தலைப்பு

ஞாயிறு, 11 ஜூலை, 2021

பிரேம சாயிக்கு ஸ்டோர் கீப்பராக இருக்கப்போகும் சாயி பக்தர்!


🇬🇧 மூன்று அவதாரங்களுக்கும் ஒரு பக்தர் சேவை ஆற்றுவது என்பது சாதாரண செய்கை இல்லை.. பாபாவின் பரிபூரண கருணையும் அந்தந்த ஆன்மாவின் உன்னத பூர்வ பிறவிகளுமே காரணமாகிறது... சுவாமி பாதசேவை என்பது வைகுண்ட இன்பத்தை விட பேரின்பமானது... அதனை பெற்றிருக்கும் ஒரு புனித பக்தரைப் பற்றி அரிய பதிவு இதோ...

UKயில் பர்மிங்காமில் தேசீய காட்சியகத்தில் லக்ஷார்ச்சனை எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியைக் கண்ட திரு.வட்காமாவும் அவரது துணைவியாரும், அன்று முதல் "ஓம் ஸ்ரீ ஸத்ய ஸாயி க்ருஷ்ணாய நம:" என்று தங்கள் ஜப மாலையை உபயோகித்து, ஜபிக்க ஆரம்பித்தனர். சூப்பர் மார்கெட் வரிசைகளின் மேற்பார்வையாளர், திரு.வட்காமாவை அணுகி, ஒரு பெரிய தொழில் ஒப்பபந்தத்திற்கு அழைத்தார்.


அவர்களுடைய உணவுப்பொருட்களை பொட்டலங்களாக Packing செய்வதற்குத் தேவையான பிளாஸ்டிக் கிண்ணங்கள் பெரிய அளவில் செய்துதர ஆர்டர் கொடுத்தார். எல்லா வசதிகளும் செய்து தருவதாக கூறினார். திரு.வட்காமாவின் நெடு நாளைய கனவு நனவானது போல் உணர்ந்தார். ஸ்வாமியின் அன்புதான் தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என உணர்ந்தார்!

🌹வாமனனாய் வந்து வண்டி ஓட்டிய வள்ளல்:

தனது சிறிய தொழிற்சாலையின் சமீபமாக ஒரு பெரிய கிடங்கு (warehouse) வாங்கிப் போட்டார். வட்காமா 3 பெரிய மிஷின்களை ஃபாக்டரியிலிருந்து warehouse ற்கு மாற்றியாக வேண்டும். அவர் அவற்றை வாங்கியிருந்தார். 4 நாட்களுக்குள் அவற்றை மாற்றிடத்திற்கு கொண்டு வராவிட்டால் முழு மாத வாடகையும் செலுத்த வேண்டிவரும். 3 மிஷின்களும் 7 டன், 5டன், 3 டன் எடையுடையவை. 


இவற்றை நகர்த்தி கொண்டுவர ஒரு சிறப்பான அனுபவம் பெற்ற நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்தார். கடைசி நிமிடத்தில் அந்த கனமான இயந்திரத்தை நகர்த்தும் மிஷின் பழுதடைந்து விட்டது. வட்காமா மற்ற நிறுவனங்களின் உதவியை நாடியும் பயன் இல்லை! மனம் தளர்ந்த வட்காமா இறைவனை உதவிக்கு அழைத்து வேண்டினார்.

மறுநாள் காலையில் (ஞாயிற்றுக்கிழமை)  குட்டையான மனிதர் ஒருவர் வந்து வட்காமாவிற்கு, மிஷின்களை நகர்த்த உதவி வேண்டுமா என கேட்டார்!! வட்காமா ஆச்சரியமடைந்து அவருக்கு எப்படி தெரியும் என கேட்டார். அம்மனிதர் தனக்கு எப்படியோ தெரியும் என்றும், எங்கிருந்து எங்கு மிஷின்களை நகர்த்தி கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டார். வட்காமாவும் விரிவாக விளக்கினார்.


அதிக உயரம் கூட இல்லாத அம்மனிதர் அனாயாசமாக அந்த மிஷின்களை பளு தூக்கும் வண்டியில் ஏற்றியது (hoist) ஆச்சரியமாக இருந்தது. 3 மிஷின்களையும் கச்சிதமாக ஏற்றி வட்காமா சொன்ன இடத்தில் கொண்டு வைத்து விட்டார். வட்காமா 70 பவுன்டுகள் கொடுத்து, மீதி தொகைக்கு காசோலை (Cheque) தருவதாகச் சொன்னார். 5 டாலர் நோட் ஒன்றை கொடுத்து பானம் அருந்த வைத்துக் கொள்ளுமாறு கூறினார். ஆனால் அவர் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி சென்றுவிட்டார். தனது வண்டியின் ஒரு சக்கரத்தையும் டயரையும் விட்டுச் சென்றுவிட்டார்.


உடனே தன் மகன் நீரஜ் என்பவனை அனுப்பி அந்த மனிதரை திரும்ப அழைத்து வருமாறு கூறினார். ஆனால் எங்கு தேடியும் அவர் இல்லை. அவ்வளவு கனமான தனது இயந்திரத்தோடு அதற்குள் எப்படி சென்றிருக்க முடியும்? தனது தொழில் பட்டறையில் வேலை தொடங்குமுன் லக்ஷார்ச்சனை நடத்த வட்காமா விரும்பினார். அதற்காக ஷீரடி ஸாயி, பர்த்தி ஸாயி ஃபோட்டோக்கள் கொண்டு வந்திருந்தனர். அதன் மீது தூசு படிந்திருப்பதாக நினைத்து வட்காமா சுத்தம் செய்ய முயன்றார். ஆனால் அது விபூதி பிரசாதம் என்றனர். தொடர்ந்து வரலாயிற்று! அது ஸ்வாமியின் அன்பு!


பிறகு வட்காமா ப்ரஸாந்தி நிலையம் சென்று ஸ்வாமி தர்சனம் செய்ய முயன்றார். ஆனால் ஸ்வாமி கண்டு கொள்ளவில்லை! ஏமாற்றத்துடன் திரும்பி, பெங்களூர் சென்று அங்கிருந்து UK செல்ல முடிவு செய்தார். ஸ்வாமியும் ஒயிட் ஃபீல்ட் சென்றுவிட்டார். டாக்ஸி டிரைவர், ஒயிட் ஃபீல்டில் கூட ஸ்வாமியை தரிசனம் செய்யலாம் என்றும் கூறினார். காலை நேரம் தரிசனத்தின் போது பேச முயற்சிக்கலாம் என்றும், அதன் பிறகு தான் சரியான நேரத்திற்கு ஏர்போர்ட்டில் கொண்டு விடுவதாகவும் கூறினார். காலையில் பாபா தரிசனம் கொடுத்தார் ஆனால் இவரைப் பார்க்கவே இல்லை. வட்காமா இன்னும் ஒரு வாய்ப்பு எடுத்து முயற்சிக்க விரும்பி மறுநாள் வந்தார். ஸ்வாமி தன்னை கடந்து செல்லும்பொழுது," டாக்டர் காதியா (Dr.Gadhia) விடமிருந்து ஸ்வாமிக்கு ஒரு கடிதம் கொண்டு வந்திருப்பதாகச் சற்று உரக்கச் சொன்னார். ஸ்வாமி திரும்பி வந்து கடிதத்தை மட்டும் வாங்கி கொண்டார். வட்காமா, நேர்காணலுக்கு அனுமதி கேட்டார். ஸ்வாமியோ "இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து" என்று கூறிவிட்டார். வட்காமாவின் அருகில் இருந்தவர் வட்காமா அவ்வாறு கேட்டு இருக்கக் கூடாது. ஸ்வாமிக்கு தெரியும் எப்பொழுது நேர்காணலுக்கு அழைக்க வேண்டும் என்று" எனக் கூறினார். வட்காமா, சத்தமாக என்ன தெரியும் அவருக்கு?" என்றார். ஸ்வாமி மீண்டும் அருகே வந்து "ஸ்வாமிக்கு எல்லாம் தெரியும். உன்னுடைய மிஷின்களை ஸ்வாமி தான் நகர்த்தி கொண்டு உரிய இடத்தில் சேர்ப்பித்தார். அதற்கு பணம் கூட வாங்கவில்லை. கொடுத்த பணத்தை மிஷினின் உட்புறம் இரு மரத்துண்டுகளிடையே வைத்துவிட்டு வந்தாயிற்று. சென்று உறுதி செய்துகொள்" என்றார். வட்காமாவிற்கு கண்களில் நீர் நிறைந்துவிட்டது. அதிர்ச்சியாகிவிட்டார். லண்டனில் இருக்கும் தன் பெண்ணோடு போனில் பேசினார். அவளும் மிஷினுக்குள் விபூதியால் மூடப்பட்டு 75 பவுண்டுகள் வைக்கப் பட்டிருப்பதைக் கூறினார். அந்த நோட்டுகள் எண்ணெய் கரை படிந்து இருந்தன. ஏனெனில் அந்த தொகையை வட்காமாஅந்த மனிதரிடம் கொடுக்கும் போது, தனது கைகளில் எண்ணெய் பட்டிருந்ததையும் நினைவு கொண்டார்!

திரு.வட்காமா தன் தெய்வத்துடன்... 


🌹பிரேம சாயிக்கு ஸ்டோர் கீப்பர்:

சொன்னபடி இரண்டு வருடங்கள் கழித்து ஸ்வாமி ப்ரஸாந்திக்கு வரும்படி செய்தி அனுப்பினார். 3 நாட்களில் பெங்களூர் விமான நிலையம் வந்தடைந்த வட்காமாவை, இவர் பெயர் தாங்கிய அட்டையோடு ஒருவர் வரவேற்றார். வட்காமாவை தனது விருந்தாளியாக ஸ்வாமி கருதுவதாகவும், இவரை ப்ரஸாந்திக்கு அழைத்து வருமாறு தன்னை அனுப்பியதாகவும் சொன்னார்! மறுநாள் காலை, சிற்றுண்டி நேரத்தில் வட்காமாவை பார்த்து, "நீ வருங்காலத்தில் நிறைய சேவை செய்ய வேண்டும். இப்போதைக்கு பெங்களூரில் மறு சுழற்சி பட்டறைகள் 3 தான் உள்ளன. எல்லா விழாக்களுக்கும் கப்புகள், தேவைப்படுகின்றன என்றார். ஸ்வாமி அருகில் உள்ளவர்களிடம் "இந்த வட்காமா ஷீரடி ஸாயி காலத்தில் பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தார். இப்பொழுது பாத்திரங்கள் உற்பத்தி செய்கிறார். அடுத்த பிறவியில் ப்ரேம ஸாயிக்கு ஸ்டோர் கீப்பராக இருப்பார்" என்றார்.

என்ன ஒரு ரகசிய வெளியீடு! திரு.வட்காமா அவர்கள் உணர்ச்சி பொங்க கூறினார், "நான் அடுத்த பிறவியில் டாக்டர்.காதியாவுடன் இருந்து ப்ரேம ஸாயிக்கு சேவை செய்வேன்" என்றார்.

ஆதாரம்: Sai Smaran P 304
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

1 கருத்து: