சாய்ராம் பிருந்தாவன் கல்லூரிவளாக மாணவர்கள் சரியாக படிப்பதில்லை ஒழுங்கீனமாக உள்ளார்கள் என சுவாமி அவர்கள் மேல் கோபம் கொண்டார். பிருந்தாவன் சென்று அவர்களை பார்ப்பதே நிறுத்திக்கொண்டார். அவர்கள் புட்டப்பர்த்தி தரிசனம் வருவதையும் தடை செய்துவிட்டார்.
வேதனையுற்ற மாணவர்கள் கடிதங்கள் வாயிலாக சுவாமிக்கு தங்கள் மன்னிப்பை கோரினார் பஜன் பாடி சுவாமியிடம் பிரார்த்தனை செய்தனர். முதல்வர் மூலமாகவும் கடிதங்கள் கொடுத்தனுப்பினர். பலனில்லை விநாயகர் சதுர்த்தி அன்று புட்டபர்த்தியில் பிரைமரி, ஹையர் செகண்டரி, கல்லூரி மாணவர்கள், ஈஸ்வராம்பா பள்ளி மாணவர்கள், பிருந்தாவன் கல்லூரி வளாக மாணவர்கள் விநாயகர் சிலைகளை அழகான தேரில் வடிவமைத்து சுவாமியிடம் எடுத்து வந்து ஆசிகளை பெறுவார்கள் பிருந்தாவன் மாணவர்களுக்கு அதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க பகவான் பிருந்தாவன் மாணவர்கள் அவர்களது விநாயகர் தேரை சுவாமியிடம் காட்டிவிட்டு எடுத்துச் செல்ல மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
சுவாமி தேர் அருகே வந்து எந்த விதமான ஆசீர்வாதமும் வழங்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. மனமுடைந்து போன மாணவர்கள் தங்களுக்குள் கூடி ஆலோசனை செய்தனர். சுவாமி தூரத்திலிருந்து விநாயகர் தேரை பார்க்கும்போது சுவாமியின் அன்பை மீண்டும் பெற்றுவிட வேண்டும் என தீர்மானித்தனர். அனைவரும் கூடி ஒரு அழகான பாடலை எழுதினர். அதற்கு இனிமையாக இசையமைத்து அந்த பாடலை மனனம் செய்து கொண்டனர்.
விநாயகர் சதுர்த்தி அன்று பிருந்தாவன் கல்லூரி மாணவர்கள் விநாயகர் தேரை சுவாமியின் பார்வைக்கு வைத்தனர். சுவாமி தூரத்திலிருந்து பார்ப்பதைக் கண்டதும் அப்படியே மண்டியிட்டு மனனம் செய்த பாடலை உருக்கமாகப் பாடினார் பாடலின் வரிகளை கேட்ட பகவான் கண்களில் கண்ணீர் அரும்பியது. தனது இரு கைகளையும் விரித்து அவர்களை அன்புடன் அழைத்தார் அவ்வளவுதான் அத்தனை மாணவர்களும் சுவாமியை சூழ்ந்துகொண்டு அவர் பாதத்திலும் கைகளிலும் தஞ்சமடைந்தனர்.
Humko Tumse Pyar Kitna (TAMIL VERSION)
-ஆக்கம்: S. Ramesh Ex convenor Salem samithi.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக