தலைப்பு

வியாழன், 8 ஜூலை, 2021

பக்தையின் தந்தையின் முற்றிய கேன்சரை விபூதியால் கேன்சல் செய்த வினோத வைத்தியர் பாபா!

நாம் பிரார்த்திக்கும்  தெய்வங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் பிரார்த்தனைகள் சென்று அடைவது, பாபா என்னும் கலியுக தெய்வத்திடம் தான். அவரே சர்வதேவதா அதீத ஸரூபன். சர்வ சக்தியின் ஒரே இருப்பிடம். சர்வாந்தர்யாமி... 


ரீட்டா புரூஸ், ராபர்ட் புரூஸ் தம்பதியினர் பாபாவின் பரம பக்தர்கள். பாபாவின் கல்வி மற்றும் ஆன்மீகத் தொண்டுகள் பலவற்றை தொடர்ந்து செய்தவர்கள். பாபாவைப் பற்றி ரீட்டா புரூஸ் எழுதிய ஐந்து புத்தகங்களுக்கும், பாபாவே தலைப்பு சூட்டி ஆசீர்வதித்துள்ளார்.


பல ஆண்டுகளாக எனது குடும்பத்தை, குழந்ததைகளை அரவணைத்து காப்பாற்றிய பாபா, என் தந்தையையும் கேன்சரிலிருந்து  காப்பாற்றனார். 

1984 அக்டோபர் மாதம் அந்த பேரிடியான செய்தியால் நாங்கள் நிலை குலைந்து போனோம். வயது முதிர்ந்த என் தந்தைக்கு பெருங்குடல் மற்றும் கணையத்தில் புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது. 

உடனடி அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டோம். அவரது 50வது திருமண நாள் நெருங்கிவரும் சமயம் அது. அவ்விழாவைக் கொண்டாடியபின்  அறுவைவைச் சிகிச்சையை நடத்த திட்டமிட்டோம். மிக்க உடல் உபாதையுடனிருந்தாலும் எங்கள் தகப்பனார் அதில் பங்கேற்றார். இதற்கு சிறிது நாட்களுக்குபின், குடல் அடைப்பின் காரணமாக அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. அவரின் கேன்சர் வயிறு பகுதிகளில் பரவி அபாய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவர் பிழைப்பது அரிது என்றும் மருத்துவர்கள் கூறினர்.


🌹பாபா தான் ஒரே வழி:

என் தந்தை மிக மோசமாக இளைத்து விட, தாயாரும் மன உளைச்சலினால் உடல் மெலிந்து வருந்த, நான் செய்வதறியாது திகைத்தேன். என் தந்தை தமது மத நம்பிக்கையில் மிகுந்த பிடிப்புள்ள ஒரு கிறுஸ்தவர். அவர் ஏசு கிறுஸ்துவைத் தவிர வேறு யாரையும் தெய்வமாக வழிபட மறுப்பவர். 

அவரிடம் பாபா பற்றியும், அவர் மனித உருவிலுள்ள தெய்வம் என்றும் கூறி நம்ப வைக்க இயலாது. பாபாவைப் பற்றி பேசினால்கூட, ஒருவித பயம் அவர் கண்ணில் தென்படும். இந்நிலையில் என் பெற்றோர் திருமண ஆண்டு விழாவுக்கு மறுநாள், எங்கள் மகன் கிரைக், பகவான்  பாபா தரிசனம் காண பர்த்தி சென்றான். பகவானின் அருளால் தரிசன கூடத்தில் அவனுக்கு முதல் வரிசையில் இடம் கிடைத்தது. இதோ வந்துவிட்டார் பாபா. என் தகப்பனாரின் உடல்நிலை குறித்த கடிதத்தை பாபாவிடம் தர முயற்சித்தான் எனது மகன். பாபா அதை வாங்கவில்லை. ஆனால் அவனுக்கு பாத நமஸ்காரம் கொடுத்து விபூதியும் சிருஷ்டித்து அளித்தார்.

பகவான் சித்தம் யார் அறிவார். பாபாவின் லீலா விபூதி எங்களுக்கு அனுப்பப்பட்டது. என் தகப்பனாருக்கு அதை பிரசாதமாக கொடுத்தோம். அவரும் பிழைத்தால் போதும் என்ற நிலையில் இருந்ததால் தடை சொல்லாமல் விபூதியை தன் வாயிலிட்டு உண்டார். அதன் பின் அவரது உடல்எடை அதிசயக்கதக்க விதமாக கூடியது.


🌹பர்த்திக்கு வா என்ற பாசமிகு அழைப்பு:

1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம். ஒருநாள் என் தியானத்தின் போது பாபா குரல் கேட்டது. 


"நீயும்.. ராபர்ட்டும் பர்த்திக்கு கிளம்பி வாருங்கள்" நான் கூறினேன் பாபா கேன்சரால் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் என் தகப்பனாரை விட்டுவிட்டு எப்படி வருவது? பாபா கூறினார் "உன் தகப்பனாரை நான் பார்த்துக் கொள்கிறேன்" பாபாவின்  இந்த உத்தரவுக்கு கட்டுப்பட்டு பிரயாண ஏற்பாடுகள் செய்தோம். மார்ச் 1ந்தேதி செல்ல டிக்கெட் பதிவு செய்தோம். இதற்கிடையில் பிப்ரவரியில், எங்களது டாக்டர் எதிர்பாராத விதமாக அவராகவே முன்வந்து, என் தந்தைக்கு மற்றுமொரு அறுவை சிகிச்சை மேற்கோண்டார். அந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, என் தகப்பனாரின் உடல்நிலை வேகமாகத் தேறத் துவங்கியது. பிறகு நடத்தப்பட்ட கேன்சர் பரிசோதனைகளில் அவருக்கு அக் கொடிய பிணியின் தடயமே தென்படவில்லை. இது மருத்துவர்களை பெரு வியப்பில் ஆழ்த்தியது

எங்கள் பர்த்தி யாத்திரைக்கு பலநாட்கள் முன்பே மருத்துவமனைமில்லிருந்து என் தந்தையை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டோம். எனது  76 வயது தந்தை மரணப்பிடியில் இருந்து மீண்டது மட்டுமல்லாமல், சில மாதங்களில் ஒரு இளைஞனைப்போல் சுறுசுறுப்பாக கோல்ப் விளையாட்டில் தீவிரமாக ஈடுபடலானார். எல்லாம் பாபாவின்  பெருங்கருணையால் அன்றோ.

பிரசாந்தியில் பாபா எங்களுக்கு பேட்டி அளித்தார். கண்களில் நீர் பொங்க. எனது பெற்றோர் படத்தை கையில் பிடித்தபடி நான் கேட்டேன். "பாபா நீங்கள் தானே என் தந்தையை கேன்சரிலிருந்து மீட்டு உயிரளித்தீர்"ஆதூரமாக என் தோள்களை தட்டிய பாபா கூறினார் "ஆம். நான்தான்". பாபாவைத் தவிர வேறு யார் இந்த அற்புதத்தை செய்திருக்க முடியும். நம்மை படைத்துக் காக்கும் பரம்பொருள் அவரல்லவா?

ஆதாரம்: Vision of Sai: Book 1 -  Rita Bruce / Red Wheel/Weiser (11 April 1995) 

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 


🌻மாறாதவற்றை மாற்றுபவர் எவரோ, குணப் படுத்த இயலாத பிணிகளை குணப்படுத்துவர் எவரோ, அன்பு சுரக்காத மனிதரிடத்தும் அன்பைச் சொரிபவர் எவரோ, அவர் இறைவனை அன்றி வேறுயார். இறை அவதார பாபாவின் பொன்னடி பணிவோம். பயமின்றி வாழ்வோம். 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக