடைய வலது உள்ளங் கையின் நடுவில் அந்த மல்லிகைப் பூவை வைத்துகொண்டு எம்.பி.ஏ படிக்கும் அந்த மாணவனை பார்த்து இது என்ன என்று கேட்டார். மாணவரும் இது மல்லிகைப் பூ ஸ்வாமி என்று கூறினான்.

உடனே சுவாமி 'இந்த மல்லிகைப்பூ என்னவாக இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய்' என்று கேட்டார். அந்த மாணவனிடம் இதற்கு பதில் ஏதும் இல்லை. எனவே அமைதியாக நின்றான்.

உற்ற தோழனான அர்ஜூனனோ சுவாமி கிருஷ்ணராக இருக்கையில் அது காகமா? என்றாலும் கிளியா? என்றாலும் சுவாமி திருவாக்கிற்கு மறுப்பேதும் சொல்லாமல் ஆமாம் ஆமாம் என்றான்.

அவரால் மாற்ற முடியாதது என்ன இந்த உலகில் என்பதை நன்கு உணர்ந்ததால் அல்லவா சுவாமியே கீதா உபதேசம் புரிந்தார் அவனுக்கு...

இங்கே மாணவனிடம் இருந்து பதில் எதுவும் வாரததால் நம் சுவாமி தன் வலது கரத்தை மூடிக் கொண்டு அதன் மீது மும்முறை ஊதினார். பிறகு வலது கையை திறந்தார். அங்கே முன்பு இருந்த மல்லிகை பூ 'ஓம்' வடிவ டாலராக மாறி இருந்தது. அந்த டாலரை சுவாமி அந்த மாணவனுக்கே வழங்கி விட்டார்.

ஸ்வாமி அந்த மாணவணிடம் தன் கரத்தை காண்பித்து 'இந்தக் கரம் எதையும் செய்ய வல்லது. அண்ட சராசரமும் இந்த கரங்களில் தான் அடங்கியுள்ளது.' 

ஆம்!!

Energy can be transformed from one form in to another ..

ஒரே சக்தி நிலை வேறொன்றாக மாற முடியும் என்பதை விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறது.

அதை மாற்றும் பேராற்றல் சுவாமியிடம் மட்டுமே இருப்பதை ஆத்ம சாதனை புரியப் புரியவே தான் மனித இதயத்தால் உணர முடிகிறது‌.

மக்கள் உலகம் முழுவதும் நண்பர்களைத் தேடி செல்கிறார்கள்  அவர்களோடு இணைந்த பிறகு அவர்களிடம் உதவி கோருகிறார்கள்.

ஆனால் நீங்கள் என்னிடமே நட்புறவு பேண வேண்டும். என்னிடம் திடமான விசுவாசம் இருந்தால் அகில உலகத்திடமும் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும். ஒரு பொழுதும் உலகாயதப் பொருள்களின் பின்னால் செல்லாதீர்கள். என்னிடம் வாருங்கள். உலகமே உங்கள் பின்னால் வரும் என்கிறார் சுவாமி.

மனிதன் தான் அறிந்திருக்கும் எல்லா அறிவியல் ஞானங்களையும் விட நம் ஸ்வாமியின் ஆன்மீக ஞானமே முடிவானதாகும்.

பகவான் பாபாவின் கருணையாலேயே விஞ்ஞானிகள் கூட  இதைப்பற்றி அறிந்துள்ளனர்.

உண்மையில் ஆன்மீகத்தை சாதாரண மனிதனின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதி ஆக்குவதே தன் அவதாரத்தின் தலையாய பணி என்கிறார் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா.

ஆதாரம்: GOD, THE AVATAR AND THE DOUBTING THOMAS  | Prof. G.VENKATARAMAN

தமிழாக்கம்: R. வரலட்சுமி, குரோம்பேட்டை, சென்னை. 

🌻 இறைவன் சத்யசாயியின் கைகளைப் பற்றி உலகப் பற்றினை விடுவோம்.. இறைவன் சத்ய சாயியின் கால்களைப் பற்றி உயிரின் உன்னத மேன்மையைத் தொடுவோம்... இறைவனோடு கொண்ட பிடிமானமே உலகத்தோடு கூடிய பிடிப்பைப் பெயர்த்து எடுக்கும்.. பெயர்த்தெடுத்து பக்தியை முக்தியாய் மொழி பெயர்க்கும்! 🌻


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக