நல்ல கேள்வி. பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயி மிகத் தெளிவாக தன் ஆன்மீக உரையாடலில் பிரேம சாயியின் பிறப்பிடத்தையும் .. யாருக்குப் பிறக்கிறார் (ஸ்ரீமான் கஸ்தூரி சாய்ராம்) ... எந்த காலகட்டத்தில் அவதாரப் பிரகடனம் செய்வார் என்பதையும்.. பிரேம சாயி எவ்வாறு இருப்பார் என்பதன் அடையாளத்தையும் தெள்ளத் தெளிவாகக் கொடுத்திருக்கிறார்.
ஆத்ம பக்தர் ஹிஸ்லாப் அவர்களுக்கு தன் அடுத்த அவதாரமான பிரேம சாயி உருவத்தையும் மோதிரமாக வழங்கி இருக்கிறார்.
அந்தப் புகைப்படத்தையும் அனைவரும் தரிசித்திருக்கிறோம்.
ஷிர்டி சாயி தான் சத்ய சாயி ... இதே போல் ஷிர்டி சாயி தன் அடுத்த அவதாரப் புகைப்படத்தை கொடுக்காவிடினும் .. தான் எட்டு வருடம் கடந்து அவதரிப்பேன் என்று சொல்லியதையும் மனித மறதியின் காரணமாக எட்டு வயது பாலகனாக அவதரிப்பேன் என காகா சாஹிப் தீக்ஷித் அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார். அதையும் காகா சாஹிப் தனது நினைவாற்றலை வைத்து வெகு ஆண்டுகள் கழித்தே தவறான புரிதலை தனது டைரியில் எழுதியிருக்கிறார்.
இந்த மனிதக் குழப்பங்களைப் போக்கவே இரண்டாவது அவதாரத்தில் தனது அடுத்த அவதாரம் பற்றி பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி மிக தெளிவாக விளக்கி இருக்கிறார்.
எப்படி ஷிர்டி சாயியே சத்ய சாயியோ..
அப்படி சத்ய சாயியே பிரேம சாயி..
இதில் எந்த ஒரு குழப்பமும் நாம் அடைய வேண்டியதில்லை..
சத்யசாயியே பிரேம சாயி என்பதற்காக பேரிறைவன் பிரேம சாயி சத்யசாயி போலவே திருமுடி வளர்த்து.. அங்கி அணிந்து..
கை அசைத்து விபூதி வரவழைத்து என எல்லா சத்ய சாயி அங்க அசைவுகள் மற்றும் ஆன்மீகப் பணிகள் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.
அடிப்படை இறைத் தன்மை ஒன்றாயினும்
ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது..
இதை நாம் இறைவன் நரசிம்மர் காலத்திலிருந்தே நன்கு அறிந்திருக்கிறோம்.
அதே இறைவனே ஷிர்டி சாயி.. சத்ய சாயி ... பிரேம சாயி ...
பக்தர்களைக் கலந்து ஆலோசித்து தன் அவதார அடையாளங்களை தேர்ந்தெடுப்பதில்லை இறைவன். இந்த எதார்த்தத்தை பக்தர்கள் முதலில் உணர வேண்டும்.
அப்படி இறைவன் ஆலோசித்திருந்தால் ஆத்ம பக்தன் பிரகலாதனைத் தான் அவர் முதலில் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்..
அய்யய்யோ அவன் குழந்தை ஆயிற்றே சிங்க வதனம் காட்டினால் பயப்படுவானே என..
ஆனால் அந்த ரூபத்தில் வந்த போதும் கூட இறைவனை அப்படியே ஏற்றுக் கொண்டான் பிரகலாதன்.. அவனே பக்தன்..
இறைவனிடம் இரண்யனை அழித்துவிட்டாய் அல்லவா ..
நீ உன் பழைய ரூபத்திற்கு மாறினால் மட்டுமே நான் உன் பக்கத்தில் வருவேன் என பிரகலாதன் சொல்லவே இல்லை...
அதுவே சத்தியமான சரணாகத பக்தி.
ஆக இறைவன் எந்த ரூபத்தில் நம்மை ஆட்கொள்ள வேண்டும் எனும் சங்கல்பத்தை அவரே முடிவு செய்கிறார். நம் அனுமதி கேட்டு அல்ல..
சத்ய சாயியிடம் சத்தியமான பக்தி உள்ளவர்கள் பிரேம சாயியிடம் சரணடைவார்கள்.
ஆனால் அதற்குள் அவசரப்பட்டு... கலியின் கோலமாய்
ஊடகத்திலும்.. ஒரு சில காணொளியிலும் பேரிறைவன் சத்ய சாயி போலவே உடை உடுத்தி .. விபூதி கொடுத்து.. தானே பிரேம சாயி என்பதாக சிலர் பொய் சொல்லி வருவதைப் பார்க்க நேர்ந்தது... அதைப் போல ஓரிருவர் கிளம்பியும் திரிகிறார்கள்.
அவர்களைச் சுற்றியும் புற்றீசலாய் சிலர்.
பரிதாபமே ஏற்பட்டது..
Go with God Word என்ற ஒரு வாசகம் உண்டு.. பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி ஏற்கனவே தெளிவாக்கி விட்டார். பல சான்றுகள் காட்டி... பல நிரூபணங்களை தன் சத்ய வாக்கில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் நின்று நிலைத்திருப்போம்...
அப்படிப் பொய் சொல்லி ஏமாற்றுபவர்கள் மீது பரிதாபமே ஏற்படுகிறது.
விபூதியைக் காற்றில் விரல் வட்டமிட்டு தருவது தான் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி அடையாளம் எனப் பலர் நினைத்தால்.. மன்னிக்கவும் அது முற்றிலும் தவறு..
விதியையே மாற்றி அமைப்பவருக்கு
விபூதி தருவதொன்றும் பெரிய விஷயமில்லை ..
பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயி சித்தரோ.. யோகியோ.. சிலர் நினைப்பது போல் அவர் மகானோ அல்ல..
சாட்சாத் பரிபூரண இறைவன்..
அப்படி ஏமாற்றுபவர்களின் முன் அங்கே கூடி இருப்பவர்களில் ஒரே ஒருவர் எழுந்து சென்று ..
இப்போது தன் மனதில் ஓடிடும் எண்ணம் என்ன? என்று கூட கேட்க வேண்டாம்..
கையை முதுகுக்குப் பின் மறைத்து வைத்து.. என்ன மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது எனச் சொல்லச் சொல்லுங்கள் .. போதும். சாயம் வெளுத்து விடும்.
மகான்களுக்கு அது என்னவென்று தெரியும்.
மகான்களாக மலர்ந்திருப்பவர்கள் தாங்களே பிரேம சாயி எனப் பொய் சொல்லப் போவதில்லை.
பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி சூட்சும ரூபத்தில் சில மகான்களிடம் .. யோகிகளிடம்.. சில ஆத்ம பக்தர்களிடம் தொடர்பு வைத்திருக்கலாம்.. அவர்களில் யாரும் தங்களை அப்படி சொல்லிக் கொள்ளப் போவதில்லை..
பேரிறைவன் சத்யசாயியிடம் ஆழமான அனுபவம் ஏற்பட்டவர்கள் அமைதியாய்.. அகம் கனிய.. அவரின் காலடியில் அனுபூதியாய் உறைவார்கள்.
கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியில் பிறருக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் யாரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தால் கூட போதும்.. இறைவன் ஏற்றுக் கொள்வார்.
இல்லை எனில் இன்னும் கீழான பிறவிகள் எடுக்க வேண்டிவரும்..
1.எங்கும் நிறைந்திருப்பது
2.எல்லாவற்றையும் அறிந்திருப்பது
3.எதையும் மாற்றி அமைப்பது
4.எதிலும் காட்சி அளிப்பது
இதுவே இறைவனின் அடிப்படை சுபாவங்கள்..
இவையே ஷிர்டி சாயி.. சத்ய சாயி. பிரேம சாயி சுபாவங்கள்.
தற்போது தானே பிரேம சாயி எனப் பொய் சொல்லித் திரிபவர்களிடம்
இந்த மூன்று சுபாவங்களில் ஏதேனும் ஒன்று இருக்கிறதா எனப் பாருங்கள்.
யார் எதைச் சொன்னாலும் நம்பாதீர்கள் .
தீர அணுகுங்கள்.
மரத்துப் போகாதீர்கள்.
உணர்ச்சிவசப்படாதீர்கள்.
பக்தர்கள் திசை திரும்பாமல் இருப்பதற்கே இந்தச் சிறு பதிவு.
பேரிறைவன் பிரேம சாயி அவதாரப் பிரகடனம் செய்யப்போவது உறுதி. விரைவில்..
அதற்குள் வேறு எங்கெங்கேயோ வழிமாறி
இவர் தான் பிரேம சாயி.. அவர் தான் பிரேம சாயி எனக் குழம்பிப் போகாதீர்கள்.
அடுத்தப் பிறவியும் நமக்கு இதே மனிதப் பிறவியா.. இதே பக்தி தோன்றுமா?
நாம் அறிந்திருக்கவில்லை.
யாரும் பிறவியை வீணாக்க வேண்டாம்.
புலி வருகிறது கதையாகிவிடக் கூடாது.
சத்தியமான பேரிறைவன் பிரேம சாயியே அவதாரப் பிரகடனம் செய்கையில்..
பொய்களை நம்பி அங்கே பொய்கை எழும் என தாகத்தோடு காத்திருப்பது வீண் அல்லவா!
பிரிந்த பால் பசுவின் காம்பு புகுமா?
திரிந்த பால் எல்லாமே திரட்டிப் பால் ஆகுமா?
சிந்தித்து செயல்பட வேண்டும்.
நம்பிக்கை.. பொறுமை
இரண்டும் அவசியம் என்று நம் இறைவன் தானே நமக்கு சொல்லியது.
அதற்குள் ஏன் இத்தனை அவசரம்?
மனித உயிர் பிறப்பதற்கே பத்து மாதம் தேவைப்படுகிறது..
அவதாரப் பிரகடனம் என்ன அவ்வளவு சாதாரண விஷயமா?
பேருந்து நிறுத்தத்தில் நிற்கிறோம்.
முதலில் எந்த பேருந்து வருகிறதோ அதில் ஏறுவீர்களா இல்லை
நீங்கள் எங்கே செல்ல வேண்டுமோ அதற்கான பேருந்து வரும்போது அதில் ஏறுவீர்களா ?
சிந்தித்து செயல்படுவோம்...
ஆன்மீக வழி என்பது மிகவும் விழிப்புணர்வோடு.. சுயநலமின்றி.. பற்றின்றி .. கோப தாபமின்றி ... ஏக்கமின்றி ஏறப்படுகிற மலையேற்றம்.
விரைவில் பிரேம ஜோதியின் தரிசனம் கிடைக்கும்.
உச்சியில் ஏறி பக்திக் கொடி ஏற்றுவோம்!
பக்தியுடன்
வைரபாரதி
I am waiting for the time when 'Nalin Sedra' from srilanka will land up in puttaparthi
பதிலளிநீக்குour beloved SAI predicted it as The Rebirth of Vivekananda.