தலைப்பு

திங்கள், 12 ஜூலை, 2021

சேவை ஒன்றே சாயியை மகிழ்விக்கும்!

தியாகம் என்பது இதய யாகம் ... தியாகம் என்பது ஆன்ம ராகம்... அது வளர வளர இதயம் பிரகாசிக்கிறது... வாழ்வே சாயி எனும் பாடல் வரியைச் சுமக்கும் தெய்வீக இசையாகிவிடுகிறது.. அத்தகைய தியாகத்தின் சேய்களே சேவைகள் என்பதை மிக எளிமையாக எடுத்துரைக்கிறார் இதோ ஸ்ரீ சத்ய சாயி...

"ஒவ்வொரு கிராமத்துக்கும் உங்களோடு நானும் வந்து, எவ்வித ஜாதி, மத, இன, வர்க்க வேறுபாடுகளும் இல்லாமல் சேவை செய்வேன். இன்றிலிருந்தே சத்ய சாயி நிறுவனம் ஒவ்வொரு கிராமத்திலும் சென்று கல்வி மற்றும் மருத்துவ வசதிகளைக் கொடுக்கும் ஊரக முன்னேற்றப் பணியைச் செய்யவேண்டும் என விரும்புகிறேன். தியானமும் தவமும் தனிநபருக்குப் பயனளிக்கும். ஆனால், உலகம் தழுவிய நன்மை என்பது தியாகத்தினால் சாதிக்கப்படும். "த்யாகேனைகே அம்ருதத்வ மானஸு" (தியாகத்தினால் மட்டுமே இறவாமை அடையப்படும்) என்று உபநிஷதங்கள் கூறுகின்றன...



...இன்றைக்கு 2,55,00,000 குழந்தைகள் நமது நாட்டில் இருக்கின்றனர். அதில் நாற்பது சதவிகிதம் பேர் பிச்சை எடுக்கிறார்கள். இத்தகைய துன்பநிலை நம்மை சுற்றிய சமுதாயத்தில் இருக்கும்போது நாம் ஏதும் செய்யாமல் இருப்பது நல்லதல்ல. நாம் ஜபம் மற்றும் சாதனைகளை விட்டுவிட்டு, சேவை மற்றும் தியாகத்தின் மூலமாக இத்தகைய மக்களை உயர்த்த வேண்டும்...

~பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா சாயி பாபா, 28.03.1979.


ஆதாரம்: தமிழ் சனாதன சாரதி, மே 2019, பக்கம் 14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக